"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, August 25, 2008

புராணங்கள் கட்டுக்கதையா? (சேது சேதுபடமொக்க சோகத்தை ஊட்டாதா?)

விஞ்ஞான ஆய்வுகள் என்னென்னவோ சொல்லுகின்றன. ஒருவர் உண்மை என்று நிறுவிக்கின்றார். இன்னொருவர் மறுக்கின்றார். குழப்பத்தில் சாதரண மக்கள்! விளைவு இதுதான் சந்தர்ப்பம் என்று எப்பம்விடத்துடிக்கும் அன்னிய சக்திகள் தமக்கு சாதகமாக மக்களின் குழப்பநிலையை பயனாக்குகின்றனர்.

அமெரிக்காவில் பிச்சைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் மதுக்குடி மன்னர்கள் விவகாரத்துக் கோரும் தம்பதிகள் என்று கொட்டிக்கிடப்பது எங்கள் கிராமத்து ஏழைக்கு தெரியவர வாய்ப்பேயில்லை. எனவே இந்தசூழ்நிலையை தமக்கு சாதகமாக்கி "இங்கே பார் உன் வீட்டில் எவ்வளவு பிரச்சினை, அங்கு ஒரு பிரச்சினைகளும் இல்லை.அது சொர்க்கபுரி, இங்கே இருந்தால நரகந்தான் விளையும். " என்று தமது வாய்வண்ணத்தைக் காட்டுகின்றனர். பண வண்ணத்தோடுதான்!

இராமபாலம் உண்டு என்கின்றனர் ஒருசாரார். மிதக்கும் கல்லை காட்டுகின்றனர் அதாரமாக. இல்லை என்கின்றனர் மறுசாரார்.

"உண்டு என்று நம்பும் மக்களின் நம்பிக்கையில் ஏன் மண்ணள்ளிப்போட வேண்டுமென்று?" இன உணர்வாளர், இயக்குனர், நடிகர் விஜய ராஜேந்திரர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகின்றார்.


இதே கிருத்தவர்களோ இசுலாமியரோ உண்டு என்று நம்பியிருந்தால் விளைவு என்ன என்று சில பொதுசனம் முணுமுணுக்கின்றனர். இராமன் இருந்தானா இல்லையா என்பது தேவையற்றது என்னைப்பொருத்தவரையில்.ஆனால் இதேபோல் நாளை திருவண்ணாமலை கோயிலை பெயார்த்தால்த்தான் பொருளாதாரவளர்ச்சி என்றநிலை தமிழகத்துக்கு வராமல் இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.


புராணங்கள் பற்றி சைவருக்கு ஆறுமுகநாவலர் எடுத்துரைத்துள்ளார். எனவே இதுபற்றி குழம்பத்தேவையில்லை. சைவ வினாவிடையில் இதோ அவர் திருவாக்கு;திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் உண்மையாக நடைபெற்றவை தாமா?

திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் இரண்டுவிதமாகப் பகுத்துப் புரிந்து கொள்ளவது வல்லது.
தத்துவ விளக்கங்களைக் கூறும் செய்திகள், அவற்றுள் ஒரு வகை மற்றொரு வகை உண்மையாக நடந்தவை. எடுத்துக்காட்டுக்காகச் சிலவற்றை இங்குக் காணலாம்.
சிவமகா புராணத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு சிறு சிவ புண்ணியம் செய்த கேடான நிலையில் இருந்தவனும் உய்வு பெற்றனன் எனக்கூறும். அதற்கு அடுத்த தலைப்பே எவ்வாறு ஒரு நல்ல சிவபக்தர் செய்த சிறு சிவ அபராததிற்காகப் பெற்ற கேடு குறித்துக் கூறும். இவை சிறிதளவேனும் சிவ புண்ணியம் செய்ய வேண்டும், செய்யும் பணியைக் கவனத்துடன் குற்றமின்றிச் செய்ய வேண்டும் என்னும் தத்துவங்களை உணர்த்த என்று கொள்ளாமல் உள்ளவாறே கொண்டால் குழப்பமே கிட்டும்.
இவ்வாறு புராண வரலாறுகளைப் பகுத்தறிந்து புரிந்து கொள்வதே நல்லது

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு"

என்று வள்ளுவன் வலியுறுத்துவதும் இதையே. அதாவது எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். எனவே புராணங்கள் நடந்ததா இல்லையா என்பது தேவையற்ற விவாதம். அது சொல்லும் பொருளை அறிந்து வாழ்வியலை வளப்படுத்துவதே அறிவுடமையாகும்.

