இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் நல்லூர் முருகன் கோயில் உள்ளதென்று பெரும்பகிடியை உருவாக்கியுள்ளது குமுதம் பக்தி ஷ்பெஷல் "ஜனவரி 16-31,2013".
கொழும்பு இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. நல்லூர் இலங்கையின் வடக்கில் உள்ளது. அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ளது. இலங்கையில் நில அமைப்புக்களைப் பற்றியும் சமயப்பண்பாட்டுப் பழக்கவழங்கங்களைப் பற்றியும் கொஞ்சம்கூட அறிவேயில்லாது கட்டுரையை எழுதியுள்ளார் கட்டுரையாளர். பாவம்! அவர் மட்டுமா? அங்குள்ள அத்தனை சைவ- இந்து அமைப்புக்கள் யாவும் இதே போக்கைத் தான் கொண்டிருக்கின்றன. இல்லாவிட்டால், கொத்துக் கொத்தாக மரணங்கள் அரங்கேறியபோது, அடடா....எம் இனக்காரன்....எம் மதக்காரன் இப்படி அழிகிறானே என்று சிந்தித்து இருப்பார்களல்லவா?

புதுடெல்லியில் உள்ள மதுரை மீனாட்சி கோயில் என்று ஒருவர் கட்டுரை எழுதினால், அவருடைய அறிவை என்னவென்று சொல்வீர்? கொழும்பில் நல்லூர் உள்ளதென்று கூறியதன் மூலமாக அப்படியொரு பிழையைத் தான் கட்டுரையாளர் ஏற்படுத்தியுள்ளார்!!! அத்தோடு இன்னொரு இட்டுக்கட்டு வேறு!!! தைப்பூசத்தன்று கிருஷ்தவர்களும் இஸ்லாமியர்களும் பங்குபற்றுகின்றனர் என்று!!! அந்த நல்லூரானைத்தான் கேட்க வேண்டும்!!!
இலங்கைச் சமயப்பண்பாடுகளில், குமுதம் மட்டுமல்ல........சின்மியாமிஷன், இரவிசங்கரின் மிஷன்,அம்மாபகவானின்( தன்னைக் கும்பிடுவதற்கு தானே காசு வசூலிக்கும் ஒரே கடவுள்!!!!) தொண்டர் அமைப்புக்கள், சாயிபகவான் சங்கங்கள் எவருக்கும் எள்ளளவும் அறிவில்லை! இலங்கைத் தமிழரின் உண்மையான துயரிலும் இவர்களுக்கு அக்கறையில்லை! எல்லோரும் தாம்தாம் இங்கு பரப்பவந்ததை பரப்பி, தமிழ்ச்சைவப் பண்பாட்டை சிதைத்து கலப்பட இந்துத்துவத்தை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன! இராமகிருஷ்ணமிஷன் இதில் பெருமளவு விலகி, அறப்பணிகளில் தனது பார்வையை அதிகம் செலவிடுவது பாராட்டுக்குரியதே!!!
பங்களாதேசில் பங்களாதேசிய பௌத்தருக்கு அடித்தார்கள் என்று இலங்கையில் பங்களாதேசின் தூதுவரகத்துக்கு கல்லெறி விழுகின்றது! இலங்கை சிங்கள பௌத்தர்கள் எல்லோரும் கொந்தளித்து எழுகின்றனர்! பங்களாதேசிய பௌத்தரும் இலங்கை பௌத்தரும் மொழியால்,இனத்தால்,நாட்டால் வேறுபட்டவர்கள்! மதத்தால் ஒன்றுபடுகின்றனர்!!!
ஆனால், இலங்கையில் இயங்கும் இந்திய இந்து அமைப்புக்கள் இலங்கைச் சைவப்பண்பாட்டை அறிந்துகொள்ள முயற்சிக்காது, "இந்துக்கள் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் வாரீர்" என்று முழங்குகின்றனர்! நாமும் புல்லரிக்கின்றோம்!!! ஆனால் அதே அமைப்புக்கள் இந்தியா முழுதும் இயங்கினாலும்,"நம் இந்துக்களுக்கு இலங்கையில் இடர்" என்று முணுமுணுக்கக்கூட இல்லை!!!! என்னே ஒற்றுமை!!!! இந்துத்துவ ஒற்றுமை இதுதான்!!! இந்த ஒற்றுமைக்காகத்தான் நாம் "சைவம்" என்ற சொல்லையே மறந்து இந்துக்களாக உருமாறினோம்!!! என்னே வெட்கம்!!!
0 comments: on "குமுதம் பக்தியின் தராதரமும் இலங்கை நல்லூரும்"
Post a Comment