"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, August 4, 2008

பெரியாரும் தமிழர்நெறியும் (தமிழ் ஓவியாவிற்கு ஒரு விளக்கக்கட்டுரை)

(தமிழ் ஓவியாவின் வலைப்பூ:- http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_3663.htmlவின் வலைப்பூவில் சிவனும் உமையும் நீண்டநேரம் கூடியும் குழந்தை பிறக்காததால் சிவபெருமானின் விந்தை கொண்டு படைக்கப்பட்டதே முருகன் என்று வால்மீகியின் இராமாயணப் பாடலையும் கந்தபுராணத்தில் தன்னால் பிறக்கவில்லை என்று உமைவருந்துவதாகவும் ஆதலால் கந்தபுராணமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் பெரியார் கூறிய கருத்தாக வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கு எளியேன் வழங்கவிரும்பும் விளக்கம்.)

தமிழ் கடவுள் என்று தமிழ் சங்கம் கொண்டாடிய முருகனின் பிறப்பை பெரியாரின் எழுத்தைக்கொண்டு இழிவுபடுத்தியிருப்பது வருந்தவைக்கின்றது. தமிழ் ஓவியாவிற்கு விளக்கம் கொடுக்கவிரும்பி எளியேன் முயலுகின்கின்றேன். என்னை எழுதவைத்த எம்பெருமான் இந்தவிளக்கக்கட்டுரைக்கு துணையிருக்கட்டும். சைவசித்தாந்தமும் கந்தபுராணமும் கற்றோர் விளக்கக் கடிதம் எழுதி நேரத்தை வீணடிக்கார் என்பது இயல்பே! உனக்கு தெரிந்ததை எழுது என்று இள இரத்தம் என்னை எழுதத்தூண்டுகின்றது. கந்தபுராணப்படலம் ஆலயங்களில் பாமரருக்கும் விளங்கும் வகையில் படிக்க வழிசமைத்த நாவலரின் நாட்டில் பிறந்ததால் கந்தபுராணம் கற்றிராத வேளையிலும் தமிழ் ஓவியா அவர்கள் பெரியாரின் எழுத்தாக குறிப்பிட்ட கந்தபுராண வசனவரிமூலமே விடையளிக்க முடியும் என நம்புகின்றேன்.
தமிழ் கடவுள் என்று சங்கம் கொண்டாடிய முருகனையும் திராவிடவழிபாடே சைவவழிபாடு என்று அகழ்வாராய்வுகள் விளக்கி மொகஞ்சதரோ, கரப்பா நாகரிகம் (சிந்துவெளி நாகரிகம்) தமிழர் பண்பாடு என்று வடக்கின் தலையில் குட்டிச் சொல்லிருக்கும் வேளையில் சிவனை இழிவுபடுத்தும் வகையில் பெரியாரின் எழுத்தை பிரசுரித்து பிரபல்யம் தேடுவது ஆரோக்கியம் அன்று. பெரியாரின் திராவிடப் பாசறையை பல நூல்கள் வாயிலாய் அறிந்து அவரோடு ஈர்க்கப்பட்டவன் நான். பெரியார் சாதிக்கொடுமைகளை எதிர்த்தார். சாதிகளின் வேர் பார்ப்பனர் என்பதால் அவர்களையும் எதிர்க்கவேண்டிய நிலைக்கு உள்ளானார். ஆனால் அவர் நூறுவீதம் சரியான கொள்கைகளையே கொண்டிருந்தார் என்றால் மனித இயல்புக்கு அப்பாற்பட்டவர் என்றுதான் அர்த்தம்.ஆரம்ப காலகட்டத்தில் ராஜாஜியுடன் இருந்த நட்பின் நிமித்தம் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து பின்னர் அது தவறு என்று அதில் இருந்து மீண்டவர் பெரியார். தனது முதுமைவயதில் மறுமணம் செய்து கொண்டபோது அதன் காரணமாக கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக ஆனந்தவிகடன் "நாயகன்" தொடர்மூலம் அறிந்துகொண்டேன்.தனது கொள்கைகளை தனக்குப்பின் கட்சியில் பேணுவதற்குத்தான் மறுதிருமணம் பெரியார் செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. நேருவும் காந்தியும் மறுதிருமணமா செய்திருந்தனர் கொள்கைகளைக் காப்பாற்றுவதற்கு? கட்சிக்கொள்கைகளைக் காப்பற்ற முதிர்ந்த தலைவர்களை திருமணம் செய்ய அறிவுறுத்துகின்றாரா பெரியார்? பெரியாரை கடவுளாகக் காண்பவர்களுக்குத்தான் அவர் நூறுவீதம் சரியானவர். மனிதராய் அவரை நோக்கினால் அவரின் கருத்துக்கள் பிழையாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பது விளங்கிக்கொள்ள முடியும். யேசுநதர் சொல்லவில்லையா உலகம் தோன்றி ஐயாயிரம் வருடம் என்று? (விஞ்ஞானம் அவரைப் பார்த்து சிரிக்கின்றது இன்று.)