தேம் மதுரத்தமிழோசை உலகமெல்லொம் பரவச்செய்யவேண்டும் என்றார் மகாகவி பாரதி. ஆனால் இன்று தமிழைக் காக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.பல வ்கையான சவால்களை தமிழ் இன்று சந்தித்தாலும் முக்கியமான இரண்டு வகையான சவால்களை இங்கு நான் அலசியாரய விரும்புகின்றேன்.ஒன்று அசிங்கமான தமிழ்வார்த்தைகள் என்றும், பல்வேறு காரணங்களாலும் பொருள்சிதைவடையும் தமிழ்ச்சொற்கள். இரண்டாவது சதிகாரர்களால் தமிழ் சிதைவு தூண்டப்படுதல்.
நான் முதலில் சுட்டிக்காட்ட விளைவது ஆபத்துதன்மை குறைந்த சவாலை அதாவது அசிங்கமானது, அழகு குறைந்தது என்றெல்லாம் புறக்கணிக்கப்படும் சவாலையாகும்.
இன்று பொதுவாக " நாறுது" என்ற பேச்சுவழக்குச் சொல்லின்மூலம் நாம் உணர்த்துவது சகிக்கமுடியாத மணத்தையேயாகும். ஆனால் நாற்றம் என்பது நறுமணத்தையும் துர்நாற்றம் என்பதே சகிக்கமுடியாத மணத்தையும் குறிக்கும். எவ்வளவு பொருள் பிழையுடன் நாம் எமது மொழியை கையாளுகின்றோம்! குண்டி என்றழைக்கப்படும் உடற்பாகம் உண்மையில் நிதம்பம் என்றேயழைக்கப்படும். நிதம்பபாரத்து நேரிழையால் என்று கம்பன் இதனைக்கையாண்டுள்ளான். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கம்பராமாயணத்தை புரட்டியவேளை அறியக்கண்டேன். அப்படியானால் குண்டி என்னும் சொல் எதனைக்குறிக்கும் என்று என்னுள் கேள்வியெழுந்தது. விடை விதைப்பை என்று கழகத்தமிழ் அகராதி மூலம் அறிந்துகொண்டேன். எப்படி நாற்றம் என்பது சகிக்கமுடியாத மணமாக பொருள் மாற்றமடைந்ததோ அவ்வாறுதான் இதுவும் மாறியிருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். பெண்குறியை குறிக்க அல்குல் என்ற சொற்பதம் பெருமளவான இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் தனங்களை குறிக்க பயன்படுத்தியுள்ளனரோ என்ற மயக்கத்தை தோற்றுவிக்கும் படியாகவும் பயன்படுத்தியுள்ளனர். பாடல்களின் பொருளுரையின்மூலம் கூட தெளிவுபெறமுடியவில்லை. இந்த சந்தேகம் எனக்கு இன்றைக்கு நான்குவருடங்களுக்கு முன்னர் தோன்றியது. அதாவது பள்ளிக்காலத்தில். எனினும் அன்றைய என்னுடைய நாணம் காரணமாக ஆசிரியர்களிடம் கேட்டு சரியான தெளிவு பெறமுடியவில்லை.( இன்று என்னைச்சூழ தமிழ்ச்சூழலே இல்லை.) எனவே என்னையும் என்னைப்போல் இலக்கியத்துள் நுனிப்புள் மேய்ந்ததால் இச்சந்தேகத்துக்கு ஆளாகியிருப்போரையும் தெளிவுபடுத்தும்படி தாழ்மையோடு தமிழாசான்களை வேண்டிநிற்கின்றேன். "இலக்கியத்தில் எவ்வளவோ இருக்க உனக்கு இதுதான் சந்தேகமா?" என்று என்னை குட்டிவிடவேண்டாம். தேவாரங்களில் கூட அல்குல் என்னும் சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதை நினைவுகூற விரும்புகின்றேன்.
