"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, August 22, 2008

பெரியாரும் விவேகானந்தரும்

சமீபத்தில் வலைப்பூ ஒன்றில் விவேகானந்தரை தூற்றி ராமசாமி முதலியார் ஆகிய பெரியாரின் எழுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது. அப்போது என்னத்தை சொன்னாலும் பயனில்லை என்று விட்டுவிட்டேன். ஆனால் அண்மையில் என் உள்ள ஆதங்கத்தை அறிந்த எம்பெருமான் சிவபெருமான் திருவருளால் ஜீலை 2008 ஆடி என்று திகதி இடப்பட்ட ஸ்ரி ராமகிருஷ்ண் விஜயம் புத்தகத்தில் "திராவிட வேர்கள் வியந்த விவேகானந்தர்" என்ற தலைப்பில்அருமையான விளக்கக்கட்டுரை பிரசுரமாகியிருப்பது கண்டேன்.

சுவாமி விவேகானந்தரால் தமிழ்ச் சைவத்திற்கு தனிச் சிறப்பு பெரிதாக அமையாவிட்டாலும் , அவரால் மேற்கொள்ளப்பட்ட வேதநெறி மறுமலர்ச்சியை மறைப்பது தூற்றுவது சைவத்திற்கு அழகல்ல.
மிசனின் தொண்டையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆனால் தனிப்பெரும் முதலாகிய தமிழரின் சிவ வழிபாட்டை பேணும் போது மிசனும் விவேகானந்தரும் சைவ உலகின் வாசலோடு சரி. அதை நினைவில் கவனமோடு கொள்ளவேண்டியது அவசியம். ஆறுமுகநாவலரின் மீள் பிரதிட்டை செய்யப்பட்ட சைவவழிபாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தாது மிசனையும் விவேகானந்தரையும் கருத்தில் எடுக்கவேண்டும்.

கொழும்பில் வளர்ந்த காலப்பகுதியில் கொழும்பு இராமகிருசுண மிசனின்( மடம்) ஆன்மீக தொடர்பை பேணும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். எனினும் ராமகிருசுணரும் சாரதா அன்னையும் குருவாகக் கொண்டதோடு சரி. வாழ்கையில் அவர்களை ஆசான்களாய் ஏற்று அறிதல் சைவவாழ்வுக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என்று கருதினேன். ஆனாலும் கடவுளாக காட்டுவதும், மட சுவாமிகள் திருநீறு அணிதலையே தவிர்க்கவிரும்புவதும் ஏற்க இயலாதவை. ராம வழிபாட்டையும் கிருசுணர் வழிபாட்டையும் சிறுவரிடம் தூண்டுவதும் மனதை சங்கடப்பட செய்பவை. எப்படி சாயிபாபா, அம்மா பகவான் என்று தனிப்பெரும் தமிழர் வழிபாடு ஆகிய சைவ வழிபாடு சிதைக்கப்படுகின்றதோ அதுபோல்த்தான் இராமகிருசுணமிசனின் சில நடைமுறைகளும் அமைந்துள்ளன.
இங்கு, ஈழச் சைவ சமூகம் விழிப்படைந்தால் தானாகவே இராமகிருசுண மிசன் ஈழத்தில் சைவ அனுகுமுறைக்குள் வந்துவிடும் என்று நம்புகிறேன்.சைவ வழிபாட்டை பேணும் தொண்டு நோக்குடைய துறவிகளின் நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பு உருவானால் மிசனின் சைவ குந்தகக் கருத்துகள் தானாக மறைய வாய்ப்புண்டு.
இராமகிருசுண மிசனில் அவர்களுடைய கருத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையில் எதனையும் புகுத்த அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் ஆறுமுகநாவலரை வெறும் வாய்க்கு கூறிவிட்டு அவர் முதுகெலும்பையே உடைக்கும் சிலரின் செயற்பாடுகள்தான் சைவத்தின் மேன்மையை மங்கச்செய்யும் மிசனின் சில செயற்பாடுகளுக்கு காரணம் என்பதே என் கருத்து. பூசுவது திருநீறு இடிப்பது சிவன் கோயில் .......!!!இன்ன இன்ன தேவையற்றது எங்கள் நாட்டில் என்று வரையறுத்திருந்தால் மடமும் உடன்பட்டிருக்கவேண்டியது நிர்பந்தமாயிருக்கும்.
ஆகவே திருநெறித் தமிழர்களே, உயர் சைவ வழிபாட்டை பேணுவோம். மறைநெறி வளர்த்தவர்களை ஆதரிப்போம். சைவ வீட்டில் சிவ தீட்சை அல்லாதோரை வாசலோடு நிறுத்திடுவோம். வாசலுக்கு வெளியே அவர்களின் மறை தொண்டு தூற்றப்படுவதை அனுமதியாது செயலாற்றுவோம்.
"வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க" என்று சிவத்தமிழ் வாழ்வை மேற்கொள்வோம்.

