"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, August 15, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-5

பகுத்தறிவுள்ளோர் சைவசித்தாந்திகளா? அன்றி பகுத்தறிவுப்பகலவன் என்று கொளுத்துகின்ற கடும் வெய்யிலிலும் கருப்புச்சட்டை போட்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக திரிகின்றவர்களா?  விடையை இந்தப்பதிவை முழுமையாகப் படித்தால் பெற்றுக்கொள்ள முடியும்.சரி; நாங்கள் பகுதி ஐந்துக்குள் நுழைவோம். சைவசித்தாந்தத்தை அறிந்து கொள்வோம்.
சிவபெருமான் அருவம்,உருவம்,அருவுருவம் ஆகிய வடிவங்களைக் கடந்தவன் என்றும், அருவம்,உருவம்,அருவுருவம் ஆகிய வடிவங்களை ஏன் பூணுகின்றார் என்றும் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். ஐந்தொழில்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், இறைவனின் வடிவங்கள்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன். பூரணமான தெளிவை ஏற்படுத்த அவை உதவும்.

உருவத்திருவடிவங்கள் மூன்றுவகையாக கருதப்படுகின்றன.

1.போக வடிவம்:
உயிர்களுக்கு உலக இன்பத்தை வழங்கும் பொருட்டு, மணக்கோலம் பூண்டிருப்பது.உயிர்களின் பொருட்டு கல்யாண சுந்தரவடிவம் தாங்கினும் சிவபெருமான் போகம் நுகருபவதில்லை.

உ+ம் - கல்யாண சுந்தர மூர்த்தி வடிவம்2.யோக வடிவம் - உயிர்களுக்கு ஞானத்தை வழங்கும் பொருட்டு, குருவடிவம் கொண்டிருப்பது.

உ+ம் :- தென்முகக்கடவுள் வடிவம்


3. வேக வடிவம் - இறைவனை நினைத்து வழிபடும் அன்பர்களின் துன்பத்தைப் போக்கும் பொருட்டு வேகம் கொண்டவராக போர்க்கோலம் பூண்டிருப்பது. உயிர்களின் வினையைப் போக்குவதற்கு தாங்கும் வடிவம் இதுவாகும்.
அட்ட வீரட்டச் செயல்கள் ஆற்றியபோது எடுத்த வடிவங்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும்.காலனை உதைத்தது,சலந்திரனைத் தண்டித்தது,திரிபுரம் எரித்தது என்பன உதாரணங்களாகும்.

உ+ம் - காலசம்கார மூர்த்தி

இறைவன் பூணுகின்ற தாதான்மிய சம்பந்தத்தில் மூவகை வடிவங்களாகிய அருவம்,அருவுருவம்,உருவம் தாங்குதலையும்; உருவவடிவத்தின் மூவகைத்தன்மைகளையும் பார்த்தோம். இனி; தாதான்மிய சம்பந்தத்தினால் இறைவன் ஆற்றும் ஐந்தொழில் பற்றி பார்ப்போம்.


சிவபெருமானின் ஐந்தொழிலை சிவபெருமானின் திருநடனத்தினூடு காண்பது சைவசமயமாகும்.எனவே; இறைவனின் ஐந்தொழில்களை உணர்த்தும் இறைவனின் கூத்தை வெளிநாட்டாரும் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கண்டு வியப்படைந்துள்ளர்.  விஞ்ஞானத்தை விஞ்சிய மெஞ்ஞான திருநடனத்தைக் கண்டு எமது பண்பாட்டுச்சிறப்பை பாராட்டாதோர் எவரும் இலர்.

முதலில்; இறைவனின் ஐந்தொழில் ஆற்றும் கூத்தினைக் கண்டு விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கூறிய கருத்தைக் காண்போம்.

FRITJOF CAPRA எனும் மேலைத்தேய இயற்பியல் வல்லுனர்; நவீன இயற்பியலையும் நடராசப் பெருமானின் திருநடனத்தையும் அழகாக தொடர்புபடுத்தி "every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu mythology, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena." என்கிறார்.

பண்டைய கால இந்திய மக்கள் ஆக்கல்,காத்தல்,அழித்தல் அடங்கிய தாண்டவத்தை இறைவடிவாகக் கண்டு சிலைகளாய் வடித்ததாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் CARL SAGAN குறிப்பிடுகின்றார்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதற்சில கணங்களில் நடந்த நிகழ்வுகளை ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஜெனிவாவில் உள்ள ஐரோப்பிய அணு இயற்பியல் ஆராய்ச்சிக்கூடத்தின்(EUROPEAN CENTER FOR PARTICLE PHYSICS RESEARCH-CERN) முகப்பில் ஆறு அடி உயரமுள்ள நடராசர் சிலை நிறுவப்பட்டிருக்கின்றது. இது தமிழர் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள மகுடம் என்றால் மிகையில்லை. இச்சிலையடியில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய நடராசரின் சமசுகிரத துதியுடன் "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics." எனும் CAPRA இன் வசனம் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

இப்போது சொல்லுங்கள் பகுத்தறிவுள்ளோர் சைவசித்தாந்திகளா? அன்றி கொளுத்துகிற கடும் வெய்யிலும் கருப்புச்சட்டை போட்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக திரிகின்றவர்களா?

சரி; அடுத்த பகுதியில் ஐந்தொழில் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.


சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-5"

அம்பாளடியாள் said...

அனைவரும் வாசித்து மகிழக்கூடிய பயனுள்ள அழகிய தளம்!!!.......மிக்க நன்றி பகிர்வுகளுக்கு........

Lakshmi said...

உண்மை, அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. கருப்புச் சட்டை அணிபவர் மட்டுமல்லர், கிறுஸ்துவர்களும் கூடத்தான் கண்டபடி பேசுகின்றனர்.
இதைப் படித்தால் உணர்வார்கள். நன்றி, நன்றி, நன்றி

Post a Comment