யேசுநாதர் தன்னை வழிபடாதவர்கள் பாவிகள் என்றும் நபிகள் உருவ வழிபாட்டை சிதையென்றும் சொன்னதாக அந்தந்த மதநூல்கள் சொல்வது போல் என்ன குறையை கண்டீர் "அன்பே சிவம்""ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தமிழரின் சைவத்தில்? ( சைவத்தில் வடக்கு கலப்புகள் எமக்கு பாதகமாய் இருப்பின் புறக்கணிப்போம். நல்லவற்றைக் காப்போம். நல்லன எல்லாவறையும் தமிழுக்கு மொழிபெயர்த்து கொண்டுவரச் சொல்லவில்லையா பாரதி?) பெரியாரின் கருத்துக்கள் நூறுவீதம் சரியானதே என்று வாதடின் அவர் கடவுள் ஆகிவிடுவார் கவனம்......கடவுள் கொள்கை எதிர்ப்பாளர்களே! கடவுள் இல்லை என்பதும் கடவுள் இருப்பது என்பதும் அவரவர் நம்பிக்கை. பெரியாரின் நம்பிக்கை கடவுள் இல்லை என்பது. அதில் குறைகாண யாராலும் (கடவுளால் கூட) முடியாது. ஆனால் புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை அமெரிக்காவில் பிறந்தார் என்று கூறியிருந்தால் அதை ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகூட மறுத்துவிடும். கடவுள் இல்லை என்ற ஒரே நோக்கத்தில் கந்தபுராணத்தை வாசித்ததன் விளைவு அதன் பொருள் அவருடைய சிந்தைக்கு எட்டாமல் போயிருக்கலாம்.( இல்லை, அவருக்கு நன்கு விளங்கியிருக்கும். பெரியாரை எதிர்ப்பவன் தான் நான்.அதனால் அவர்மீது கறைபூச முயலுகின்றேன் என்று தாங்கள் கருதின், பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள் பெரியார் ஒரு மனிதரே ஒழிய கடவுள் அல்லர். எனவே பிழையான முடிவுகள் கொள்ளவாய்ப்புண்டு என்பதை.) பெரியார் நூறுவீதம் சரியாகவே செயற்பட்டார், அவர் நவின்றது யாவும் சரியானதே, கடவுள் கொள்கையாளர்களின் கடவுள் மட்டும்தானா நூறுவீதம் சரியாக இருப்பார், எங்கள் பெரியாரும் நூறுவீதம் சரியே என்று கருதின் தர்க்கவாத அடிப்படையில் பெரியார் கடவுள் ஆகி பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கையையே கொலைசெய்துவிடுவார்.வடக்கின் பண்பாடு வேறு. தமிழரின் பண்பாடு வேறு. அதனால்த்தான் கம்பன் வால்மிகியின் இராமாயணத்தை தமிழில் பலமாற்றங்களுடன் எழுதினான். சீதையின் கைகளைப்பற்றியிழுத்து இராவணன் கடத்திச்சென்றதாக வால்மிகி எழுதியிருக்க சீதைமீது இராவணனின் கைகள் படவில்லை, நிலத்தோடு சேர்த்தே சீதையை கடத்தியதாக கம்பனும் எழுதியுள்ளான். இங்கு இராமாயணம் உருவானதே தமிழரை கேவலப்படுத்த என்பதனால் பெரியாரே இராமாயணத்தை எதிர்த்திருந்தார் என்பதை கவனிக்க. எனவே நிச்சயமாக தமிழரின் வழிபாட்டுமுறையான சிவ வழிபாட்டை இராமாயணம் கேவலப்படுத்த தயங்காது. அதிலும் வடக்கரான வால்மிகியின் எழுத்துக்கள் எப்படி தமிழர் வழிபாட்டை ஆதரித்து இருக்கும் என எதிர்பார்க்கமுடியும்? வால்மிகி சிவவழிபாட்டை கேவலப்படுத்தவேண்டும் என்ற சிந்தையில் எழுதாது தான்சார்ந்த பண்பாட்டில் அது தவறாக தெரியாததால் அவ்வாறு எழுதயிருக்கவும் வாய்ப்புண்டு.எனவே தமிழ் வழிபாட்டை வடக்கரின் நூல் கொண்டு சிதைக்க நினைப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்தமுடியாது. கந்தபுராணத்தில் உமை தன்மூலம் முருகன் பிறக்கவில்லை என்று வருந்துவது சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் பிறந்துவிட்டதே என்ற ஆதங்கத்தில் இருக்கலாம். வால்மிகியின் படி கூடலில் நீண்டநேரம் ஈடுபட்டும் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்திலும் கூட இருக்கலாம். ஆனால் கந்தபுராணத்தில் நெற்றிக்கண் மூலம்தான் முருகன் பிறந்தான் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு இருக்க வால்மிகியின் கதையை இதற்குள் கொண்டுவந்து புகுத்துவது படித்தவர்களுக்கு அழகு ஆகாது.