குறித்த அந்தக் கட்டுரையை இங்கு அப்படியே தருகின்றேன். வாசிக்க. தெளிவு பெறுக. பெரியார்(ராமசாமி) போற்றியதான பிரசுரம் இங்கு. பெரியார் தூற்றியதாய் பிரசுரம் அங்கு http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_19.html .
பெரியாரின் சாதி எதிர்ப்பு தோல்வி கண்டபோது மத எதிர்ப்பாகிகொண்டார். அதன் விளைவு போற்றியோர் எல்லோரையும் கண்ணை மூடிக்கொண்டு தூற்றினார்.
சாதி எதிர்ப்பிலேயே ஆழமாய் நின்றிருந்திருந்தால் ஒருவேளை தமிழகத்தில் சாதியையே இல்லாமல் செய்திருக்கலாம். ஆனால் மத எதிர்ப்பாக்கி அதில் சாதி எதிர்ப்பை இழகவிட்டுவிட்டார். விளைவு சாதியின் பேரில்தான் பள்ளிப்படிபென்று ஆகிவிட்டது. பார்ப்பனர் என்பது ஒரு சாதிக்கட்டமைப்பாக கண்ட பெரியார், தமிழரில் ஆயிரம் சாதிகள் இருப்பதை மறந்தது துன்பகரமானதே.பெரியாரின் சாதி எதிர்ப்பை பார்ப்பனர் எனும் சிறு வட்டத்துகுள் நில்லாது ஒட்டுமொத்த சாதி எதிர்பாக வளர்த்து சாதியில்லா சமூகத்திற்காய் உழைப்போம். மத எதிர்ப்பு பெரியாரின் பிராமண எதிர்ப்பில் ஏற்பட்ட தோல்வியால் உருவானதென்று உணர்ந்து,சாதி இல்லா வேதநெறியை அவரின் புண்ணிய ஆன்மா மகிழ உருவாக்குவோம்.


இதோ குறித்த பிரசுரம் உங்கள் பார்வைக்குவிவேகானந்தர் இல்லம் தொடர்பாக அண்மையில் எழுந்த பிரச்சினையைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்.
"பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளை, பெரியார்,அண்ணா ஆகியோரின் கருத்துகளைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிற போது அவரிடம் நாங்கள் ஏன் விரோதம் கொள்ளவேண்டும்?"