அவதானத்திற்கு:- இங்கு நாவலர் "திருமுறைகளில்" என்று வரையறுப்பதை மறக்கலாகாது. சிவாகமத்திற்கு ஒவ்வாதவைபற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் சேது சமுத்திர விடயத்தில் நாம் கொஞ்சம் கவனமெடுக்கவேண்டும். அது யாழ்ப்பாணத்திற்கு இதனால் கேடு விளையுமா இல்லையா என்பதிலேயே! யாழ் நீர்வளம் அழிவடையும், தீவுகள் மூழ்கலாம் என்றெல்லாம் கருத்துகள்.......ஆய்வறிக்கைகள் கூறிக்கொண்டுள்ளன. அடியேனும் சாதரண பொதுமகனாய் குழப்பத்தில்தான் உள்ளேன்.

கண் கெட்டபின் சூரியவணக்கம் போல் யாழ் நீர்வளத்தை இழந்தபின் எதுவும் செய்யமுடியாது. தமிழகம் கன்னடத்திடமும் கேரளத்திடமும் நீருக்காய் கைகட்டி நிற்பதுபோல் தயவு செய்து எங்களையும் எதிரிகளிடம் நீறுக்காய் கைகட்டி நிற்கவைத்திட வேண்டாம் என்பதுவே என் ஆதங்கவேண்டுகோள். வல்லுனர்களே சிந்தித்து செயற்படுக. பண முதலைக்கு மூளையை விலைவைத்து ஈழத்தமிழரை நீருக்கு நாதியற்ற இனமாக மாற்றாமல் இருந்தால் சரி.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "புராணங்கள் கட்டுக்கதையா? (சேது சேதுபடமொக்க சோகத்தை ஊட்டாதா?)"

கோவி.கண்ணன் said...

//விஞ்ஞான ஆய்வுகள் என்னென்னவோ சொல்லுகின்றன. ஒருவர் உண்மை என்று நிறுவிக்கின்றார். இன்னொருவர் மறுக்கின்றார். குழப்பத்தில் சாதரண மக்கள்! விளைவு இதுதான் சந்தர்ப்பம் என்று எப்பம்விடத்துடிக்கும் அன்னிய சக்திகள் தமக்கு சாதகமாக மக்களின் குழப்பநிலையை பயனாக்குகின்றனர்.//

ஆன்மிகம் என்ற பெயரில் மதவியாபாரங்களிலும் இதே தானே நடக்கிறது, எங்கள் இறைவனே இறைவன் மற்றதெல்லாம் சைத்தான்கள் என்று சொல்வதில்லையா ?

//ஆனால் இதேபோல் நாளை திருவண்ணாமலை கோயிலை பெயார்த்தால்த்தான் பொருளாதாரவளர்ச்சி என்றநிலை தமிழகத்துக்கு வராமல் இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
//

சமணர் கோவில்களையெல்லாம் பெயர்த்து சிவாலயம் எழுப்பியதும் பொருளாதாரா வளர்ச்சிக்கு(!) ஏற்பட்டதுதானே. திருவண்ணாமலை சமணர் மலை என்றே சொல்கிறார்கள், ஆமணக்கு எண்ணையை பசும் நெய்க்கு மாற்றாக கண்டுபிடித்து அதை விளக்கெறிக்க பயன்படுத்திய கொண்டாட்டத்தின் நினைவே திருவண்ணாமலை தீபம். இதற்கு எவ்வளவு சைவ (இட்டுக்) கதைகளையெலலம் சொன்னாலும் அதையெல்லாம் சமணகுருமார்கள் ஆதாரத்துடன் மறுக்கவே செய்கிறார்கள். காஞ்சிபுரம் சமண நீலி அம்மனின் கோவில் தான் இன்றைய காஞ்சி காமாட்சி.

