"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Tuesday, July 22, 2008

இந்துத்துவக் கொள்கையில் மறையும் சைவமும் தமிழும்

"என்று தோன்றினாள் எங்கள் தாய்" என்று பாரதி வியந்து பாடுகின்றான். ஆம், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி சிவம் மட்டும் அல்ல தமிழும் தான். ஆதலால் தான் சிவனின் மகள் என்று தமிழை பாரதி பாடியுள்ளான். அப்படி அவன் குறிப்பிட தொன்று தொட்டு தமிழர்நெறியாக சைவநெறி விளங்கிவருவதும் காரணமாயிற்று.தொன்மையான புகழுடைய சைவநெறி காலப்போக்கில் வடநாட்டால் ஏழு நெறிகளாக திரிவுபடுத்தப்பட்டது. வடக்கரான அதிசங்கரரால் அவ்வேழுநெறிகளும் அடங்கும் வகையில் சுமார்த்தம் எனும் புதுநெறி உருவாக்கப்பட்டது. அவர் சிவனின் அவதாரம் என்று வடநாட்டார் அறிமுகப்படுத்தி தமிழருக்கு ஊட்டி சைவத்தை அழிக்கமுயன்றனர்.இரத்தத்தில் தோய்ந்து பிறந்ததாய் சிவனுக்கு இலக்கணம் இல்லை என்ற திருமந்திரம் மூலம் ஆதிசங்கரரும் அவருடைய சுமார்த்தமும் தமிழரிடையே அன்று எடுபடமுடியவில்லை.
இந்திய சுதந்திரத்தின்போது மதரீதியாக பாக்கிஸ்தான் பிரிந்தபோது ஏனைய மாநிலங்களை பிரியாமல் இருக்கச்செய்தது இந்து என்ற மந்திரமே! ஆயினும் தமிழ்நாட்டை பல உரிமைகளை விட்டுக்கொடுத்தே காக்கவேண்டியநிலைக்கு உள்ளானது வடக்கு. அதன்மூலம் விழிப்புண்ர்வுபெற்ற வடக்கு தமிழ் நாட்டில் இந்துத்துவத்தை புகுத்தவேண்டியதன் அவசியத்தை உண்ரத்தொடங்கியது.இந்துத்துவம் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொருதனித்துவ இனங்களினதும் அடையாளங்களை அழியச்செய்து இந்தியாமுழுவதற்கும் பொது அடையாளமாக வடநாட்டின் பண்பாட்டை பரப்புவதாகும்.அவ்வேளை இந்துத்துவப்பார்ப்பனீயத்தின் கண்ணில்ப்பட்டது ஆதிசங்கரர் படைத்த சுமார்த்தமே! அதையே இந்துத்துவக் கொள்கையாக்கினர். இந்து என்ற சொல் வேதத்திலும் இல்லை. ஆகமங்களிலும் இல்லை. பாரசீகர் பாரதத்தவரை திருடர் என்று பொருள்ப்படவமைத்த சொல்த்தான் அது.
தமிழ்நாட்டில் இந்துத்துவக்கொள்கையான சுமார்த்தத்தை ஒரளவு(கிட்டத்தட்ட) பரப்பிவிட்டனர் என்பதை வெட்கத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. தமிழ்நாட்டு ஆதிசங்கரரின் வாரிசுக்களான சங்கராச்சாரியார்கள் இதன் அத்திவாரம். பாபர் மசுதி பிரச்சினையில் அவரை இந்துத்தலைவராகக் காட்டியதை கவனிக்க.தமிழ்நாட்டில் நாத்தீகவாதம் அரசகொள்கையாக இருப்பது அவர்களுடையதிட்ட்திற்கு இலகுவாயிற்று. சமயபாடம் மாணவர்களுக்கு இல்லாததனால் பணபலமுடைய இந்துத்துவப்பார்ப்பனீயம் சுமார்த்தகொள்கையுடைய சஞ்சிகைகளை வெளியிட அவையே மாணவர்களைச் சென்றடைந்தது. விளைவு தமிழ்நாட்டு தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்த்தேவாரம் தெரியாதநிலை! "ஓம் பூர் புவஸ்வக" தெரிந்த குழந்தைக்கு "தோடுடைய செவியன்" தெரியாத அவலம்! தமிழகத்தமிழர் சிலர் "நான் சைவம்" என்று சொன்னபோது " நான் நீங்க வேச்சுடேரியனா என்று கேட்கேல உங்க ரிலீஜனை கேட்டேன்" என்று என்னோடு கடுத்துக் கொண்டனர். இன்று தமிழகத்தில் சைவத்தின் நிலை இதுதான்! அன்று சிதம்பரத்தில் பார்ப்பனரால் திருமுறைகள் தமிழுலகையடைந்துவிடக்கூடாது என்று ஒழித்துவைத்து அரைவாசியை அழித்ததும் இராச இராசசோழனால் அவைமீட்க்கப்பட்டதும் சிலகாலங்களுக்கு முன்னர் சிதம்பரத்துபார்ப்பனீயத்தால் மீண்டும் சிதம்பரத்தில் தமிழில் திருமுறை படிப்பதால் கோயில் மகிமை இழக்கப்படுவதாகக்கூறி தடையுத்தறவுகோறி வழக்குத்தொடுத்து தோல்விகண்டதும் நிதர்சனம்.