சுவாமி விவேகானந்தரிடம் விரோதம் பாராட்ட வேண்டியதில்லை எனும் கருத்து வரவேற்கத்தக்கதே.ஆனால் பெரியார் மற்றும் அண்ணாவின் பெரும்பகுதி கருத்துகளை எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்று தலைகீழாக மாற்றிக் கூறியது, காலக்கணிப்பு வழுவுடையது.
சுவாமிஜி சமூகச் சீர்திருத்தம் தொடர்பாக முன்மொழிந்த கருத்துகளை பெரியார்,அண்ணா அவரவர்கள் பாணியில் வழிமொழிந்தனர் என்பதே சரியானது.
திராவிட இயக்கத்தின் முன்னோடி இதழ்களுள் ஒன்றாகப் புகழ்பெற்ற "ஜஸ்டிஸ்" எனும் ஆங்கில நாளேடு சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக-சமுதாய ஆளுமையை பெரியார்-அண்ணாவிற்கு முன்பாகவே புனைந்துரையோ,பிறழ்ச்சியுரையோ இன்றி நட்புறவுடன் போற்றியுள்ளது.
26.2.1917-இல் சென்னையில் இருந்து "ஜஸ்டிஸ்" இதழ்வெளிவந்தது.அரசியல் பார்வையில் பாரதியார் "ஜஸ்டிஸ்" இதழை "ஸ்வதேச விரோதிகளின் முக்கியக் கருவி" என்று ஒருமுறை குறிப்பிட்டார். "ஜஸ்டிஸ்" இதழின் ஆசிரியராக ஆற்காடு ராமசாமி முதலியார் 1927-இல் பணியாற்றினார். புகழ் பூத்த அரசியல் தலைவராக அவர் ஆற்றியுள்ள பணி தனி ஆய்விற்கு உரியது. அவரும், லட்சுமணசாமி முதலியாரும் ஆற்காடு இரட்டையர்கள் என்று போற்றப்பட்டனர். இருவருமே சுவாமி விவேகானந்தரைப் போற்றி மகிழ்ந்தவர்கள்.
"ஜஸ்டிஸ்" இதழின் தலையங்கங்களில், சுவாமி விவேகானந்தரின் கட்டுரைகள்,உரைகளில் இருந்து மேற்கோள்களை எடுத்தாண்டதோடு,சரியான மதிப்பீடுகளையும் செய்தார்.
பிராமணிய எதிர்பானது, சமய எதிர்ப்பாக, ஆத்திக எதிர்ப்பாக மாற்றப்படாமல் இருந்த சூழலில் ராமசாமி முதலியாரின், பிராமணர் அல்லாதார் இயக்கப் பணி அமைந்தது.அவர் தம்மை தூய வைணவராக அடையாளம் காட்டிக் கொண்டவர்.
"புரோகிதத்துவ எதிர்ப்பு இயக்கம்", "காத்தியும் வர்ணாச்ரம தர்மமும்" எனும் இரண்டு தலையங்களை விரிவாக எடுத்தாண்டுள்ளார். அவரது சொற்றொடர்களைத் தன்மயமாக்கிக் கொண்டும் எழுதியுள்ளார்,ராமசாமி முதலியார்.
"வேதாந்தவிற்பனரான சுவாமி விவேகானந்தர், புரோகிதர் தலையீடுகளை உறுதியாகவும், நேர்மையாகவும் கண்டித்துள்ளார்" என்று தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது தலையங்கத்தில் சுவாமிஜியின் "வேதாந்தமும் தனியுரிமையும்" எனும் அற்புதமான உரை(1896) மிகவிரிவாக எடுத்தாளப்பட்டுள்ளது. தனியுரிமையை எதிர்த்து போராட வேதாந்தம் உறுதுணையாக நிற்கின்றது என்பதை மிகத்தெளிவாக சுவாமிஜி விளக்கியுள்ளார்.
சுவாமிஜி , 1896-இல் லண்டனில் 'தனியுரிமை"எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை, ராமசாமி முதலியாரை ஆட்கொண்டது. இந்த உரையி ஒருபகுதியை தலையங்கத்தில் வழங்கிவிட்டு, ராமசாமி முதலியார் சுவாமி விவேகானந்தரை "ஜீவன் முக்தர்" என்று ஏற்றிப் போற்றியுள்ளார்.
"சுவாமிஜிவின் சொற்கள் உன்னதமான ஆன்மா எழுச்சியை தரவல்லன; புனிதன் மிக்க ஒரு ஜீவன் முக்தரின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டச்சொற்கள்" என்று வர்ணித்தார்.
".......நீங்கள் உடல்பலமோ,அறிவுபலமோ அதிகமாகப் பெற்றுள்ளதால் என்னைவிட உங்களுக்கு உரிமை அதிகம் இருக்கக்கூடாது.பொருள் அதிகமாக இருப்பதால் நீங்கள் என்னைவிடப் பெரியவர் என்ற நினைப்பும் உங்களுக்கு வரக்கூடாது.ஏனெனில் இந்தப் பேதங்களையெல்லாம் கடந்து நமக்குள் ஓர் ஒருமை விள்ங்குகிறது.".சுவாமிஜியின் இந்த உரை தலையங்கத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தரை அருமையான ஆங்கிலத்தில் பின்வருமாறு போற்றிப் புகழ்ந்துள்ளார் ராமசாமி முதலியார்.


Swami Vivekananda did not care if in his remarks he offended the sentiments and susceptiblities of any section of the people.He poured out his heart to them, told his audience in burning words of eloquence and true faith where they were lacking, showed them their weak points, refused to palliate the crimes against society committed by any section, and gave them lessions which must have gone home to their inmost hearts.

Yet there was no vulgar abuse, no ringing denunciations, no violent language. The grace of the savants, the sharpness of the zeolot, and the sincerity of one of the noblest souls in India combined to add to the divinity of his message.