இந்து என்னும் சொல் பாரசீகர் பாரதத்தவர்களை திருடர் என்று குறிப்பிட பயன்படுத்திய சொல். இந்து இந்தியா ஆனது. ஆகவே இந்தியர் என்றால் கள்ளர் என்று பொருள் கொள்ளமுடியுமா? பொருள் கொண்டால் அது எவ்வளவு பெரிய தவறாகிவிடும். எங்கள் தமிழில் புக்கை என்றால் உணவுப்பண்டத்தைக்குறிக்கும். சிங்களத்தில் நிதம்பத்தை குறிக்கும். நான் விருந்தினராக தமிழர் வீட்டுக்கு சென்று அங்கு உங்கள் புக்கையின்று வாய்க்கவில்லை என்று கூற அதற்கு அவர்கள் சிங்களத்தில் "புக்கை" என்ற சொல்லின் பொருளைக் கொள்ளமுடியுமா? அப்படிக் கொண்டுவிட்டால் எவ்வளவு பெரிய ஒழுக்கக்குறைவு ஏற்பட்டுவிடும் எனக்கு!

இதற்குமேல் இதுபற்றி பெரியாரை விமர்சிப்பது அவர்மேல் நான் கொண்டிருக்கும் பற்று "கூடாது" என்று தடுக்கின்றது. என் எழுத்து சாதியற்ற சைவத்திற்குகாய் உழைக்கவிரும்புகின்றது. அதலால் பெரியார்மீதும் விசுவாசம் உள்ளது. தாயில் குறைதேடின் தாயின் பாசம் விளங்காமல் போய்விடும்.திருமந்திரமும் "ஆதிபகவன் முதற்றேயுலகு" என்ற திருக்குறளும் தமிழரின் சொத்துக்கள். சோழன் கட்டிய தஞ்சை கோயில் ஒக்க ஒரு கட்டிடத்தை இன்றுவரை தமிழனால்( வேறு எவராலும் கூட)கட்ட முடியவில்லை. திருவாசகத்தின் முன் விஞ்ஞானம் மெய்சிலிர்த்து நிற்கின்றது. திருமந்திரம் திருக்குறள் ஒக்க ஒருநூலேனும் படைக்க இன்றைய தமிழனால் முடியவில்லை.இது இப்படியிருக்க,அந்த வியப்புக்குரிய முன்னோர்கள் காத்த சைவத்தை சாதியை ஆதரிக்கும் வேதத்தை பொதுநூலாய் கொண்டது என்ற ஒரே காரணத்துக்காக சிதைக்க எப்படித்தான் மனம் விரும்பிற்றோ? . வேதத்தில் உள்ள எல்லாவற்றையும் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. சிவ வழிபாட்டை ஏளனம் செய்யும்(தமிழர் வழிபாடு ஆதல்லால்) வேதப்பகுதிகள் கூட உண்டு. அவற்றை சைவம் புறக்கணித்துத்தான் பொதுநூலாக வேதத்தை ஏற்றுள்ளது. ஆதலால் சாதியை வேதத்தில் புறக்கணிப்பது இயலாத ஒன்று அல்ல. ஒன்றே குலம் என்ற திருமந்திரமே சைவம்.பாரதி ஈழத்திருநாட்டை சிங்களத்தீவு என்று பாடி வரலாற்றுத்தவறுவிட்டுவிட்டான். ஆனால் பாரதியையும் அவருடைய பாடல்களையும் பாலர் பள்ளி தொட்டு பல்கலைக்கழகம் வரை புகட்டுவதுதான் ஈழத்தமிழ்கல்விமுறை. எங்களுக்குத்தெரியும் பாரதி ஒரு மனிதன். பிழைவிடுவது தவிர்க்கமுடியாதது. அவர் திருமந்திரம் சிவபூமி( சிவபூமி என்றால் தமிழர்பூமி என்பதற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகின்றேன்.) என்று கூறியிருக்க சிங்களத்தீவு என்று பாடியது எவ்வளவு பிழை என்பதை நான் சொல்லி யாரும் அறியவேண்டிய