இலங்கையில் தொன்றுதொட்டு சைவசமயம் சிறப்பாகப்பேணப்பட்டமை காரணமாகவே திருமூலர் எம்திருநாட்டை சிவபூமியென்று குறிப்பிட்டார். நாவலர் காலத்திலும் அதுவரைக்கும் மூக்கை நுழைக்க முடியாது தவித்துக்கொண்டிருந்த சுமார்த்தம் இந்துத்துவக்கொள்கைமூல்ம் அரசியல் ஆக்கப்பட்டமையினால் 1950களின் பின்னர் இலகுவாக இலங்கைக்குள் நுழையக்கூடியதாயிற்று.இலங்கை சுதந்திரம் பெற்றகாலத்தில் இந்தியாச்செட்டியார்கள் இலங்கையில் பணபலமுடையவர்களாக இருந்ததன்மையினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமயத்தலைவர்கள் அவர்களிடத்தில் தங்கியிருக்கும் தன்மையேற்பட்டது. பெரியார்திடலில் வளர்ந்த இந்தியத்தமிழர்களே இந்தியா-இந்து என்று குழம்பும்போது இலங்கை செட்டியார் சமூகம் அவ்வாறு இருக்காது என்று எதிர்பார்ப்பது கடினந்தான். அதன் காரணமாக இந்துக்கல்லூரி.............இந்துமாமன்றம்...........இந்துகலாச்சாரத்துறை..............இந்துகுருமார் பீடம்..........என்றெல்லாம் மலரத்தொடங்கி இலங்கையில் இன்று சுமார்த்தம் விரியத்தொடங்கிவிட்டது.
சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் இந்து எம்மொழிச்சொல் என்று கேட்டு ஆய்வு நடத்தி இந்து என்ற சொல்லையே நிராகரித்துவிட்டார். சேர்.பொன்.இராமநாதனிடம் "நீங்கள் இந்துவா?" என்று வினாவிய ஆங்கிலேயரிடம் மறுமொழியாய் "இல்லை, நான் சைவன்" என்று மறுத்துரைத்ததாக திருமதி லீலாவதி இராமநாதன் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். ஏன், இந்து என்ற சொல்லை பிரபல்யப்படுத்திய சுவாமி விவேகானந்தர் கூட இலங்கையின் சைவசிறப்புத்தன்மையை பாரட்டியுள்ளார். ஆனால் இன்று? நாவலர் தெளிவாக சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம் சைவசமயம் என்று இடித்துரைத்து இருக்க கொழும்பு பார்ப்பனீயமும் அதற்கு துணையாக நிற்கும் மாமன்றங்களும் எப்படித்தான் மதியிழந்து பணத்திற்காய் சைவத்தை விற்க்கத்துணிந்ததோ தெரியவில்லை!