"சுவாமி விவேகானந்தர், எங்கே தமது கருத்துகள் பிறரது உணர்ச்சியைப் புண்படுத்தி, குறைகளைச் சுட்டிக்காட்டிவிடுமோ என்று கவலைப்பட்டதில்லை.அனல் கக்கும் எழுச்சிமிகு சொற்களாலும், உண்மையான நம்பிக்கையுடனும் தன் உள்ளத்தைத் திறந்து காட்டி அவர்களின் குறை என்ன என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
"சமுதாயத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும்,தீமைகள் செய்தாலும் , சுவாமிஜி புகட்டிய பாடம் அவர்கள் நெஞ்சில் ஆழப் பதிந்தது.
"ஆனாலும், தரக்குறைவாகச் சாடுவதோ, வீண் கண்டனமோ, வன்சொல்லோ அவரிடம் அறவே இல்லை.ஞானிகளின் கருணை , ஆர்வம் உடையவரின் கூர்மை,இந்தியாவின் ஒரு உயரிய ஆன்மாவின் நேர்மை இவற்றுடன் தெய்விகமும் கலந்தது அல்லவா இவரது ஒவ்வொரு செய்தியும் ஆகும்!"
இவ்வாறு சொல்லொவியம் தீட்டினார் ராமசாமி முதலியார்.கல்விப் புரட்சி தொடர்பான மற்றும் சுவாமிஜியின் பாமர மக்கள் முன்னேற்றக் கருத்துகள் ராமசாமி முதலியாரைக் கவர்ந்தன.
தொடர்ந்து ஜஸ்டிஸ் ஆசிரியர் சுவாமிஜிக்குப் பின்வறுமாறு புகழ்மாலை சூட்டினார்.
"ஆற்றல் மிக்க அறிவினர், தூய்மையான சமூக சீர்திருத்தவாதி, புனித ஆத்மா,அவரது இயலபான பணியின் ஓர் அம்சமாக வாழ்வாதாரப் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்பு கொண்டு மக்களினுடையே சமத்துவப் பாடங்களைப் போதித்தார்."
இவ்வாறு திராவிடப் பாரம்பரியத்தின் அடிவேர்களே விவேகானந்தரைக் கண்டு வியந்த வரலாற்றை எல்லோரும் அறிந்திட வேண்டும்.
பி.கு- திரும்பத்திரும்ப கேட்கிறேன்..............தயவுடன் வேண்டுகிறேன்..........பெரியாரின் அடிப்படை கொள்கையை நடைமுறைப் படுத்துவதே முதன்மையானது. அதை செயற்படுத்துங்கள்.

கவனத்திற்கு
எனது unicode எழுத்துமுறையில் உள்ள குறைபாட்டால் sri ஒலிக்குரிய சரியான கிரகந்த எழுத்தை எழுதமுடியவில்லை. அதனால் இராமகிருசுண மடத்தின் பெயரில் வரும் sriயை திருத்தமாக எழுதமுடியவில்லை. மன்னிக்க. ராமகிருஷ்ண என்பதை ராமகிருசுண என்றே எழுதியுள்ளேன். கிரகந்தத்தை இயன்றவரை தவிர்க்கும் பொருட்டு.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

15 comments: on "பெரியாரும் விவேகானந்தரும்"

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

உங்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்சித்தன்

இறக்குவானை நிர்ஷன் said...

விவேகானந்தர் என்ற பெயர் எங்கு காணப்பட்டாலும் என்னையறியாமல் ஈர்க்கப்பட்டுவிடுவேன்.
விவேகானந்தரில் உள்ளார்ந்த அன்புகொண்டவன் நான்.

கவிஞர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம் பாரதியாரை மட்டும் மகாகவி என்கிறோம்.துறவிகள் ஆயிரம்பேர் இருக்கலாம். ஆனால் விவேகானந்தரை மட்டும் வீரத்துரவி என்கிறோம்.
தாம்சார்ந்தவற்றிலான கருத்துக்களை வெளிப்படையாகவும் வீரநெஞ்சத்துடனும் ஐயமற்றும் கூறியதால் தான் இவர்கள் இப்பேறு பெற்றார்கள். சுவாமி விவேகானந்தரை மதவாதியாக மட்டும் பார்க்கும் சிலரால் தூற்றுதலுக்காக சொல்லப்படும் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ளத் தேவையுமில்லை.
மாணிக்கக்கல் தேட முயலும்போது உடம்பெல்லாம் சேறாகும். அப்படிப்பாடுபட்ட பின்னர் கிடைக்கும் மாணிக்கக்கல்லின் பெறுமதி அடைந்தவருக்குத் தெரியும். மாணிக்கக்கல்லை பார்க்காதவர்கள் வெறும் சேற்றில் முழுகி சேறாகவே வெளியே வருவார்கள். அதற்காக அங்கே மாணிக்கம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுடைய முயற்சி அதுவரை என்பது மட்டுமே உண்மை.அவர்கள் அதிகம் சேற்றைப் பற்றித்தான் பேசுவார்கள். ஏனென்றால் மாணிக்கத்தை அவர்கள் பார்க்கவில்லையே!

உண்மையாக விவேகானந்தரை அறிந்தவர்கள் எப்போதும் தமது வார்த்தைகளால் மற்றவர்களை பலவீனப்படுத்த மாட்டார்கள்.ஏனென்றால் விவேகாந்தரின் வழிகாட்டுதல் அவ்வாறு கூறுவதன்று.

மற்றும்,
இராமகிருஷ்ண மடம் பற்றிக் கூறினீர்கள். இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்து இந்தியா சென்றுள்ள சுவாமி ஆத்மகனானந்தா எனது குரு. அவர் விபூதியை வெறுப்பதில்லை. சமயத்துடன் மாற்றுக்கொள்கைகளும் அவரிடத்தில் நான் கண்டதில்லை.
எப்போதும் வழிநடத்தும் மனப்பாங்கும் தன்னை உதாரணமாகக் காட்டும் உயரிய போக்கும் அவரிடத்தில் காணப்பட்டது. எனக்கு 10 வயதிலிருந்தே சுவாமிஜியுடன் தொடர்பு இருந்தது.
மடத்தின் பொதுச்சேவை எமது மக்களுக்கு எவ்வளவோ பயனளித்துள்ளது.

