ஆன்மாவின் இயல்பு என்ன?
சத்து என்றால் என்ன?
என்றும் ஒரே தன்மையுடையதாய் ; நித்தியமானதாய்(என்றும் உள்ளதாய்) இருக்கும் தன்மை சத்து எனப்படும்.
சித்து என்றால் என்ன?
தானே அறியும்;முற்றும் உணரும்;ஒருங்கே அறியும்,இடைவிடாது அறியும்; எதனிலும் அழுந்தாது அறியும் இயல்பு. இது சித்து எனப்படும். இது இறைவனின் இயல்பாகும்.
அசித்து என்றால் என்ன?
அறியும் ஆற்றலுமில்லை. அறிவித்தால் அறியும் ஆற்றலுமில்லை. ஆக; சடப்பொருள்!
உதாரணத்துக்கு, மாணவன் ஒருவன் ஆசிரியரின் துணையின்றி கற்றுக்கொள்ளும் ஆற்றலுடையவன் என்றால், ஆசிரியரின் தேவை அவனுக்கு இருக்காது. ஆசிரியரின் தேவையில்லாதவனுக்கு ஆசிரியர்மேல் அன்பும் மரியாதையும் எங்கனம் வரும்?
ஆன்மாவின் இயல்புகள் சதசத்தும், சிதசித்தும்
ஆகும்.
சத்து என்றால் என்ன?
என்றும் ஒரே தன்மையுடையதாய் ; நித்தியமானதாய்(என்றும் உள்ளதாய்) இருக்கும் தன்மை சத்து எனப்படும்.
அசத்து என்றால் என்ன?
என்றும் ஒரே தன்மையற்றதாகவும் நித்தியமற்றதாகவும் இருக்கும் தன்மை.

இறைவன் சத்து தன்மையுடையவர்.
ஆனால் ஆன்மா?
ஆனால் ஆன்மா?
ஆன்மாவும் என்றும் நித்தியமானது. எனவே சத்து என்று சொல்ல எத்தனிக்கலாம்.
ஆனால் ஆன்மா சத்து இல்லை.ஏனெனில் என்றும் ஒரே தன்மையில் ஆன்மா இருப்பதில்லை. பிறப்பெதுவும்
எடுக்கமுதல், கேவலநிலையில் ஆணவமலத்துடன் இணைந்திருந்தும், பெத்தநிலையில்(பிறப்புக்களில் உழலும் நிலையில்) கன்மம்,மாயை என்னும் ஏனைய மலங்களுடன் இணைந்து, உடம்பின் இயல்பையே தன்னியல்பாகக் கருதியும், முக்தி
நிலையில் சிவானந்தத்தில் மூழ்கியும் என்று ஆன்மாவின் தன்மை பலவாறு மாறுபடும்.
என்றும் நித்தியமாய்(என்றும் உள்ளதாய்) இருப்பதால் ஆன்மாவை அசத்து என்றும் கூறமுடியாது.

எனவே ஆன்மா சதசத்து எனப்படும். அதாவது
ஆன்மா சத்தும் இல்லை. அசத்தும் இல்லை. இரண்டினிலும் மாறுபட்ட தன்மையுடையது.
சித்து என்றால் என்ன?
தானே அறியும்;முற்றும் உணரும்;ஒருங்கே அறியும்,இடைவிடாது அறியும்; எதனிலும் அழுந்தாது அறியும் இயல்பு. இது சித்து எனப்படும். இது இறைவனின் இயல்பாகும்.
அசித்து என்றால் என்ன?
அறியும் ஆற்றலுமில்லை. அறிவித்தால் அறியும் ஆற்றலுமில்லை. ஆக; சடப்பொருள்!
அப்படியானால் ஆன்மா சித்துத்தன்மையுடையதா?
தானே அறியும் ஆற்றல் ஆன்மாவுக்கு இல்லை.
எனவே, ஆன்மா சித்து இல்லை.
அப்படியானால் ஆன்மா அசித்துத்தன்மையுடையதா?
இறைவனால் அறிவிக்க அறிந்துகொள்ளும் இயல்புடையது.

