கவிஞர் துரையர் என்று அன்பர்களால் அழைக்கப்படும் சு.துரைசிங்கம் என்னும் அடியவரின் பண் சுமந்த பாடல் என்னும் நூலில் இருந்து இப்பாடலை பதிவேற்றுகிறேன்.முருகன் அடியவர்களுக்கு இது பயனுடையதாக இருக்கும் என்பது திண்ணம்! மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழா வாயிலாக செந்தமிழுக்கு பீடித்துள்ள தீவினைகள் தவிடுபொடியாகட்டுமே!
மயிலணி அடியார்கள் உனைநாட என்றும்
கயல்விழி மாதர்கள் கவலைகள் எழுந்தோட
-மயில்
அடியார்கள் கூடியிங்கு அரோகரா சொல்லியே
பொடியார் மேனியராய் இழுக்கின்ற தேரோட்டம்
கடிவாளம் இல்லாது கலங்கிடும் மக்களை
கொடியது காட்டி அணைக்கின்ற குமரேசா
மேலும் படிக்க...
மயிலேறி வருவாய்
எடுப்பு
மயிலேறி வருவாய் ஐயா இந்தமயிலணி அடியார்கள் உனைநாட என்றும்
தொடுப்பு
குயில்போல இசைபாடக் குழலோசை துணைசேரகயல்விழி மாதர்கள் கவலைகள் எழுந்தோட
-மயில்
முடிப்பு
வேட்டை ஆடியே வள்ளியுடன் நீ வர
பூட்டைத் திறவாது தெய்வி புழுங்குவதும்
காட்டில் நடந்த கதையினை நீ சொல
பூட்டினைத் திறந்து மணவிழா நடத்தியும்
-மயில்
பூட்டைத் திறவாது தெய்வி புழுங்குவதும்
காட்டில் நடந்த கதையினை நீ சொல
பூட்டினைத் திறந்து மணவிழா நடத்தியும்
-மயில்
அடியார்கள் கூடியிங்கு அரோகரா சொல்லியே
பொடியார் மேனியராய் இழுக்கின்ற தேரோட்டம்
கடிவாளம் இல்லாது கலங்கிடும் மக்களை
கொடியது காட்டி அணைக்கின்ற குமரேசா