சிவத்தமிழோன் said...

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, நீங்கள் நவின்றது மெத்தச் சரி.

சுவாமி ஆன்மகனானந்தா மகராஜ் அவரின் அன்புக்கு பாத்திரமாகியிருந்த "இந்து"வின் மைந்தர்களில் அடியேன் ஒருவன் என்று அவர் திருவார்த்தையால் உலகறியச் செய்யமுடியா துர்பாக்கியத்துடன் நான் உள்ளேன். எனினும் சுவாமி அவர்கள் நீறு அணிவதே இல்லை என்று குறிப்பிட முயலவில்லை.திருநீறை அவர்கள் பிரதானமானதொன்றாக கருதவில்லை.எனெனில் அவர்கள் சைவம் என்று அடையாளப்படுத்தவிரும்புவதில்லை. நாளை இடமாற்றம் காரணமாக நாளை அவர் வைணவ பிரதேசத்திற்கு சென்றால் அங்கு நீறு அணியமுடியாது. அவர்கள் சுமார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
இவர்களின் சேவை உயர்ந்தது. மாசற்றது.
ஆனால் சிவாகமத்தால் நிராகரிக்கப்பட்ட வழிபாடுகளை வளர்ப்பது வேதனைக்குரியது. அது அவர்களின் தவறும் அல்ல. நம்மவர் தவறு.

இன்ன இன்ன இத்தியாதிக்குள் தங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம் என்று ஒழுங்கான சமைய நிறுவனம் எமது பண்பாட்டிற்கு இருந்து வேண்டுகோள் விடுத்திருந்தால் அவர்களின் தொண்டு எம் சைவப் பண்பாட்டிற்கு மாசையுண்டாக்க வாய்ப்பேயில்லை.

போர்த்துக்கேயர் நுழைந்தபோது போர்த்துக்கேயருக்கு ஏற்றாற்போலவும் ஒல்லாந்தர் நுழைந்தபோது அவர்களுக்கு ஏற்றாற்போலவும் பிரித்தானியா நுழைந்தபோது பிரித்தானியருக்கு ஏற்றாற்போலவும் மாறி கூனிப்பழகிய எம்மவர்கள், இன்று சாயி பாபா........அம்மாபகவான் என்று கூனிநிற்கின்றனர். எவருக்கும் எமது உயர் பண்பாட்டை போதிக்காது அவர்களிடம் போதனை பெறுகின்ற இழியவர்களாகி நிற்கின்றனர்.

ஏன் என்று தெரியவில்லை எம்மவரிடம் ஒருவித தாழ்வு மனப்பான்மை இருகின்றது. அன்னிய இடத்தில் இருந்து வந்தால் அவர்கள் கடவுள்கள் என்று. இராமர்........கிருசுணர்...........பாபா......கல்கிபகவான்..........அப்பப்பா! யோகர் சுவாமியை விடவா இவர்கள் அற்புதம் நிகழ்த்திவிட்டார்கள்.
கலை வந்து ஆடி குறி சொல்லும் சில அடியவர்களைக் கூட நம்பாத எம்மவர்கள் இவர்களின் அற்புதங்களைக் கண்டு கடவுள் என்கின்றனர்.

பாவம் யோகர் சுவாமி, எங்கேனும் இந்தியாவில் வடக்கில் பிறந்திருந்தால், கடவுளாகியிருக்கலாம். தெரியாத்தனமாக யாழில் பிறந்து சித்தராகவே மதிக்கப்பட்டுவிட்டார்.
இதுதான் எம்மவரின் குறை. சொந்த அண்ணன் தம்பியை மதிக்கமாட்டர். எங்கிருந்தோவரும் அயலவரை முதுகில் தூக்கி கொண்டாடுவர்.

மாறுமா எம் சமூகம் என்ற கேள்விக்கு விடை மறுபடி நாவலன் பிறக்க சிவனின் அருள் கூடுதலேயாகும்.

சிவத்தமிழோன் said...

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, நீங்கள் நவின்றது மெத்தச் சரி.