நிலையில் இருக்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன். ஆனால் அவர் விட்ட ஒருபிழைக்காக அவருடைய தமிழ்ப்பற்றையும் சாதி எதிர்ப்பையும் அவருடைய தமிழ் பாடல்களையும் புறக்கணிப்பது எங்களுக்குத்தான் நட்டத்தை விளைவிக்கும். பாரதியாருக்கு அல்ல. அதேபோல் பெரியார் பார்ப்பனர் சாதியை கையில் தூக்கிபிடித்திருந்தகாரணத்தால் அவர்களை எதிர்க்கவெளிக்கிட்டு அது மதஎதிர்ப்பாகி அந்தமதஎதிர்ப்பு சிலதவறான கருத்துள்ள அவருடைய எழுத்துக்களுக்கு வித்திட்டுவிட்டது என்று உணரும் திறன் என்னிடம் உண்டு. பெரியார் கடவுள் அல்ல. மனிதர் என்பதிலும் நான் உறுதியாகவேயுள்ளேன். பெரியார் தொண்டர்களும் அவரை அப்படி நோக்குவதுதான் பெரியாருக்கு அழகு சேர்க்கும் முறையாகும். எனவே அவர்காட்டிய நல்லகருத்துக்களை பரப்புவோம். சாதியில்லா சமூகவிடுதலைக்கு போராடுவோம்.பெரியார் பார்ப்பனரைத்தான் சாதியின் வேர் என்று கருதினார். ஆனால் இன்று அவர்கள் அல்ல வேர். பள்ளி அனுமதிப்பத்திரத்தில் சாதிப்பெயர் குறிப்பிடப்படவேண்டியள்ளதே அதுதான் வேர். நாயுடு, செட்டியார், கள்ளர், வெள்ளாளர், பறையர்..............என்பதெல்லாம் பார்ப்பனர் வைத்தசாதிகள் அல்ல. அது தமிழர் தமிழருக்குள் படைத்ததுதான். பார்ப்பன எதிர்ப்பு சாதிக்கொடுமையை தீர்க்கமாட்டாது என்பதையும் உணர்க. எங்கள் வன்னியில் சாதி பெயரைச்சொல்ல எவருக்கும் துணிவுயில்லை. அங்கு தமிழாட்சி நடக்கின்றது. அங்கு இயற்றப்பட்டுள்ள சட்டம் சாதி என்ற சொல்லை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டது. நாளை அப்படிஎன்றால் என்ன என்று கேட்கும் சமூகம் மலரத்தான் உள்ளது.தமிழ்நாட்டை தமிழன் தானே ஆளுகின்றான். வடக்கரா ஆளுகின்றனர்? சட்டமியற்றச்சொல்லுங்கள். பெரியார்பாசறை பிள்ளைகள் தானே நாடாளுகின்றனர்? சாதியை பள்ளி அனுமதிபத்திரத்தில் தடைசெய்யகோரி அவர்களை எதிர்த்து ஒரு உண்ணாவிரதப்போராட்டம் நடத்துங்கள். பெரியார் பெயரை அதற்கு உபயோகியுங்கள். அதைவிட்டுவிட்டு பெரியார் தொண்டார் என்றுகாட்டிக்கொள்ள உங்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் எழுத்துக்கும் சேதத்தைவிளைவிக்காத பார்ப்பன எதிர்ப்பையும் மதஎதிரிப்பெனும் பெயரில் உயர்ந்த தமிழரின் வழிபாட்டுமுறைகளையும் கேவலப்படுத்தல் என்ற இரண்டையும்தான் பயன்படுத்தும் செயல்வீரர்களையா நீங்கள்? பெரியாரின் மதஎதிர்ப்பு சாதிஎதிர்ப்பால் உருவானதென்பதை மறந்து மத எதிர்ப்பு என்று மதஎதிர்ப்பு என்று பெரியார்வேடதாரிகளிடம் சைவசித்தாந்தம் கற்றோரும் திருமுறை வித்தகர்களும் கந்தபுராண பாராயண சான்றோர்களும் கருத்துப்பரிமாற வரவாய்ப்பேயில்லை.