வைணவரை வதைத்து பெருமாளைக் கடலில் தூக்கிப் போடும் செயலைவிட நாட்டின் நன்மைக்காக கோவிலை இடிப்பது கொடுமையானதா ?

கோவி.கண்ணன் said...

//விஞ்ஞான ஆய்வுகள் என்னென்னவோ சொல்லுகின்றன. ஒருவர் உண்மை என்று நிறுவிக்கின்றார். இன்னொருவர் மறுக்கின்றார். குழப்பத்தில் சாதரண மக்கள்! விளைவு இதுதான் சந்தர்ப்பம் என்று எப்பம்விடத்துடிக்கும் அன்னிய சக்திகள் தமக்கு சாதகமாக மக்களின் குழப்பநிலையை பயனாக்குகின்றனர்.//

ஆன்மிகம் என்ற பெயரில் மதவியாபாரங்களிலும் இதே தானே நடக்கிறது, இங்கள் இறைவனே இறைவன் மற்றதெல்லாம் சைத்தான்கள் என்று சொல்வதில்லையா ?

//ஆனால் இதேபோல் நாளை திருவண்ணாமலை கோயிலை பெயார்த்தால்த்தான் பொருளாதாரவளர்ச்சி என்றநிலை தமிழகத்துக்கு வராமல் இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
//

சமணர் கோவில்களையெல்லாம் பெயர்த்து சிவாலயம் எழுப்பியதும் பொருளாதாரா வளர்ச்சிக்கு(!) ஏற்பட்டதுதானே. திருவண்ணாமலை சமணர் மலை என்றே சொல்கிறார்கள், ஆமணக்கு எண்ணையை பசும் நெய்க்கு மாற்றாக கண்டுபிடித்து அதை விளக்கெறிக்க பயன்படுத்திய கொண்டாட்டத்தின் நினைவே திருவண்ணாமலை தீபம். இதற்கு எவ்வளவு சைவ (இட்டுக்) கதைகளையெலலம் சொன்னாலும் அதையெல்லாம் சமணகுருமார்கள் ஆதாரத்துடன் மறுக்கவே செய்கிறார்கள். காஞ்சிபுரம் சமண நீலி அம்மனின் கோவில் தான் இன்றைய காஞ்சி காமாட்சி.

வைணவரை வதைத்து பெருமாளைக் கடலில் தூக்கிப் போடும் செயலைவிட நாட்டின் நன்மைக்காக கோவிலை இடிப்பது கொடுமையானதா ?

துரை said...

