என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அப்பரின் சரியையும் ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தரின் கிரியையும் ஒருங்கே தனது வாழ்வியலில் கடைப்பிடித்து சைவவாழ்விற்கு இலக்கணமாய் தனது வாழ்வியலை சைவ உலகிற்கு சமர்ப்பணம் செய்த திருநாவலர் பெருமானின் அவதாரபூமியாகிய ஈழவளநாடு எண்ணற்ற சைவ சான்றோர்களையும் சிவதொண்டர்களையும் காலத்துக்குகாலம் பெறுவது சிவபூமி இதுவென திருமூலர்...