கோயில்
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவேஎன்னையாளும் சிவமே
என்னையாளும் சிவமே-என்
நெஞ்சுள் இருந்து...............
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
உமையாளின் பதியே
உலகாளும் சிவமே
உமையாளின் பதியே
உலகாளும் சிவமே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
மன்னார் பதியில்
மாதோட்ட நகரில்
என்னம்மை கௌரியுடன்
எழுந்தருளி என்னையாளும்
என் ஐயனே......!
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
தமிழான சிவமே
சிவபூமித் திருவே
அழகான சிவமே
அருள் தரும்
சிவமே
என்னை யாளும்
சிவமே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
இருகரம் கூப்பி
ஓம் நமசிவாய
செப்பி..........
இருகரம் கூப்பி
ஓம் நமசிவாய
செப்பி தொழுதிட
தொல்லைகள் போக்கிடும்
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
கேதுவின் பாவங்கள்
போக்கிய எந்தன்
ஐயனே
பாலாவியெனும் தீர்த்தம்
கொண்டு பாரையாளும்
பர மேசுவரனே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
திரு ஞானசம்பந்தர்
திரு சுந்தரர்
தமிழ் பாமாலை
ஏற்ற பெருமானே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே
இந்தச் சிறியேனும்
உனக்கு பாமாலை
சூட்டுகின்றேன்
சிவத்தமிழ் ஞானம்
என்னுள் பெருகிடவே..........
ஏற்றருள்வாய் ஐயனே!
(என்னை என் அப்பன் ஆட்கொண்ட திருத்தலம்-திருக்கேதீச்சரம்)
3 comments: on "திருகேதீச்சரம்"
//தமிழான சிவமே
சிவபூமித் திருவே
திருகேதீச்சரத் திருவே
திருகேதீச்சரத் திருவே//
அருமையான கேதீச்சுர பாமாலை!
உங்கள் பாலாவியின் படத்தைச் சிவன் பாட்டு தேவார வலைப்பூவுக்கும் எடுத்துக் கொண்டேன் ஐயா!
http://sivanpaattu.blogspot.com/2008/10/blog-post.html
//சிவத்தமிழ் ஞானம்
என்னுள் பெருகிடவே..........
ஏற்றருள்வாய் ஐயனே!//
பாடலில் பெயர் முத்திரை பதிப்பது என்பார்கள்.
பாபநாசம் சிவன் ராமதாச என்று பதிப்பார்.
நீங்கள் அழகாய்ச் சிவத்தமிழ் என்று பதிந்து விட்டீர்கள்!
நன்றி, தங்களின் வாசகத்தை பணிவோடு எல்லாம் வல்ல திருக்கேதீச்சரத்தானுக்கே சமர்ப்பணம் செய்கிறேன்.
Post a Comment