ஆன்மா அறிவினைப் பெறுவதற்கு, பெத்தநிலையில்
கருவி,கரணங்கள் அவசியமாகின்றது. அதாவது ஐம்பொறிகள்,ஐம்பூதங்கள் என்பனவற்றின் உதவியினாலேயே அறிவினைப்
பெறுகின்றது.அதுவும் சிவப்பரம்பொருள் ஆன்மாவோடு ஒன்றாய்,வேறாய்,உடனாய் சுத்தாத்வைதமாக இருப்பதாலேயே சாத்தியமாகின்றது.
முக்திநிலையிலும் ஆன்மா சிவானந்தத்தை அனுபவிப்பதற்கு சிவபெருமானின் திருவருட்கருணையே கருவியாக தொழிற்பட்டு, ஆன்மாவுக்கு சிவானந்தத்தை நுகர வழிசமைக்கின்றது.
முக்திநிலையிலும் ஆன்மா சிவானந்தத்தை அனுபவிப்பதற்கு சிவபெருமானின் திருவருட்கருணையே கருவியாக தொழிற்பட்டு, ஆன்மாவுக்கு சிவானந்தத்தை நுகர வழிசமைக்கின்றது.
உதாரணத்துக்கு, மாணவன் ஒருவன் ஆசிரியரின் துணையின்றி கற்றுக்கொள்ளும் ஆற்றலுடையவன் என்றால், ஆசிரியரின் தேவை அவனுக்கு இருக்காது. ஆசிரியரின் தேவையில்லாதவனுக்கு ஆசிரியர்மேல் அன்பும் மரியாதையும் எங்கனம் வரும்?
ஆன்மாவாலும் தன்னுடைய ஆற்றலால் சிந்திக்க,செயற்பட முடியுமென்றால் "இறைவன் என்பவன் ஆன்மாவுக்கு
எதற்கு?" என்ற கேள்வி
எழுந்துவிடுகின்றது. ஆன்மாவுக்கு என்னால் முடியும் என்ற ஆணவம் மேலும் வளர்ந்து கொள்ளும்.
பிரகலாதன் கதையில் வரும் இரண்யனின் கதை இதையே விளக்குகின்றது.
ஆபிரகாமிய சமயங்கள் சொல்வதுபோல், இறைவனிடம் இருந்து எம்மை சாத்தான்
பிரித்தெடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளமுடியுமென்றால் இறைவனின் ஆளுமை
கேள்விக்குறியாகிவிடுகின்றதெல்லவா? ஆபிரமாகியசமயங்கள்
சொல்லும் சாத்தான் என்பது, கடவுளின்
இயலாமையையே விளக்குகின்றன. சாத்தான் என்பவன் கடவுளைமீறி சிலரைத் தனது கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருப்பான் என்றால், கடவுளின்
இயலாமை அங்கு வெளிச்சமாகின்றது.
அதாவது இறைவனின் இச்சைக்கு எதிராக இயங்கும் ஆற்றலுடைய சாத்தான் ஒருவன் உள்ளான் என்னும் ஆபிரகாமியசமயங்களின் தத்துவங்கள் கடவுளின் ஆற்றலை கேள்விக்குறியாக்குகின்றன.
இதில் என்ன வேடிக்கை என்றால், ஆபிரகாமியமதத்தவர்களின் சம்பாசணையில் சாத்தானின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள்தான் சைவர்களும் ஏனைய பாரதவேதநெறிச் சமயத்தவர்களும் என்ற காழ்ப்புணர்வுக் கதைகளைத் தாராளமாகக் காணலாம்!
ஆளுமையற்ற கடவுளுக்கு அடிமையாவதிலும் ஆளுமைகொண்ட சாத்தானுக்கு அடிமையாவது மேல் என்று நம்மவர்கள் சிலர் என்னிடம் தமது உள்ளக்கிடக்கையை முசுப்பாத்திப்பாணியில் தெரிவித்திருந்தனர். அதுசரி ஆளுமையற்ற இறைவன் என்னும்போது ஒரே முசுப்பாத்திதான்!!!!

ஆன்மா அசையவேண்டுமென்றாலும் சரி, சிந்திக்க வேண்டுமென்றாலும் சரி, சடமாகிய மலங்களும் அவைசார்ந்த வினைகளும்
இயங்க வேண்டுமாயின் சரி, அண்ட
சராசரங்களிலுமுள்ள அணுக்கள் ஒவ்வொன்றும் அசைய வேண்டுமென்றாலும் சரி, நன்மையோ தீமையோ அத்தனையும் நடைபெற
வேண்டுமாயினும் சரி, சிவபெருமானின்
தயவு தேவையாகின்றது. அவை அனைத்தோடும் இறைவன் ஒன்றாய்,வேறாய்,உடனாய்
நின்று அவற்றை இயக்குவிக்கின்றான். ஆக; அவனின்றி
அணுவும் அசையாது என்கின்றது சைவசித்தாந்தம்.
இறைவன் ஆன்மாவுடன் ஒன்றாய்,வேறாய்,உடனாய் இரண்டன்மையாக (சுத்தாத்வைதமாக) விளங்கி ஆன்மா அறிவுபெற வழிவகுக்கின்றான்.

"அவனருளாலே அவன்றாள் வணங்கி"
– சிவபுராணம் (திருவாசகம்)
சிவம் இல்லாவிட்டால் எல்லாம் சவம் என்று சும்மாவா சொன்னார்கள் நம் சான்றோர்?
அறிவித்தால் அறியும் தன்மை ஆன்மாவுக்கு இருப்பதால், ஆன்மா ஒரு அசித்து அல்ல. எனவே சித்தும் அல்ல. அசித்தும் அல்ல.இரண்டினும் வேறுபட்டதன்மையுடையது. இத்தகைய ஆன்மாவின் இயல்பை சிதசித் என்பர்.
எனவே, ஆன்மா சதசத் ஆகவும், சிதசித் ஆகவும் விளங்குவதை சைவசித்தாந்தம் செவ்வனே தெளிவுபடுத்துவதை நாம் உணரலாம். ஆன்மாக்கள்பற்றி மேலும் விளங்கிக் கொள்வதற்கு மும்மலங்கள்பற்றிய விளக்கம் அவசியம் என்று கருதுகின்றேன்.எனவே; அடுத்தபகுதியில் மும்மலங்கள் பற்றி எம்பெருமானின் திருவருட்சம்மதத்துடன் பார்ப்போம்.
முன்னைய பகுதிகள்

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 7
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 8
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 9 சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 10

0 comments: on "ஆபிரகாமியச் சாத்தானும் சைவசித்தாந்த ஆன்மாவும்-சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 11"
Post a Comment