நான் தமிழ்நாட்டில் கோடை விடுமுறைகாலத்தைக் கழித்தவேளை மக்கள் தொலைக்காட்சி என்னும் தொலைக்காட்சி அலைவரிசையை கண்டுகளிக்கும் வாய்ப்பைப்பெற்றேன். ஏறக்குறைய நூறுவீதம் தனித்தமிழ் அலைவரிசை என்று அதைக்குறிப்பிடலாம். நடிகர் ரஜனியை திரைப்படக்காட்சிகளில் புகைபிடிப்பதை வெற்றிகரமாகத்தடுத்த அரசியற்கட்சிக்கு உரியது அத்தொலைக்காட்சி என்றனர் ஒருசிலர்.ஆனந்தமடைந்தேன். அத்தொலைக்காட்சியலைவரிசையில் பேராசிரியர். திரு நன்னன் ஐயா அன்றாடவாழ்க்கையில் நாம் விடுகின்ற தமிழ்ச் சொற்பிழை, பொருட்பிழைகளை சுட்டிக்காட்டுவார்.அத்தொலைக்காட்சியினால் ஐயா மூலம் நான் பெற்ற பலன்கள் ஏராளம். கலாச்சாரம் என்பது கல்ச்சர் என்னும் ஆங்கிலத்திரிபு என்றும் பண்பாடு என்பதே கல்ச்சரின் சரியான தமிழ்ப்பதம் என்றும் பசு மரத்தில் ஆணி அறைவதுபோல் விளக்கினார். அன்றுவரை கலாச்சாரமே தமிழ்ப்பதம் என்றும் பண்பாடு என்பது கலாச்சாரத்தின் அருஞ்சொல் என்றும் எண்ணியிருந்த எனக்கு அது எவ்வளவு மடைத்தனமான நினைப்பு என்று அப்போது தோன்றியது."வோட்டர் ப்போல்" என்பதன் தமிழ்ப்பதம் நீர்வீழ்ச்சி என்று எண்ணிருந்த எனக்கு "வோட்டர் ப்போல்" என்பதன் சரியான தமிழ்ப்பதம் அருவி என்று ஐயா மூலம்தான் அறிந்து கொண்டேன்.அதுவரை அருவி என்றால் நீரோடை என்றே தவறாக எண்ணியிருந்தேன். " வோட்டர்- நீர், ப்போல்- வீழ்ச்சி " என்னும் மொழிமாற்றே நீர்வீழ்ச்சியாகும் என்று நன்னன் ஐயா அத்தொலைக்காட்சியில் அருமையாக விளக்கியிருந்தார்.
"தமிழ்த்தினப் போட்டி" என்னும் சொற்ப்பததில் உள்ளகுறையை கொழும்பில் தனியார் வகுப்பேடுக்கும் பிரபல தமிழாசிரியர் திரு.சிவநிர்த்தானந்தா( ஆனந்தன் ஆசிரியர்) ஐயா தனது சைவமங்கையர் கழக கட்டிடத்தில் எடுக்கும் தனியார் வகுப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் கவலையுடன். "தினம்" என்பது தமிழ்ச்சொல் அல்ல. அது சமசுகிரதம். நாள் என்பதே சரியான தமிழ்ச்சொல். ஆனாலும் "தமிழ்நாள் போட்டி" என்னும்போது சொல்லில் ஒருவித அழகு தெரியவில்லை என்ற காரணத்தினால் யாரும் அவ்வாறு மாற்றவிரும்பவில்லை என்று தான் மாற்றமுயற்சித்து பெற்றதோல்வியை எம்மிடம் கூறிவருந்தினார்.அவரிடம் அத்தருணம் நான் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குரிய மாணவனாக இருந்தேன். அவர் கூறக்கேட்டு நானும் பல மாணவர்களுடன் சேர்ந்து வருந்தினேன். வருந்துகின்றேன்.
"தமிழ்த்திருநாள் போட்டி" என்பது நான் என்மூளையை சலவைசெய்து பெற்ற தலைப்பு. இதில் ஏதும் அழகுக்குறை( ஸ்டைல்லான டைடில் வேணும் என்பதுதான் இலங்கை கல்வித்திணைக்களம் தமிழ்ப்பிரிவின் நிபந்தனையாம்) உண்டோ?