"கல்லாத மூடரை காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்க்கக் கடன் அன்று
கல்லாதமூடருக்கு கல்லாதார் நல்லராம்
கல்லாதமூடர் கருத்தறியாரே"
(திருமந்திரம்)

மேலும் இவ்வாறான சமயநெறிமூலம் ஒழுக்கக்குறைவு எற்படுமென்று பெரியாரின் எழுதாய் எழுதப்பட்டிருந்தது. ஒழுக்கக்குறைவாய் பெரியார் குறிப்பிட்டதற்கும் சைவநெறிக்கும் இம்மியளவும் தொடர்பில்லை என்பது வெள்ளிடை மலையாய் யாவரும் அறிவர். அனால் பெரியார் தொண்டர் என்னும் சத்தியராஜ் (ராஜ் என்று "ஜ்" என்னும் வடசொல் வருவதால் ராசா என்று மாற்றச்சொல்லுங்கள் அவரிடம்) கர்நாடக எதிர்ப்புமேடையில் பேசியதை சக தமிழ்பற்றாளர்கள் கூட ஏற்க்கமறுக்கின்றார்கள். சத்தியராச்சின் மேடையொழுக்கம் பெரியார் பாசறையின் ஒழுக்கம் என்று யாரேனும் பொருள்கொள்ளமுடியுமா? . சத்தியராஜ் என்னும் தனிமனிதர் அளவுகடந்த கோபத்தில்(நியாயமானது தான்) தன்னைக்கட்டுப்படுத்த தவறியதற்கு பெரியாரை பிழைபிடிப்பது முட்டாள் தனமான ஒன்று. சத்தியராஜ் தன்னுடைய பேச்சில் தமிழ்கடவுள் முருகனை கும்பிடு கடவுள் தேவை என்றால் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது பெரியார் அவரைக் கோபித்துக்கொள்ளமாட்டாரா? சத்தியராஜ்சுக்கு விளங்கியிருக்கின்றது பெரியார் ஒரு மனிதர்.அவருடைய எல்லா எழுத்துக்களும் சரியென்று கூறமுடியாது என்று. தமிழ் ஒவியாவிற்கு இனிவிளங்கும் என்று நம்புகின்றேன்.
( கரே ராமா கரே கிருசுணா இயக்கம் இரசியாவில் வெள்ளைக்கார இரசியர்களுக்கு பூணூல் வழங்கி பார்ப்பனராய்யுருவாக்கியுள்ளது. ஆதலால் ஏன் அன்றைய சமயபூசாரிகளாக இருந்த தமிழர்களை இவ்வாறு பார்ப்பனராக்கியிருக்க மாட்டார்கள் என்று ஐயம் என்னுள் முளைவிட்டுள்ளது. சான்றோரே சிந்திக்க.)
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

10 comments: on "பெரியாரும் தமிழர்நெறியும் (தமிழ் ஓவியாவிற்கு ஒரு விளக்கக்கட்டுரை)"

தமிழ் ஓவியா said...

அய்யா
வனக்கம் தங்களின் பதிலைப் பார்த்தேன் ஆரோக்கியமான எந்த விவாத்த்தையும் வரவேற்கிறோம்.

1.தங்கள் பதிலில் "தமிழ் கடவுள் என்று தமிழ் சங்கம் கொண்டாடிய முருகனின் பிறப்பை பெரியாரின் எழுத்தைக்கொண்டு இழிவுபடுத்தியிருப்பது வருந்தவைக்கின்றது. ' என்று வருந்தியிருக்கிறீர்கள்.

இதில் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை . சரி விசயத்திற்கு வருவோம்.
தமிழ் கடவுள் என்று குரிப்பிட்டுள்ளீர்களே முதலில் தமிழனுக்கு கடவுள் உண்டா? தன் வாழ்நாளெல்லாம் கடவுளைப்பற்றி ஆராய்ச்சி செய்த பெரியார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தமிழனுக்கு கடவுள் உண்டா?

உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுளைப்பற்றிக் கவனித்துப் பார்த்தாலும், இவ்வளவு ஆபாசமாக இல்லா விட்டாலும், யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க முடியாமல் அவைகளுக்கு பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய்த் தானிருக்கின்றது. அதாவது, உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன. உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது, கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, அதன்மீது இருந்து கொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு. அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி அவ்வுலகத்திலிருந்து பிர்மாவை சிருஷ்டித்து, அந்த பிர்மா அந்த உலகத்தை இரண்டாக்கி ஒன்றைச் சுவர்க்கமாகவும், மற்றொன்றை பூலோகமாகவும் செய்து, அந்த பூலோகத்தில் பஞ்ச பூதங்களையுண்டாக்கி, பிறகு மனிதர், மிருகம், பட்சி முதலிய ஜாதிகளை சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல அடுக்கடுக்காக எப்படிச் சொல்லிக் கொண்டே போகின்றதோ, அதுபோலவே தான் கிறிஸ்து முதலிய இதர மதங்களிலும் கடவுள் முதல்நாள் ஒன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன்றைச் சிருஷ்டித்தார் என்பதுபோலவே சொல்லிக் கொண்டு போகப்படுகின்றன.