கடவுள் இருக்கிறானா என்றால் கண்டிப்பாக கிடையாது என்றே சொல்லலாம், இந்து கடவுள் மட்டும் அல்ல வேறு கடவுளும் சரி
அந்த அந்த நாட்டில் அந்த அந்த மக்களால் பரப்பிவிட்ட கதை
உதாரணத்திர்க்கு இராமயணம், மகாபாரதம் இவையெல்லாம் அந்த காலத்தில் வட இந்தியர்களால் பரப்பிவிட்ட கட்டு கதை ஆனால் அதை கம்பன் மொழி பெயர்த்தலால் அது நமக்கு ஓரு விருப்பான கதையாயிட்ரு அவ்வளவே,
ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே தமிழ் இருந்திருக்கிறது என்பது வரலாறு கூற்று அப்படி இருக்கையில் இராமன், கிருஷ்னன் பெரிய கடவுள் என்றால் அவன் ஏன் தமிழ் பேசவில்லை?(இது எப்பொழுதும் எனக்குள் இருக்கும் ஐயம்)
முருகன் மிது மட்டும் ஒரு ஈர்ப்பு உண்டு ஏன்னென்றால் அவன் தமிழ் கடவுள் என்பதால்.
தமிழ் மொழி மிக பழமையான மொழி, உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மூத்த மொழி தமிழேதான் என்று பலநாட்டு ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.இவ்வாறு நமது தாய்மொழி பழமைக்குப் பழமையாக இருக்கிறது. புதுமைக்குப் புதமையாகவும் இருக்கிறது. என்றும் இளமையாக இருக்கிறது. அதனால் நமக்குப் பெருமையாக இருக்கிறது. அப்படிபட்ட மொழியில் பேச மறந்த பேச தெரியாத யாரையும் கடவுள் என்று ஏற்றுகொள்ள படமாட்டாது
//***சேது சமுத்திர விடயத்தில் நாம் கொஞ்சம் கவனமெடுக்கவேண்டும். அது யாழ்ப்பாணத்திற்கு இதனால் கேடு விளையுமா இல்லையா என்பதிலேயே! யாழ் நீர்வளம் அழிவடையும், தீவுகள் மூழ்கலாம் என்றெல்லாம் கருத்துகள்.......ஆய்வறிக்கைகள் கூறிக்கொண்டுள்ளன. அடியேனும் சாதரண பொதுமகனாய் குழப்பத்தில்தான் உள்ளேன். ***//
மேலே சொன்ன உங்கள் கருத்தினை நானும் ஆமோதிக்கிறேன்
ஆனால் இராமனின் பெயரால் தடுத்தால் வெட்டி எறிவோம்
ஏ வடநாட்டு மடையர்களே உங்கள் இராமனுக்கு இலங்கை போக வேண்டும் என்றால் அவன் கப்பலில் பயணிக்கலாம் அவனுக்கு அந்த மண்பாலம் தேவைபடாது

சிவத்தமிழோன் said...

கோவி.கண்ணன்
ஐயா, பின்னூட்டத்திற்கு நன்றி.

சமயத்தின்பேரால் தலைமைப்பீடங்களையுடைய மதங்களே கொலைகளையும் கொடுரங்களையும் ஆதரிக்கும் போக்கை மறந்துவிட்டு தலைமைப்பீடம் என்று ஒன்றை வரையறுக்காத சுதந்திர சமய நெறியாய் விளங்கும் சைவ(வைணவ) வாழ்க்கை நெறியில் காளான்கள் மலர்வது தவிர்க்கமுடியாதது. காளான்களை அகற்றவேண்டியது சமூகத்தின் கடமை.
திருமந்திரம் சொல்லுகிறதா இவனை வதை அவனை வதை என்று? சிலர் விடுகின்ற தவறுகள் ஒருகாலும் சைவத்திற்கு மாசைக்கற்பிக்காது என்றுணர்க.

ஐயா, மசூதியை இடிக்கும்போது வடக்கர் வரைந்த நீதி அங்கு முன்னர் இருந்த இராமரின் ஆலயத்தை உடைத்தே அவ்மசூதி எழுப்பப்பட்டதாக. அது உண்மையோ பொய்யோ அறியேன். ஆனால் வடக்கர் செய்ததை ஒருவேளை இராமர் கடவுளாக இருப்பின் அதனை ஏற்கமாட்டார் என்பதை நீங்களும் அறிவீர். இப்போது சொல்லுங்கள் முன்னர் சமணருடையது என்று கூறி எதையாவது அகற்ற உங்கள் மனம் விளைகின்றதா?

உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? சமணரும் பௌத்தரும் திருக்குறள் தமது நூல் என்பது ஒக்க கிருத்தவரும் தமது நூல் என்று சொல்வது. இதுபோல்த்தான் திருவண்ணாமலையும் என்க. நாளை திருவண்ணாமலையில் யேசுநாதர் சேர்ச்சு இருந்தது என்பர்.கவனம்.

சைவ-வைணவ ஊடல் சைவமோ வைணவமோ ஏற்படுத்தியதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவரங்கத்தில் இருந்த சிவன் சன்னதியை நிர்மூலமாக்கியதாகக் கூட செய்திகளில் படித்ததுண்டு. இதை திருமால் செய்தாரா? சில மூடர்கள் செய்த செயலய்யா!

