அன்புள்ள சிவயோகர் சுவாமி
அடியார்களுக்கு,"நான்
கடவுள்" என்று சொல்லி பணந்திரட்டி
கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் சிவஞானத்தை அள்ளி வழங்கிய சித்தர்களின் சிறப்பைப்
பேசுவதும் எழுதுவதும் அருமைதான்! சிவபூமி
என்று திருமூலநாயனாரால் சிறப்பிக்கப்பட்ட ஈழவளத் திருநாட்டில் பூத்து சைவத்தை
தழைக்கச்செய்த சித்தர் பெருமக்களை இன்று சைவர்கள் நினைவுபடுத்துவதே ஆச்சரியமான
அதிசயமானதாகவுள்ளது!
ஈழத்தில் தோன்றிய சித்தர்களை அத்தி பூத்தாற்போல் அங்கொன்று இங்கொன்றாக நினைவுபடுத்தும் நிகழ்வுகள் அரங்கேறினாலும் அவற்றை பிரபல்யப்படுத்தும் உத்திகளையும் எவரும் கையாள்வதில்லை! பத்திரிக்கைகளில் எங்கேனும் ஒரு மூலையில் ஒருசிறுசெய்தியாக அந்நிகழ்வு அமைந்துவிடுகின்றன!
இப்படியான இக்காலகட்டத்தில்,
சிவயோக சுவாமி நம்பிக்கை நிதியம் என்னும் அமைப்பு சிவயோகர் சுவாமி வழிபாட்டுக்கென்று ஒரு நிலையான இடமொன்றை தாபிக்கும் நோக்கில் துண்டுப்பிரசுரம் ஒன்றை சிவதொண்டன் சஞ்சிகையூடாக அனுப்பியிருந்தனர்.
நான் கடவுள் என்றும் நானே கல்கியென்றும் ஆன்மீக வியாபாரம் செய்கின்ற அமைப்புகளுக்கு பணம் கொழுத்துப்போய் இருப்பதால் ஆயிரத்தெட்டுவகையில் பணந்திரட்டும் வழிகளைக் கையாளுகின்றனர்! சுவரொட்டிகள்,பத்திரிக்கை விளம்பரங்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று இவர்களின் அமைப்புகளுக்கு குறைவேயில்லை!
சிவப்பரம்பொருள் ஒன்றே கடவுள் என்றும் பிறப்பு இறப்பு என்னும் வினைகளுக்கு அப்பாற்பட்ட திருவருளே சிவப்பரம்பொருளென்றும் கொண்டாடுகின்ற சைவப்பாரம்பரியத்தில் சிவஞானம் பெருக்கி குருவருளைச் சுரந்து சிவனடியை உணர்ந்திட வழிகாட்டிய சித்தர்களினை போற்றுகின்ற அமைப்புக்கள் வியாபாரவழியை அறியாதவர்கள்! அதற்கு தலைசிறந்த உதாரணம் நம் ஈழத்து சிவயோகசுவாமி நம்பிக்கை நிதியத்தார். சிவஞானம் ஒன்றையே பொருளாகக் கொண்டு இயங்கும் இவ்வமைப்பினர் பல்லாண்டுகளாய் பல்வேறு கூட்டுவழிபாடுகளை மாதந்தோறும் ஒழுங்குசெய்து வருகின்றபோதும் இன்றுவரை ஒரு நிலையான வழிபாட்டு நிலையத்தை உருவாக்கிட முடியாதளவுக்கு உள்ளனர்.
ஆக; சிவஞானம் பெருக்கும் அமைப்பு ஒன்றுக்கு நாம் செய்யும் உதவி நிச்சயமாக நம்மை ஏதோவொருவழியில் வளப்படுத்தும் என்பதை உள்ளத்தில் இருத்தி, உதவமுன்வருமாறு
பணிவோடு வேண்டுகின்றேன்.
வங்கிக் கணக்கு :
SIVAYOGA SWAMI TRUST OF SRI LANKAA/C 0000716822
BANK OF CEYLON
BRANCH: BAMBALAPITIYA
Swift Code : BCEYLKLXXXX
(BCEYLKLX)
SRI LANKA
Cheques,Bank Drafts,Pay Orders and International Money Orders should be Crossed "Account Payee Only" and made out in favour of SIVAYOGA SWAMI TRUST OF SRI LANKA.பண உதவி செய்யும் வசதியற்றோர், இச்செய்தியை வசதியும் மனமும் படைத்தோரிடம் கொண்டு சேர்க்கும் போற்றுதலுக்குரிய தொண்டை ஆற்றினால் அதுவே அருமையான தொண்டாகும்.
நேரில் சென்று ஏதேனும் உதவிகளை வழங்க விரும்புவோர் பின்வரும் விலாசத்தினைக் குறிப்பெடுத்து, அமைப்பின் உரியவர்களை சந்திக்கும்படி பணிவோடு வேண்டுகின்றேன்.The Secretary
No- 5, Moor Road,Colombo-06,Sri lanka
Tel:- +94 11 2580584
பிற்குறிப்பு: ஏதேனும் பண உதவி செய்வோர் தங்கள் தொலைபேசி இலக்கத்தையும் பெயரையும் அனுப்பி வைத்த பணத்தின் பெறுமானத்தையும் தங்கள் விலாசத்தையும்sivayogaswami@yahoo.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பீர்களேயானால், தங்களுக்கு பணம் அனுப்பி வைத்தமைக்குரிய சான்றினை இவ்வமைப்பினரிடம் இருந்து பெற்றுத்தர ஆவண செய்யமுடியும். மின்னஞ்சல் முகவரி இவ்வலைப்பூவின் பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட என்னுடைய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியாகும்.இவ்வமைப்பின் சிறப்பான திருப்பணியை அறிந்து அவர்களின் சிவப்பணியில் ஏதேனுமொருவழியில் எளியேன் பங்குகொள்ள அவாக் கொண்டேன். எளியேனுக்கு இறைவன் அளித்த எழுத்துப்பணியினூடாக பணிசெய்யும் ஆர்வம் பூத்திடவே, வலைப்பூ ஒன்றினையும் முகநூலில் குழுமம் ஒன்றினையும் சிவயோகர் சுவாமிகளின் திருப்பெயரில் அமைத்துள்ளேன். எல்லாம் திருவருட் சம்மதம்.
நன்றி
சிவத்தமிழோன்
http://sivayogaswami.blogspot.com/2012/11/blog-post_18.html
(குருபரன் சிவயோக சுவாமிகள் என்னும் என்னுடைய வலைப்பூவில் இந்தமடலை பதிவாக பிரசுரித்துள்ளேன்.)

0 comments: on "அன்புள்ள சிவயோகர் சுவாமி அடியார்களுக்கு "
Post a Comment