ஆகவே, அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டியைப்பற்றிச் சொல்லுகிற விஷயம் எல்லா மதத்திலும் ஒன்று போலவேதானிருக்கின்றன. இவை ஏன் இப்படியிருக்கின்றன என்று பார்ப்போமேயானால், கடவுள் உண்டு என்பதற்கு சமாதானம் சொல்லும் போது, உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, அதற்காக கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப்பட்டவையென்பதை முதலில் இன்னதையுண்டாக்கினார் இன்னார் என்பதாகச் சில மதமும், முதல் நாள் இன்னதை யுண்டாக்கினார், இரண்டாவது நாள் இன்னதையுண்டாக்கினாரென்பதாகச் சில மதமும் சொல்லுகின்றன. ஆகவே, இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்றுபோலாகவேதானிருக்கின்றன. இதில் ஏதாவது தகராறு ஏற்படுமானால் எல்லா மதக் கடவுளுக்கும் ஒரே கதிதான் நேரும். கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படுவதற்குக் காரணமென்னவென்று பார்ப்போமானால், முதன் முதலாக ஆரிய மதத்திலிருந்து சீர்திருத்தமாக கிறிஸ்தவ மதமேற்பட்டதும், அதிலிருந்து சீர்திருத்தமாக மகம்மதிய மதமேற்பட்டதும் நமக்குக் காணப்படுகிறபடியால், எல்லா மதமும் அதையே பின்பற்றிக்கொண்டு வருவதாயிற்றே தவிர வேறில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால், நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமானால், "கடவுள்" என்கின்ற பதமே கட+உள் = (கடவுள்) என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர, வட மொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பது போன்ற பகவான் காட் (படின) அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான அர்த்தத்தைக் கற்பிக்கக் கூடியதான வாக்கியமோ, தமிழில் இல்லையென்பதை உணர வேண்டும். தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் "கடவுள்" உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும். அது மாத்திரமல்லாமல், ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம், எத்தீஸ்ட், நாஸ்திகம், நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கும், கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும். ஆகவே, அவற்றிலிருந்து தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கும்) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமுமிருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும். இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்கு உள்ள தமிழ்ப் பதம் என்று பண்டிதர்கள் சொல்லக் கூடுமானாலும் அது அரசனுக்கும், தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர, கடவுளுக்காக ஏற்பட்ட தனிப் பொருளமைந்த சொல் அல்லவென்றே சொல்லுவோம். ஆனால், கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன், பெரியவன் எனினும் பொருந்தும் என்று சப்புக் கட்டலாமேயொழிய அது அதற்கே ஏற்பட்ட தனி வார்த்தை ஆகாது. நிற்க; தமிழ்நாட்டில் பலர் காலம்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களை கீர்த்தியாலும் வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றபடி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரமன், பிள்ளையார், சுப்பிரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக்கூட இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்குத் தோன்றும் ஆதாரம் என்னவென்றால், இப்போது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்களெல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமானதாகும். ஆனால், வடமொழிப் பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து அந்தக் கடவுள்களை தமிழில் அழைப்பதைப் பார்க்கின்றோம். என்றாலும், இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை. இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வட மொழிப் பெயர்கள் உடையதாகவும், அவற்றின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திர புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல், தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை. இவற்றுக்கு செய்யப்படும் பூசை முதலியவையும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி, வடமொழிப் பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவையாகும். தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலியவை பாடினதும், மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும், ஆகிய எல்லாம் வடமொழிப் பேர் கொண்ட கடவுள்களைப் பற்றியும், அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழிப் புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவை தமிழர்களோ அல்லது தமிழ் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை; பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை. மற்றும், சமயக் குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம். வேண்டுமானால் அதை தமிழில் - விபூதியை திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனாலும், அது சரியான மொழி பெயர்ப்பல்லவென்று சொல்வதோடு, விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன். விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது. ஆகவே, தமிழில் காட், அல்லா, பகவான் என்பவற்றைக் குறிப்பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்கு தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத்திலுள்ள கடவுள்களும், பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும்கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப்பவை எல்லாம் வடமொழியில் இருந்து தமிழர்கள் எடுத்துக்கொண்டு தங்களுடையனவாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.- கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜ ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமை முடிவுரை (குடிஅரசு, 29.6.1930).