சுவாமி ஆன்மகனானந்தா மகராஜ் அவரின் அன்புக்கு பாத்திரமாகியிருந்த "இந்து"வின் மைந்தர்களில் அடியேன் ஒருவன் என்று அவர் திருவார்த்தையால் உலகறியச் செய்யமுடியா துர்பாக்கியத்துடன் நான் உள்ளேன். எனினும் சுவாமி அவர்கள் நீறு அணிவதே இல்லை என்று குறிப்பிட முயலவில்லை.திருநீறை அவர்கள் பிரதானமானதொன்றாக கருதவில்லை.எனெனில் அவர்கள் சைவம் என்று அடையாளப்படுத்தவிரும்புவதில்லை. நாளை இடமாற்றம் காரணமாக நாளை அவர் வைணவ பிரதேசத்திற்கு சென்றால் அங்கு நீறு அணியமுடியாது. அவர்கள் சுமார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
இவர்களின் சேவை உயர்ந்தது. மாசற்றது.
ஆனால் சிவாகமத்தால் நிராகரிக்கப்பட்ட வழிபாடுகளை வளர்ப்பது வேதனைக்குரியது. அது அவர்களின் தவறும் அல்ல. நம்மவர் தவறு.

இன்ன இன்ன இத்தியாதிக்குள் தங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம் என்று ஒழுங்கான சமய நிறுவனம் எமது பண்பாட்டிற்கு இருந்து வேண்டுகோள் விடுத்திருந்தால் அவர்களின் தொண்டு எம் சைவப் பண்பாட்டிற்கு மாசையுண்டாக்க வாய்ப்பேயில்லை.

போர்த்துக்கேயர் நுழைந்தபோது போர்த்துக்கேயருக்கு ஏற்றாற்போலவும் ஒல்லாந்தர் நுழைந்தபோது அவர்களுக்கு ஏற்றாற்போலவும் பிரித்தானியா நுழைந்தபோது பிரித்தானியருக்கு ஏற்றாற்போலவும் மாறி கூனிப்பழகிய எம்மவர்கள், இன்று சாயி பாபா........அம்மாபகவான் என்று கூனிநிற்கின்றனர். எவருக்கும் எமது உயர் பண்பாட்டை போதிக்காது அவர்களிடம் போதனை பெறுகின்ற இழியவர்களாகி நிற்கின்றனர்.

ஏன் என்று தெரியவில்லை எம்மவரிடம் ஒருவித தாழ்வு மனப்பான்மை இருகின்றது. அன்னிய இடத்தில் இருந்து வந்தால் அவர்கள் கடவுள்கள் என்று. இராமர்........கிருசுணர்...........பாபா......கல்கிபகவான்..........அப்பப்பா! யோகர் சுவாமியை விடவா இவர்கள் அற்புதம் நிகழ்த்திவிட்டார்கள்.
கலை வந்து ஆடி குறி சொல்லும் சில அடியவர்களைக் கூட நம்பாத எம்மவர்கள் இவர்களின் அற்புதங்களைக் கண்டு கடவுள் என்கின்றனர்.

பாவம் யோகர் சுவாமி, எங்கேனும் இந்தியாவில் வடக்கில் பிறந்திருந்தால், கடவுளாகியிருக்கலாம். தெரியாத்தனமாக யாழில் பிறந்து சித்தராகவே மதிக்கப்பட்டுவிட்டார்.
இதுதான் எம்மவரின் குறை. சொந்த அண்ணன் தம்பியை மதிக்கமாட்டர். எங்கிருந்தோவரும் அயலவரை முதுகில் தூக்கி கொண்டாடுவர்.

மாறுமா எம் சமூகம் என்ற கேள்விக்கு விடை மறுபடி நாவலன் பிறக்க சிவனின் அருள் கூடுதலேயாகும்.

தமிழ் ஓவியா said...

விவேகானந்தரை பார்ப்பனர்கள் இந்துமதப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவுதானே ஒழிய வேறில்லை.

காந்தியையும் அப்படித்தான் பார்ப்பனர்கள் பயன்படுத்தினார்கள். இறுதியில் காந்தியார் பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்காத்தால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.

பார்ப்பனர்கள் தங்களுக்கு உதவினால் மகாத்மா ஆக்குவார்கள். பிடிக்கவில்லை என்றால் சுட்டுக் கொள்வார்கள்.

அது போல் தான் விவேகானந்தருக்கு விழா எடுக்கப்பட்டதே தவிர வேறு எதுக்கும் இல்லை என்பதை பார்ப்பனரல்லாத தோழர்கள் உணர்வார்களாக.

சிவத்தமிழோன் said...

விவேகானந்தருக்கு விழா எடுத்தார்களா அல்ல எடுக்கவில்லையா என்பது தேவையற்றது என்றே கருதுகின்றேன். வடக்கரே ஆனாலும் ஒருவரின் சேவை வாழ்வை காழ்புணர்ச்சியுடன் தூற்றுவது அழகல்ல என்பதே என் கருத்து.
ஐயா, தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி . வாதப்பிரதிவாதங்கள் தமிழுக்கு உரம் சேர்த்தால் போதும்.

சிவத்தமிழோன் said...