சில மூடர்களின் செயல்களை பெரிதுபடுத்தி ஊதிக்காட்டநினைக்கும் தங்களுக்கு எப்படி மதத்தின் பேரால் யுத்தத்தையும்.....புனிதப்போர்களையும் தூண்டும் மதங்கள் பற்றி மௌனம் காக்கமுடிகிறது?

சைவத்திலும்,வைணவத்திலும் தயவுடன் காட்டுங்கள் "என்னை கும்பிடாதவர்கள் பாவிகள், அவர்களுக்கு நரகம்தான் விளையும், உருவவழிபாட்டை சிதை" போன்ற வாசகங்களை.

ஐயா. மூடர்களை மூடர்களாய் அறிவோம். சைவரில் தவறுதலாக பூத்த காளான்களை நினைவில் மீட்டிவைத்துள்ள தங்களிடம் தயவுடன் வினாவுவது சமணர்களிலும் எண்ணற்ற மூடர்கள் மலர்ந்தனர். சமணம் வளர்வதற்கு சைவத்தைவிட பல அக்கிரமங்களை செய்தனர் என்பதை மறக்காமல் இருக்கவேண்டுமென்பதையே!

சைவ மன்னர்களின் ஆதாரவு இல்லாமலா வைணவ ஆலயங்கள் செழிக்கமுடிந்தது. வரலாற்றை ஒரு கறையைக்கொண்டு மறைக்காதீர். இராச இராச சோழன் தஞ்சையைக் கட்டி சைவத்தை வளர்கையில் வைணவ ஆலயங்களை சிதைத்தானா அன்றி மானீயங்கள் கொடுத்து வளர்த்தானா? குறைகளை கண்டால் நிறைகள் தெரியாது. இதைத்தான் அழகாகச் சொல்வர் "கல்லைக் கண்டால் கடவுள் தெரியாது. கடவுளைக் கண்டால் கல் தெரியாது."


கரிகர மூர்த்தம் எனும் சிவன்பாதி திருமால்பாதி மூர்த்தம் சிவமூர்த்தங்களில் ஒன்றென்பதை மறந்த மூடர்களின் செயல்கள் சைவ-வைணவ ஒற்றுமையை சிதைக்கா.

தசாவதாரம் எனும் பெயரில் ஊதி பெருப்பித்து பிரச்சினைகளாக்காமல் இருந்தால் சரி.

சிவத்தமிழோன் said...

துரை ஐயா, தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. வடக்கர் தோற்றுவித்த கடவுள்களான இராமரும் கிருசுணரும் கார்மேக நிறம் கொண்டவர்களாக சித்தரித்தது திராவிட சமயத்துடன் கலக்கும் பொருட்டே. கருப்பர்களாக இருந்த திராவிடர்களை பிடிக்காத ஆரியருக்கு வேறுவழியில்லாமல் போய்விட்டது.அதனாலேயே கார்மேகம் போல் நிறமுடையவர்கள் என்று சித்தரித்தனர்.
நம் பண்பாட்டில் மன்னனை கடவுளாக கருதும் வழக்கம் உண்டு. அதுதான் இராமன் எனும் மன்னன் கடவுளாகக் காரணம். அவ் வழிபாட்டு முறை சரியா பிழையா என்று வாதாடுவதைவிட இராமன் பெயரால் தவறுகள் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அது இராமபாலமாயினும் சரி. மசுதியாயினும் சரி.தவறு நடக்கக்கூடாது. அவ்வளவே ஐயா.

என்னுடைய ஆனந்தக் கண்ணீர் உடன் கூடிய நன்றிகளை மீண்டும் கூறிக்கொள்கின்றேன். யாழ் நீர்வளம் பற்றியும் தீவுகளின் பாதுகாப்புப் பற்றியும் தாங்கள் கொண்ட அக்கறைக்கு. தமிழன் என்ற உரிமையோடு நாங்கள் எழுப்பும் குரலிலை விஞ்ஞான ஆய்வுகளை அடிப்படையாய் கொண்டு ஆராய்க. பொருளாதார சிந்தனையோடு அல்ல. அவ் ஆராய்வில் எப்பாதகமும்
யாழ்பாணத்திற்கு வராவிட்டால் தமிழனாய் எந்தவித ஆட்சேபனையும் என்னிடமும் இல்லை. எந்த ஈழத்தவரிடமும் இல்லை. நன்றி.