இன்று எம் கல்லூரி நிகழ்ச்சிகளில் திருமுறைகளோடு "ஓம் பூர் புவஸ்ச"வும் வந்துவிட்டது. நாளை தமிழகத்தமிழ் குழந்தைகள் போல் திருமுறைகள் தெரியாதநிலைதான் எம்குழந்தைகளுக்கும் என்கின்ற அறிகுறிதான் இது.வைணவம் உள்ள இந்தியாவிலேயே ஆஞ்சநேயருக்கு தேர் இன்றுவரை இழுக்கவில்லை. ஆனால் இலங்கையில் ஆகமத்தை கேட்க்க ஆளில்லாத்தன்மையினால் இழுக்கிறார்கள்...............இழுக்கிறார்கள்............... இழுக்கிறார்கள்............... என்னென்னவோ இழுக்கிறார்கள்.இவர்களுக்கு இந்து என்னும் சுமார்த்தம் உருவானால் போதும். அதில் அர்த்தம் ஆகமம் இருக்கத்தேவையில்லை. அர்த்தமில்லாத் இந்தக்கலப்பட இந்துவால்த்தான் தமிழ்நாட்டில் நாத்தீகம் உருவானதை நினைவில் கொண்டால் சரி!
சாயி சங்கம்...............கல்கி சங்கம்.......... கரே ராமா கரே கிருஸ்ணா" சங்கம் ( ஓம் நமோ நாராயணா சங்கம் என்று உருவாக்க மாட்டார்கள். ஏனெனில் அது தமிழ் வழிபாட்டை குறித்துவிடும் என்ற பயம்........வெறுப்பு..............வடநாட்டாருக்கு. "குலந்தரும் செல்வம் தரும்.................தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் அது நாராயணா எனும் நாமமே" என்று தமிழ் ஆழ்வார்கள் பாடியிருக்க "கரே ராமா கரே கிருஸ்ணா" மந்திரம் தான் கலியுக காவல் மந்திரம் என்கின்றனர்.)...........எத்தனை எத்தனை சிவவாகமத்திற்கு எதிரான வழிபாடுகளை சைவவீட்டில் புகுத்திவிட்டனர்.கொழும்பு தெகிவளை திருமால் ஆலயத்தின் முன்னால் நின்று "சிவனை வழிபட்டால் பத்துக்கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் கிருஸ்ணருக்கு அப்படியில்லை" என்று கரே ராமா கரே கிருஸ்ணா இயக்கத்தினர் எடுத்தியம்பிய இழிவு! இலங்கையில் தொன்று தொட்டு வல்லிபுர திருமால் கோயில், பொன்னாலை வரதராசாப் பெருமாள் கோயில் , வண்ணை வெங்கடேசுவரர் கோயில் என்று காத்தற்கடவுளாகிய திருமாலை வழிபடும் வரலாறு தெரியாத இந்த ஏசண்டுகளும்(தரகர்கள்) அவர்களிடம் விலைபோன மாமன்றங்களும் கொழும்பு பார்ப்பனீயமும் நாவலர் மீண்டும் வந்தால் கல்லேறியத்தயங்க மாட்டார்கள்! இவர்கள் விரும்புவது எல்லாம் பாபர் மசுதி இடித்தது போல் மசுதிகளையும் சேர்ச்சுகளையும் இடித்தழிக்கும் இந்து சமூகத்தை இலங்கையில் உருவாக்குவதும் இந்தியா மத்திய அரசுக்கு அடிமையான இலங்கை சமூகத்தை வளர்ப்பதும் தான்!
இவையாவுக்கும் வடிகாலாய் அமைந்திருப்பது யுத்தசூழ்நிலையில் யாழ் சமூகம் சைவத்தலைமையை கொழும்பிடம் இழந்தமையேயாகும். சைவத்தை வழிநடத்தும் உரிமை, கடமை யாழ்.நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு இருந்தும் மௌனமாய் இருப்பது கவலையை ஊட்டுகின்றது.

சைவ இளையோர்களே, நாவலர் வருவார் வருவார் என்று காத்திராது விழித்தெழுங்கள்! சமய விழிப்புணர்வு காலத்தின் கட்டாயம்!

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

சிவத்தமிழோன்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "இந்துத்துவக் கொள்கையில் மறையும் சைவமும் தமிழும்"

Anonymous said...

vadivangal veru veru .athan ulle irunthu athai iyakkum sakthi onru enra kolgaithaan ulaga makkalin amaithikku vazhivakukkum.Pirivugal makkalidaiye bethatthaithaan valarkkum.ariappadavendia porul onruthaan. athai ariyumvarai bethangal needikkum.Arinthapin anaitthu bethangalum marainthuvidum.