உங்களது மொத்த வாதமும் இந்த ஒரே கட்டுரையில் அடிப்பட்டு போய்விட்டது.
யாரையும் புன்படுத்தவேண்டும் என்ர அடிப்படையில் நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை. மக்களை பன்படுத்த வேண்டுமென்றஅடிப்படையிலும் மானமுள்ள தமிழனை உருவாக்கும் தன்மையில் எங்கள் பணி இருக்கும்.

உங்க பதிவில் பின்னூட்டம் போட சிரமமாயிருக்கிறது.

மாயா said...

வணக்கம் நன்பரே உங்கள் வலைப்பதிவுகள் தமிழ்மணம் திரட்டியில் திரட்டப்படுகிறது இது கண்டு மிக்கமகிழ்ச்சி அடைந்தேன் . . .

வாழ்த்துக்கள்

என்னுடன் தொடர்புகொள்ளவேணுமெனில் mayunathan@gmail.comக்கு தொடர்புகொள்க

சிவத்தமிழோன் said...
This comment has been removed by the author.
சிவத்தமிழோன் said...

FPRIVATE "TYPE=PICT;ALT=Blogger" சிவத்தமிழோன் said...
ஐயா, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
கம்பன் வீட்டுக்கட்டுத்தடியும் கவிபாடும் என்பர். திரு ஆறுமுகநாவலர் வீட்டுப்பிள்ளை ஐயா நான். அதை கீழே என் எழுத்து நிறுவிக்கும் என நம்புகின்றேன்.

1) உங்கள் பின்னூட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள பெரியாரின் உரை 1930இல் இடம்பெற்றுள்ளது. ஆனால் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்ற ஆராய்ச்சித்துணிபு அண்மையில் பெறப்பட்டது. ஆகவே சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் கூட்டத்திடம்(திராவிடர்) சைவவழிபாடு நிலவியுள்ளது என்பதற்கான சான்றுகள் உண்டு. ஆரியரின் படையெடுப்பால் சிந்துவெளித்திராவிடர்(தமிழர்) தெற்குநோக்கி புலம்பெயர்ந்துள்ளனர்.(அதற்கு முதலிலிம் தெற்கில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு.)

2)G.U. Pope in his work Thiruvasagam writes as follows:

Saivism is the oldest prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times.3)Origin of Saivism dates back to the pre-historic period. For a long time it was thought that Saivism developed during the Vedic period. The Mohenjadaro-Harappa excavation of the twentieth century gives clear indication of Siva worship and Saiva religion in existence before the Vedic period. They also suggest the also of Dravidian origin. Following statement of the scholar Sir John Marshall acknowledgesthis view:

Among the many revelations that Mohenjadaro and Harappa have in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivism has a history going back to the chalcolithic age or perhaps even further still, and that it takes place on the most ancient living faith in the world.4)The Saiva Philosophy is the choicest product of the Dravidian intellect. It is the most elaborate, influential and undoubtedly the most intrisically valuable of all religions of India. It is peculiarly the South Indian and Tamil Religion. - (Dr.G.U. Pope)

எப்போதும் தமிழனுக்கு உள்ள பழக்கம் என்னவென்றால் தன்வரலாறையும் தன்புகழையும் இன்னொருவன் வாயிலாய்த்தான் அறிந்துகொள்ளுவான். அதுவரை எதுபற்றியும் அக்கறை கொள்ளான். ஜி.யு.போப் என்ற கிருத்தவ வெள்ளைத்தோல் பாதிரியார் (2),(4) சிந்துவெளி கண்டுபிடிப்புகளுக்கு முன்னமே ஆரியர் வர முன்னமே சைவம் தமிழ்நாட்டில் சிறந்துவிள்ங்கியது என்றும் சைவம் தமிழரின் மிகச்சிறந்த பண்பாட்டுசிறப்பென்று தெளிவாக கூறியுள்ளார். அந்த வெள்ளைக்காரபாதிரி சைவத்தை தமிழர்நெறி என்று கூறியும் விள்ங்காத தமிழர்களிடம் என்னத்தை நான் நவிலமுடியும்?

சிந்துநதி ஆய்வுகளை மேற்கொண்ட சேர்.ஜொன். மார்சல் கூற்றில் (3)இருந்து சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் (ஆரியர்வருகைக்கு முன்னரே சைவம் நிலவியுள்ளது. அரியவருகைக்கு முன் திராவிடந்தான் இருந்ததென்று விளக்கத்தேவையில்லை.)என்று நீங்கள் உணரலாம்.