மேலே நாம் பார்த்தது அன்றாட வாழ்வில் தமிழை நாம் தவறாகக் கையாளும் சில உதாரணங்களாகும். ஆனால் திட்டம் தீட்டி தமிழ் வதைக்கப்படும் விதத்தையும் வரலாறையும் சற்று அவதானிப்போம்.தமிழின் நம்பர் 1 இதழ்.................போலீஸ் ஸ்டேசனில் கத்திச் சண்டை..........ட்ரீட்மண்டின் பின் நார்மலாகிட்டார்............ நந்தனம் ஆட்ஸ் காலேஜ்...............பேங்கில ஐயாதான் சீப் கெஸ்ட்டு............அமைதிப்படையில சத்தியராஜ் கேரக்க்டரைப்..............இவன் மட்டும் லைஃப்ல கிராஸ் பண்ணலைனா....................எக்ஸ்ட்ரா எனர்ஜியோடு அணியை வழிநடத்தியதில் ஷேன் வார்னேதான் நம்பர் ஒன் கேப்டன்.................அப்பப்பா எவ்வளவு ஆங்கிலக் கலப்படங்கள்! ஒரு நிமிடத்தில் எழுமாறியாக ஒரு தமிழ்நாட்டு சஞ்சிகையினை புரட்டியபோது நான் பெற்றுக்கொண்டவைதான் இவை. அப்படியானால் அந்தப்புத்தகத்தில் எவ்வளவு ஆங்கிலம் கலக்கப்பட்டிருக்கும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்!இது ஏன்? தமிழ்நட்டில் சென்னையில் நானிருந்தவேளையில் என் தமையனார் சொல்லியும் கேட்காது, வலப்பக்கமாய்த் திரும்பு என்று நான் வேடிக்கையாக முச்சக்கரவண்டிக்காரனிடம் சொன்னபோது ரைட்டா லேப்டா என்று தமிழில் சொல்லு என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் நீ கேரளாக்காரனா என்று வேறு கேட்டுவிட்டான். சிரிப்பதா.........அன்றி தமிழின் நிலையென்னி வருந்துவதா?இப்படியொரு சமூகம் எப்படியுருவானது அங்கு? நடந்த.......நடக்கின்ற சதி என்ன?அத்தனையும் ஆரியச்சதிதான்! இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்த தமிழ்நாட்டில் இந்தியை பரப்பமுடியாவிட்டாலும் தமிழை எப்படியாவது சீர்குலைத்து தமிழ்ப்பற்றை அங்கு இழக்கச்செய்து அதன்பின்னர் மெதுவாக ஆந்திரம்வரை பரப்பிய இந்தியைப் பரப்புவதுவாகும். என் நண்பர் குழாமிலுள்ள ஆந்திரர்கள் தாம் ஆரியவம்சம் என்கின்றனர் வரலாறு தெரியாது. இயன்றவரை என் ஆங்கில அறிவில் (சாதரண அரசாங்க இரண்டாம்நிலைப் பாடசாலையில் இரண்டாம்மொழிக்கல்வியாக கற்பிக்கப்பட்டும் சிறப்பாகப்பயிலத்தவறி உயர்தரத்தின் பின்னர் சற்று கவனசிரத்தையோடு பயின்று போட்டிவாழ்க்கையில் ஆங்கிலம் தேவையானதொன்று ஆசியாவுக்கு; ஆனால் சீனன் போல் தாய்மொழி பற்று அவசியம் என்பதை நண்குணர்தவன் நான்) எடுத்தியம்பிப்பார்த்தேன். நம்புகின்றார்களில்லை தாம் திராவிடர் என்பதை. ஆரியர்-ஆந்திரா என்னும் ஒலி ஒற்றுமை அவர்கள் வாதத்திற்கு அவர்கள் சேர்க்கும் பலம்.இப்படியொரு சூழலை தமிழ்நாட்டில் உருவாக்கும் திட்டத்தின் ஆரம்பம்.........இல்லை; இடைநிலை இந்த ஆங்கிலக் கலப்பு எனலாம்.தமிழ்நாட்டு சஞ்சிகைகள், பொதுவான பிரசித்தமான பத்திரிக்கைகள் எல்லாம் ஆரியப்பார்ப்பனீயத்தால் வழிநடத்தப்படுபவையே. அதனால்த்தான் அவர்கள் ஆங்கிலத்தை கலக்கத்துடிக்கின்றனர். எங்கே எப்படி ஆங்கிலத்தை கலக்கலாம் என்று தவமாய்த் தவமிருக்கின்றனர். சென்னையை தமிங்கில மொழியாளர்களாக ஏறக்குறைய மாற்றிவிட்டனர் தமது வலிமையான ஊடகசக்தியை வைத்து. இது யாது தமிங்கிலம் என்று யோசிக்கவேண்டாம். தமிழ்+ஆங்கிலம்=தமிங்கிலம்.பிரதிட்டையை பிரதிஷ்டை என்றும் சாத்திரத்தை சாஸ்திரம் என்றும் சாத்திரியை சாஸ்த்திரி என்றுமே எழுதவிரும்புகின்றனர் சமயசஞ்சிகைகளில் இப்பார்ப்பனர்கள்.இவையாவும் சரியான தமிழ்ப்பதத்தில் இல்லாவிடினும் தமிழ் உச்சரிப்புமுறைக்கு மாற்றக்கூடியனவாக உள்ளன. ஆனால் அவை தமிழை சீர்குலைக்கத்துடிக்கும் இவர்களுக்கு எப்படிப்புரியும்? பரிதிமாற் கலைஞர் என்று தமிழுணர்வு காரணமாக தன்பெயரை மாற்றிக்கொண்ட சூரியநாராயண சாத்திரி ஐயாவினை ஆரியப்பித்துப்பிடித்துள்ள தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு( எங்கள் கொழும்பில் இவர்களுக்கு விலைபோன "இந்து"குருமார்களும் இதற்குள் அடக்கம்.) தெரியவரவே வாய்ப்பில்லை. பாரதியாரை பிராமணன் என்று கூறிட இவர்களின் நா விரும்பவாய்ப்பே இல்லை.