சிவத்தமிழோன் said...

ஒரு இனம் வாழ வேண்டுமானால் அவ் இனத்தின் தனித்துவ அடையாளங்கள் வாழவேண்டும். இது இனம் வாழ நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்த விடயமாகும். ஒரு இனத்தை அழிக்க, முதலில் அதன் பண்பாட்டு தனித்துவத்தை சீர்குலைப்பதில்த்தான் எதிரிகள் புகுவர். அதுதான் வடக்கு நினைப்பது. செய்யத் துடிப்பது. பிரிவே வேண்டாம் என்று நினைத்தால் எல்லோரும் ஒரே மதம் ஒரே இனம் என்று இருந்திடலாமே. தன் இனந்தான் உலகம் முழுதும் இருக்கவேண்டும் என்ற நட்பாசையில்த்தான் ஒரு இனம் அடுத்த இனத்தின்மீது தனது அடையாளத்தை புகுத்த நினைக்கின்றது. அதுதான் வடக்கு வேண்டுவது. உயிர்ப் பல்வகமை போல் இனப் பல்வகமை நெறிப் பல்வகமை என்பன அவசியமானதே. அடுத்தவன் நெறிக்கும் அடுத்த இனத்திற்கும் தீங்கிழைக்காது நமது இனம் நமது பண்பாடு என்று இருப்பதில் எத்தவறும் இல்லை. இன மானம் இன்றி வாழ்வது அர்த்தமற்றது. ஏன் பிரிவு? ஒரு நாடே போதுமே உலகிற்கு........ஆதலால் இலங்கை, இந்தியாவை அமெரிக்காவிற்கு கீழ் கொண்டுவருவோம்......சம்மதமா? அல்லது எல்லோரும் மனிதர்தானே. ஆதலால் பாக்கிஸ்தான் சனாதிபதியை இந்தியா இலங்கை எல்லாவற்றுக்கும் சனாதிபதி ஆக்கிடுவோம். அவர்கள் நாட்டு சட்டத்தையும் ஏற்றிடுவோம். சம்மதமா?

குடுகுடுப்பை said...

என்னமோ புரிகிறது.தமிழ் வழிபாடு சரி, ஆனால் சைவம்/ மற்றவை என்று பிரிப்பது சரியா.சாதிகள் இல்லாத சமுதாயம் கான வழி காணுவோம்

சிவத்தமிழோன் said...

எம் பக்கத்தி வீட்டாரோடு அன்போடும் பண்போடும் இருப்போம். எம் வீட்டு பத்திரத்தை அவர்களிடம் கொடுத்து வைக்கலாமா? வடக்கோடு அப்படித்தான் எம் உறவு இருக்கவேண்டும். சுமார்த்தம் பெரியாரின் பெயரையே தமிழகத்தில் அழிக்க துடிப்பது. வடக்கு படைத்த விடப் பண்டம்தான் சுமார்த்தம் என்க. சாதிகள் இல்லாத மூடநம்பிக்கைகள் இல்லாத சைவத்தை படைத்து தமிழ் என்று தலைநிமிர்ந்து நிற்போம். வைணவம் பற்றி ஒரு சிறு விளக்கம். சைவ தமிழ் சிவனை கீழ்நிலைக்கு கொண்டுவரமுடியாது இந்திரனும் வருணனும் தோற்றுப்போக( ஆரிய கடவுள்கள். வேதத்தில் ஆரம்பத்தில் உயர் தெய்வங்களாக காட்டப்பட்டுள்ளனர்.) திராவிட கடவுளான திருமாலை உயர்தெய்வமாக்கி சிவனோடு போட்டிக்கு அமர்த்தினர். கிருசுணர்,இராமன் என்று உருவாக்கி திருமாலுடன் இணைத்தனர். ஆனால் தமிழ் ஆழ்வார்கள் திருமாலின் தமிழ் அடையாளத்தை உறுதி செய்ததால் திருமால் கசக்கத்தொடங்கவே கிருசுணரையும் இராமரையும் போற்றத் தொடங்கிவிட்டனர். திருமாலை மறந்துவிட்டனர். ஓம் நமோ நாராயணா என்பதை விட கரே கிருசுணா கரே ராமா தானாம் கலியுக மந்திரம் என்கின்றனர்.