வாசகர்களே,

விவேகானந்தர் இலங்கையை விட்டு நீங்கி இந்தியாவை அடைந்தபோது இலங்கையில் சைவமும் சிவமும் தமிழும் சிற்ப்பாக பேணப்படுகின்றது என்ற பொருளில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தார் என்று இராமகிருசுண விஜய புத்தகத்தில் வாசித்த நினைவு உண்டு. அதை வேறு சில கட்டுரைகளிலும் வாசித்துள்ளேன். தற்சமயம் என்னால் எப்புத்தகம் என்றோ எந்த திகதி வெளியான விஜயம் என்றோ குறிப்பிடமுடியாத துர்சூழல். மன்னிக்க. யாரேனும் தெரிந்தால் கூறுங்கள் தயவுசெய்து.

தமிழ் ஓவியா said...

//சமீபத்தில் வலைப்பூ ஒன்றில் விவேகானந்தரை தூற்றி ராமசாமி முதலியார் ஆகிய பெரியாரின் எழுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது.//

உங்களுக்கு பெரியாரைப் பற்றிய புரிதல் என்பதைவிட பெரியாரைப் பற்றி கொஞ்சமாகக் கூட அறிந்திருக்கவில்லை.

பெரியார் 1927 லேயே ஜாதிப் பட்டத்தை துறந்து விட்டார். அப்படியிருக்கையில் பெரியாரின் பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை ஒட்டவைத்திருக்கிறீர்கள். அதுவும் தப்பும் தவறுமாக.

பெரியாரைப் படியுங்கள். அப்புறம் பெரியாரைப் பற்றி விவாதியுங்கள். அதுதான் அறிவு நாணயம்.

சிவத்தமிழோன் said...

தவறு என்று அறிந்தால் தவறை திருத்துவதில் சிவத்தமிழோன் தயங்கான் என்று பணிவோடு பறைசாற்றுகின்றேன். பெரியாருக்கு சாதி முத்திரை குத்தும் தவறான எண்ணத்தோடு எனது எழுத்து மலரவில்லை. பெரியாரை அறிய முன்னரே ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமந்திரத்தால் சாதியை வெறுக்கத் தொடங்கியவன் இந்த எளியன். ஒன்றே குலமென்பதை வாழ்ந்து தமிழகத்தையே புனிதப்படுத்திய பெரியாரை கறைபூசும் துர்செயலில் ஈடுபடும் எண்ணம் எள் அளவிலும் என்னிடம் இல்லை. தவறான நோக்கம் எதுவும் இன்றி என் எழுத்தில் முதலியார் என்று பெரியாரின் இயற்பெயரை குறிக்கும்போது பயன்பட்டுவிட்டது. மன்னிக்க. நடந்த தவறுக்கு அடியேன் பணிவோடு மன்னிப்புக் கோருகின்றேன்.

Anonymous said...

சிவாகமத்தால் நிராகரிக்கப்பட்ட வழிபாடுகள் எவை என்று கூற முடியுமா? இராமர், கிருஷ்ணர் ,ஆந்ஜநேயர் வழிபாடுகள் நிராகரிக்கப் பட்டவையா?

சிவத்தமிழோன் said...

நிச்சயமாக திருமால் தமிழ் கடவுள் என்பதோடு அவர் வழிபாட்டுக்குரியவராகவே சைவம் சொல்கிறது. ஆனால் அவர் பரிவாரங்களை அல்ல. இராமன் கிருஷ்ணன் ஆகியோர் இதிகாச கதாப்பாத்திர நாயகர்கள். முழுமுதற்கடவுளுக்குரிய ஏற்றல்களும் போற்றல்களும் ஆகாதவை. ஆஞ்சநேயர் வழிபாடு அண்மையில் இலங்கைக்கு அறிமுகம் செய்தவழிபாடு. இந்தியப் பார்ப்பனீயம் அதிகம் தமது இந்துத்துவாவை பரப்ப ஆஞ்சநேயரையே பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இராமாயணத்தில் ஆஞ்சநேயர் கதாப்பாத்திரம் படிப்பவர்கள் மனதில் எளிதில் பதியும் படி செதுக்கப்பட்டுள்ளமையேயாகும். ஒருசாரார் திருமாலின் ஒரு அவதாரம் புத்தர் என்கின்றனர். புத்தரை வழிபடலாமா? முடியாது. வைணவ ஆகமம் அப்படிச் சொல்லவில்லை. சுமார்த்தம் சார்ந்த இந்துத்துவா அப்படிச் சொல்ல; வைணவர் அதனை ஏற்கவில்லை.

ஆஞ்சநேயர் வழிபாடு கிராமியவழிபாடாக இலங்கையின் சில இடங்களிலும் வீட்டுக் காவல் தெய்வமாகக் கருதி ஆஞ்சநேயர் நிழல்படத்தை வீட்டுவாசலில் மாட்டி, வணங்கும் முறை காணப்பட்டது எனினும் பேராலய அமைப்போ,தேரோ அன்றி முழுமுதற் சக்தியாகவோ சித்தரிக்கப்படவில்லை.ஆனால் இன்று நிலை மாறிவிட்டது!!!!!!!
கிருஷ்ணருக்கும் இராமருக்கும் முழுமுதற் தெய்வத்திற்குரிய தோற்றத்தை கொடுப்பது சிவாகமத்திற்கு ஏற்றதன்று.