தமிழ்திருமுறைகள் ஆலயத்திற்கு மாசுகற்பிக்கின்றன என்றுகூறி அண்மையில் நீதிமன்றம் சென்று தோற்றதை தமிழ்வரலாறு மறக்காது.மன்னிக்காது. யாழ். நூலகத்தை சிங்களர் திட்டமிட்டு அழித்தனர். அவர்கள் இதை கற்றுக்கொண்டது சிதம்பர பார்பனரிடமிருந்து என்றே நானுரைப்பேன். ஆம், திருமுறை பரவி மந்திரத்தை பாதித்துவிடுமென பயந்து கறையானுக்கு அதை வழங்கிமகிழ்தனர். நம்பியாண்டார் நம்பி என்ற தமிழ்ப்பற்றுள்ள பிராமணரும் இராச இராச சோழனும் அன்று தமிழுலகில் இல்லாவிடின் திருமுறைகள் எஞ்சியிருக்கவாய்ப்பேயில்லை.
நல்ல காலம், பார்ப்பனச்சதி இலங்கையில் கொழும்பு எல்லையை தாண்டமுடியாமல் தவிக்கின்றது. ஏனெனில் வடகிழக்குத்தமிழர் தேசியம் என்று ஒருகுடையில் நிற்பதாலும் வடகிழக்கு பிராமணர் தம்மை சாதிகட்டமைப்பாக மட்டுமே கருதுவதாலும் அதாவது ஆரியருடன் தம்மை தொடர்புபடுத்தி எண்ணாததன்மையாலும் சதிகாரரின் கனவுகள் நனவாக மறுக்கின்றன. இலங்கையில் அரசியல்ரீதியாக தமிழ்மொழி எதிர்நோக்கும் சவால்களை என்னுடைய எழுத்துத்தான் நவிலவேண்டும் என்று இல்லை.
தமிழ் எதிர்நோக்கும் சவால்களையறிந்து விழிப்புணர்வுடன் செயலாற்றுவது எமது கட்டாயகடமையாகும். நாம் விடுகின்ற தமிழ் பொருட்பிழைகள், சொற்பிழைகள் என்பவற்றை தமிழாசிரியர்களின் துணைகொண்டு களைவது கடமையாகும். தமிழாசிரியர்களும் இதற்கு துணை நிற்கவேண்டியது கடமையாகும். சதிகாரர்களிடம் இருந்து விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு கவசமாகும். அவர்களை அரசியல் மற்றும் பொருளாதார வழிமுறைகளில் தோற்கடிப்பதே அவர்களுக்கு பாடம் புகட்டும் வழிமுறையாகும்.
நன்றி
8 comments: on "தமிழோடு வாழ்வோம்"
வணக்கம் நண்பரே ! அருமையான நீண்ட ஆக்கம் உங்கள் புலமைக்கு பாராட்டுக்கள் உரிக்தாகுக !
உங்களுடைய வலைப்பூ தமிழ்மணம் , தேன்கூடு , திரட்டி போன்ற வலைப்பூதிரடடிகளில் இணைக்கப்படாமையால் உங்கள் பதிவுகள் பலரதும் பார்வையிலிருந்து தப்பியிருக்கிறது . . . எனவே அவற்றில் உங்கள் வலைப்பூவை இணையுங்கள் இது பற்றி மேலும் அறிய mayunathan@gmail.com எனும் எனது மின்னஞ்சல் மூலம் தொடாடபு கொள்க :)
நன்றிகளுடன்
மாயா
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நம் தமிழ் மொழியை சீர்குழைப்பவை ஊடகங்களான பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள். நம் முதல்வர் பெயரால் இயங்கும் தொலைக்காட்சியில் கூட ஆங்கிலம் ஆக்கிரமித்து இருக்கிறது. (ஊருக்கு தான் உபதேசம். வியாபாரம் என்று வந்தால் கொள்கைகள் காற்றில்) பல நிகழ்ச்சிகளில் வரும் தொகுப்பாலர்கள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். இவர்கள் தமிழர்களுக்கு பிறந்தவர்கள் தானே. தமிழில் பேசினால் மற்றவர்களுக்கு புரியாதா என்ன?. இது நம்முடைய அடிமை தனத்தை காட்டுகிறது. ஆங்கிலேயர்கள் தான் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள் என்று நமக்குள் ஒரு எண்ணம். அதணால் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சாலையில் செல்லும் ஒன்றிரண்டு மேற்கத்தியர்களை பிடித்து வைத்து கருத்து கேட்பது. அவர்களை சும்மா கை தட்ட சொல்லுவதும் ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை சொல்லி கொடுத்து, அவர்கள் தப்பு தப்பாக சொல்லும்போது மகிழ்வதும் நடக்கிறது. என்ற்றைக்காவது நம்மவர்களை மேற்க்கத்தியர்கள் அவர்கள் நிகழ்ச்சிகளில் உட்கார வைப்பார்களா? கலைஞர் தேர்தலில் தோற்க்கும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது “எருமை மாட்டு தோல் தமிழர்கள்”.