தமிழரில் சிறு அளவில் உள்ள வைணவர் தமது வழிபாட்டில் சைவத்தைக்கலக்காது பேணுவதால் பெரும் அளவில் உள்ள சைவத்தில் எப்படியேனும் தம்து வழிபாட்டுமுறைகளைக் கலந்து வடக்குமீது பற்றை வளர்த்து தமிழ் தனித்துவத்தை இழக்கச் செய்வதே சுமார்த்தத்தின் நோக்கம். எனவே தமிழன் தமிழனாய் இருக்க சைவம் என்று உறுதியாய் இருப்பது அவசியம். வைணவர் வடக்கு கலப்புகளை உணர்ந்து கிருசுணருக்கும் இராமருக்கும் விலைபோகது திருமாலை உயர்தெய்வமாய் கருதின் நன்மை பயற்கும். அவர்களை வழிபடவேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. கணபதியை சைவம் அனுசரித்தது ஒக்க அனுசரிப்பதில் குறையில்லை. திருமாலை வடக்கு மறந்தது போல் தெற்கும் மறக்கவேண்டும் என்றே வடக்கு நினைப்பதை உணர்க.


நான் பிரிவெதையும் வலியுறுத்தவில்லை. எனது இனம், எனது பண்பாடு என்று கட்டுக்கோப்பாய் இருக்க வேண்டும் என்கின்றேன். பாரதனாய் ஒன்றுபடவேண்டிய இடத்தில் வேதநெறி எனலாம்.அது சுதச சொல்லே. ஒன்றுபடும் வேளையிலும் தனித்துவத்தை விலைபேசிவிடக்கூடாது என்பதே அவதானத்துக்குரியது. மொழிப்பற்றும் சமயப்பற்றும் இல்லாதவாழ்வும் வாழ்வா என்று சி.வை. தாமோதரம்பிள்ளை சாடுவது ஒவ்வொரு தமிழனுக்கும் உணர்விலே உரைக்கவேண்டியது அவசியமானதாகும்.

நன்றி தங்களின் பெறுமதியான பின்னூட்டத்திற்கு.

சிவத்தமிழோன் said...

பின்னூட்டம் இட்ட அனோனிமசுக்கு நன்றிகள்.

Unknown said...

//ஒரு இனம் வாழ வேண்டுமானால் அவ் இனத்தின் தனித்துவ அடையாளங்கள் வாழவேண்டும்.//

சத்திய வாக்கு. சைவ நெறி தமிழனின் சொத்து. லிங்க வழிபாடு இந்தியாவின் முதற்குடியேறிய பூர்வகுடிகளான திராவிடர்க்கு உரியது. சிவனை சிந்து சமவெளியில் குடியிருந்த போதே நமது முன்னோர் வழிபாடு செய்தனர். அதனால்தான் மாணிக்கவாசகர் "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" எனச் சொன்னார்.

ஆனால் திராவிட இயக்கங்கள் சிவ வழிபாடு ஆரியருடையது என பொய் பிரச்சாரம் செய்தனர். பெரியாரோ தமிழ், சைவம் இரண்டின் மீதும் நச்சை கக்கினார்.இதில் தமிழ் பிழைக்கும் வழியனாதால் தமிழைவிட்டுவிட்டு சைவத்தினை மட்டும் அவரது வழிவந்தோர் எதிர்த்தனர்.அதன் விளைவுதான் தமிழ்நாட்டில் இந்துவாவின் வளர்ச்சி!

சிவத்தமிழோன் said...

// சைவத்தினை மட்டும் அவரது வழிவந்தோர் எதிர்த்தனர்.அதன் விளைவுதான் தமிழ்நாட்டில் இந்துவாவின் வளர்ச்சி!//

//சைவ நெறி தமிழனின் சொத்து. //

நன்றாக எடுத்தியம்பியுள்ளீர்கள். தாங்கள் நவின்ற்து எல்லோர் காதுகளையும் அடையவேண்டும் என்பதே அடியேன் விருப்பம். திருநெறித் தமிழர் என்று பெருமை கொள்வோம். மேன்மைகொள் சைவநீதி, வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.

நன்றிகள் தங்களின் பின்னூட்டத்திற்கு.

Post a Comment