சு. உலகநாதன் said...

மீண்டும் மீண்டும் பழைய கதைகளையே வன்மமுடன் சொல்லிக்கொன்டிருப்பதில் பொருள் இல்லை. வரலாற்றை பின்னாலிருந்து பார்த்து சரிப்படுத்தமுடியாது. பிடித்ததோ, பிடிக்கவில்லையோ, மனித குலம் இப்படிப்பட்ட நிலைகளின் ஊடாகவே முன்னேறி வருகிறது என எண்ணிப்பார்க்கவேண்டும். தமிழர்களாகிய நாம் கடந்த காலங்களில் எத்தனை நாடுகளை வென்று அழித்துள்ளோம்.
எனவே மனித குலம் நேற்றை விட் இன்று கற்றுக்கொண்டே முன்னேறி வருகிறது எனக்கருதினால் தமிழ் ஆரிய, சைவ சமண, பார்ப்பன சூத்திர
போராட்டங்களையும் அதற்கான முனைப்பையும் பிற்பொக்கானது என்வே கருதவேண்டியது உள்ளது.

சிவத்தமிழோன் said...

தமிழர்கள் அன்றைய காலங்களில் யாவரையும் அடுக்கி ஒடுக்கியிருந்தால் இன்று தமிழர் சிம்மசொப்பனமாக இருந்திருப்பர். இங்கிலாந்தைப் பாருங்கள்? ஐரோப்பியர்களைப் பாருங்கள்? தமிழர்கள் ஆண்ட சின்னங்கள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. இதன் பொருள் என்ன?

உண்மைதான். பிற்போக்கான சம்பவங்கள் நடந்துள்ளன.

யாம்மார்க்கும் குடியல்லோம் என்ற முற்போக்குவாதம் சைவ எழுச்சியின்போது ஏற்பட்டுவிட்டது என்க. எனவே; முற்போக்குவாதம் என்பது இன்றைய சொத்தல்ல! அது பண்டைய காலத்திலேயே பிறந்ததால்த்தான்; மானிட முன்னேற்றம் படிப்படியாக நடைபெற்றுள்ளது.

அதேநேரத்தில் எவை பிற்போக்கானவை, எவை முற்போக்கானவை என்பதை அறிந்து அவற்றை உணர்ந்து அவற்றிலிருந்து பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன். வரலாறு என்பது மறக்கப்படக்கூடாதது.

///தமிழ் ஆரிய, சைவ சமண, பார்ப்பன சூத்திர
போராட்டங்களையும் அதற்கான முனைப்பையும் பிற்பொக்கானது என்வே கருதவேண்டியது உள்ளது/////

இதன் பொருள் விளங்கவில்லை எளியேனுக்கு! சமூக எழுச்சிப் போராட்டங்கள் பிற்போக்குத்தனமானவையா? எத்தனையோ சமூக விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.நடக்கின்றன! அவை எந்த இரகம்? முற்போக்கா? பிற்போக்கா? இவையாவும் பிற்போக்கு என்றால்; இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது! மேலாதிக்கவாதிகள் அப்படியே வளர்ந்த வண்ணமே இருப்பர். அடிமைச்சங்கலிகளும் உடையாது! எனவே; பார்ப்பனருக்கு எதிரான பார்ப்பனர் அல்லாதோரின் போராட்டம், திராவிட வாதம்.......இவையாவற்றையும் பிற்போக்குத்தனம் என்று கூறமுடியாது. சமயசுதந்திரம் இல்லாத காலத்தில் சைவ எழுச்சி ஏற்பட்டு சமணவத மேலாதிக்கத்தை தகர்த்தமையும் இந்தவகையே!

Post a Comment