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நம் தமிழ் மொழியை சீர்குழைப்பவை ஊடகங்களான பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள். நம் முதல்வர் பெயரால் இயங்கும் தொலைக்காட்சியில் கூட ஆங்கிலம் ஆக்கிரமித்து இருக்கிறது. (ஊருக்கு தான் உபதேசம். வியாபாரம் என்று வந்தால் கொள்கைகள் காற்றில்) பல நிகழ்ச்சிகளில் வரும் தொகுப்பாலர்கள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். இவர்கள் தமிழர்களுக்கு பிறந்தவர்கள் தானே. தமிழில் பேசினால் மற்றவர்களுக்கு புரியாதா என்ன?. இது நம்முடைய அடிமை தனத்தை காட்டுகிறது. ஆங்கிலேயர்கள் தான் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள் என்று நமக்குள் ஒரு எண்ணம். அதணால் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சாலையில் செல்லும் ஒன்றிரண்டு மேற்கத்தியர்களை பிடித்து வைத்து கருத்து கேட்பது. அவர்களை சும்மா கை தட்ட சொல்லுவதும் ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை சொல்லி கொடுத்து, அவர்கள் தப்பு தப்பாக சொல்லும்போது மகிழ்வதும் நடக்கிறது. என்ற்றைக்காவது நம்மவர்களை மேற்க்கத்தியர்கள் அவர்கள் நிகழ்ச்சிகளில் உட்கார வைப்பார்களா? கலைஞர் தேர்தலில் தோற்க்கும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது “எருமை மாட்டு தோல் தமிழர்கள்”.
தமிழ் சஞ்சிகைகளின் ஆங்கிலக்கலப்பினை தவிர்க்க வேண்டியதும் அவசியம் ஆகிறது என்ற உங்கள் வலியுறுத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியதே
ur essays are very nice.i'm proud to be a tamil.
அன்புடைய kevin mattthews,
நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு, வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் என்னும் மறை திக்கெட்டும் உள்ள தமிழன் நெஞ்சினில் பூக்கட்டும். அரசியல்வாதிகளுக்கு தமிழ் பற்று ஒரு வேடம். உணர்வுபூர்வமாய் தமிழ்பற்றும் இறந்துவிட்டது அறிஞர் அண்ணாவோடு திமுகவில் என்பது என் கருத்து. ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். எதோ மக்களாவது விளிப்புணர்வு பெற்று தீர்ப்பை மாற்றி எழுதவேண்டும் என்பது எங்கள்( எழுதுவோரின்) கனவு. பகல் கனவாக்கிவிடாது இருப்பது மக்களின் கைகளில் உள்ளது. நன்றி தங்களின் கருத்தாழம்மிக்க பின்னூட்டத்திற்கு.
அனோனிமஸ் ஐயா,
//தமிழ் சஞ்சிகைகளின் ஆங்கிலக்கலப்பினை தவிர்க்க வேண்டியதும் அவசியம் ஆகிறது என்ற உங்கள் வலியுறுத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியதே// இக்கருத்துக்கு பெயர் மறைத்து பின்னூட்டமிடவேண்டிய துர்சூழலை தங்களுக்கு தோற்றுவித்த காரணி நிச்சயமாக தமிழ் வளர்ச்சிக்கு தடங்கலாகவே இருக்கும் என்பது எனது அச்சம். தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
அன்புள்ள ravirajasinghe,
நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு, எட்டுத்திசையும் எங்கள் தமிழ் வளர கொட்டுவோம் முரசு.
Post a Comment