விரைவில் அடுத்தபதிவில் பிராமணர்(குருக்கள்) ஒருவரின் வண்டவாளத்தை காட்டும்வகையில் இங்கு ஓர் பதிவாக videoகாட்சி ஒன்றை இணைக்கவுள்ளேன். அவர் தனது வாயால் எப்படி சிவாகமத்தை அன்னியமாகக் கருதுகிறார் என்பதை நீங்கள் இலகுவில் அறியலாம் குறித்த video இணைப்பின்மூலமாக. நன்றி.

senthil kumar.Ph,D said...

பெரியாரை பற்றி முழுவதும் தெரியாமல்அவரை குறை கூறுவது உங்கள் அறிவு இன்மை காரணம் ஆகும்.பெரியார் ஒரு மானிட சிந்தனை உள்ளவர் ,அவருக்கு உங்களை போன்று சாதி,மதம்,மொழி ,நாடு என்ற குருகிய வட்டத்தில் நிற்க விருபமவில்லை; பெரியரை படிக்க வேண்டாம்.இயற்கையை படி ,அறிவியலை படி, அறிவியலை உன் வசதிக்கு பயன்படுத்தாமல் உன் அறிவுக்கு பயன்படுத்து அப்போது புரியும். பெரியாரை பற்றி ..நன்றி

சிவத்தமிழோன் said...

@senthil kumar.Ph,D

பெரியார் நாடு கடந்து செயற்பட்டதால் - தமிழருக்கு நாடில்லை!
பெரியார் மொழி கடந்துதான் செயற்பட்டார் - ஏனெனில் அவர் தமிழில்லையே! அதேநேரத்தில் அவர் மொழிகடந்து செயற்பட்டதால் தமிழன் திராவிடனாகி கர்நாடகத்திடமும் அடிவாக்குகிறான்.தெலுங்கனிடமும் அடிவாங்குகிறான்.மலையாளியிடமும் அடிவாங்குகிறான்.இலங்கையிலும் அடிவாங்குகிறான். தமிழன் என்ற உணர்வே இழந்து தமிழினம் நிற்கிறது.

பெரியார் மதம் கடந்து செயற்படவில்லை!!!! இஸ்லாமிய மதத்தை தழுவும்படி ஒருசமயம் தூண்டியவரே பெரியார்.

பெரியார் சாதிகடந்தும் செயற்படவில்லை. அவர் பிராமணசாதிக்கு எதிராகச் செயற்பட்டாரோ ஒழிய தான்சார்ந்த சமூகத்தையும் துறந்து செயற்படவில்லை!
பெண்விடுதலை பேசியவர் கட்சியைக் காப்பாற்றுகிறேன் என்று வயது வித்தியாசம் இன்றி மணந்தவர்! கட்சியைக் காப்பாற்ற குடும்பம் வேண்டும் என்ற கருத்தை தமிழகத்தில் விதைத்தவரே பெரியார்தான்!
ஆக; பெரியாரை முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்!

பெரியாரின் அறப்பணிகள் பல! அவற்றில் எளியேனுக்கு மரியாதை உண்டு! பெரியார் செய்ததெல்லாம் சரி என்று கண்னைமூடிக்கொண்டு கதைவிடுகின்ற அறிவீனம் என்னிடம் இல்லை! பெரியார் கடவுளில்லைத்தானே! சாதரண மனிதர் தானே? மனிதம் பிழைகள் விடமாட்டானா என்ன?

அதுசரி 'படி...உன்...' இந்த ஒருமைகளை தங்களுக்கு போதித்தது யாருப்பா? பெரியாரா?

mana nimmathi said...

கடவுளை வணங்குவதால் என்ன பயன் என்று புரியும்படியான ஒரு பதில் தருக.

Hari said...

"இங்கு மக்கள் அத்வைதம், வீர சைவம் ஆகிய நெறிகளைப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் 'இந்து' என்று சொல்வதற்குப் பதிலாக 'சைவம்' என்று சொல்ல வேண்டும். வங்காளத்தில் சைதன்யர் பிரசாரம் செய்த நடனமும் சங்கீர்த்தனமும் தென்னாட்டில் தோன்றியவை. தமிழர்களிடம் தோன்றியவை. இலங்கைத் தமிழ் தூய தமிழ்.
இலங்கை மதம் தூய தமிழ் மதம். "
-சுவாமி விவேகானந்தர்- "எனது பயணங்கள், இலங்கை பற்றி

Post a Comment