இன்று இரசாயனவியல் பாடத்தில் பயன்படும் ஆவர்த்தன அட்டவணை பற்றி நீங்கள் அறிந்திருக்கவாய்ப்புண்டு. அவ் அட்டவணைக்கு முதல் பல அட்டவணைகள் ஒன்றன்பின் ஒன்றாக பயன்பாட்டில் இருந்தன. இதற்கு முண்ணர் இருந்தது பிழையென்று நிறுவிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே இன்று உள்ள அட்டவணையாகும். இப்பொழுது பழைய அட்டவணைப்படி இரசாயன சமநிலைச்சமன்பாடுகளை தீர்க்கவெளிக்கிட்டால் எவ்வளவு முட்டாள்த்தனமாகும்.1930இல் (ஜி.யு.போப் கூறியதை அறியாமல் கருத்துச்சொன்ன) பெரியாரின் தமிழரிடம் கடவுள் கோட்பாடு இல்லையென்ற கருத்து சிந்துவெளி ஆய்வின் பின்னர் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகிவிட்டது.

சமசுகிரத சொற்கள்தான் சைவசமயவழிபாட்டில் உண்டு என்ற உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் தற்கால சென்னையை வைத்தே இதற்குவிடையளிக்கலாம். வலது, இடது என்ற சாதாரணதமிழை மறந்து ரைட்டு லெவ்டு என்று சொல்லும் முச்சக்கரவண்டிக்காரன் சர்வசாதாரணமாம் சென்னையில். இப்படித்தான் ஐயா அன்று தமிழன் தமிழில் எழுதவிரும்பாது சமசுகிரதத்தில் எழுதினால்தான் சிறப்பு என்று எண்ணி தன்னைமறந்துயிருந்த காலமது. தமிழில் இருந்த ஆகமங்களை எல்லாம் சமசுகிரதத்திற்கு மாற்றிவிட்டு தமிழ்மூலநூற்களை கவனிப்பாரன்றி கைவிட்டுவிட்டான். அவை அப்படியே அழியும் நிலையை எய்தின. ஏன் வேதங்களுக்கு கூட தமிழ்மூலம் இருந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
இதை நீங்கள் ஏற்க்கமறுத்தால், வ.வே.சு ஐயர், சி. வை. தாமோதரம்பிள்ளை ஆகியோர் தெருத்தெருவாய்த்திரிந்து தமிழ் ஏடுகளைத்திரட்டி தந்திருக்காவிட்டால் திருக்குறள் தொட்டு சிலப்பதிகாரம் அடங்கலாய் இன்று எம்கையிற்கு எட்டியுள்ள அத்தனை தமிழ் நூல்களும் அழிந்திருக்கும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. அவ்வாறு அவர்கள் திரட்டியிராவிட்டால் தமிழன் இலக்கியவளம் இல்லாதவன்......பண்பாட்டில் பிந்தங்கியவன் என்று நீங்கள் நவில வாய்ப்புண்டு!

ஏன் ஆரியபற்றுக்கொண்டிருந்த தில்லை பார்ப்பனர்கள் தமிழ் தேவாரங்களை அழிக்கத்துணியவில்லையா?
இன்று மட்டுமல்ல அன்று தொட்டே தமிழனிடம் மொழிப்பற்று இல்லாமல் போனது உண்மைதான். தமிழனிற்கு தன் மொழியைவிட பிறமொழிகள் மீது காதல் கொள்வது இயல்பான ஒன்றே என்று வருத்தத்துடன் ஒப்புக்கொள்கின்றேன்.

பெரியார் மதத்தை எதிர்க்கவில்லை மனதளவில் சாதியைத்தான் எதிர்த்தார் என்பதை இசுலாமிய மதத்திற்கு மாறியவர்களிடம் சென்று அவர்கள் செய்தது சரியென்று ஆற்றியவுரை தெளிவாக்கின்றது.( ஏன் அடிக்கடி தன் முடிவுகளை மாற்றினார் பெரியார் என்றுவிளங்கவில்லை எனக்கு. உங்களின் பின்னூட்டத்தில் தந்திருக்கும் பெரியாரின் உரையில் எல்லா மதங்களுமே தவறான கொள்கையுடையன என்று கூறியுள்ளார். இசுலாம் மதத்திற்கு மாறியவர்களையும் ஆதரிக்கின்றார். ஏன் அவர்களை மதஎதிர்ப்புவாதிகளாக பெரியாரால் மாற்றமுடியவில்லை? இப்படி பல கேள்விகள் என்னுள். அவர் சாதிக்கொடுமையை எதிர்க்கவெளிக்கிட்டு அது தமிழனின் சொந்தமதம் மீதான எதிர்ப்பாகி அவர் கண்கள் தமிழர்நெறி.......விஞ்ஞானம் மெச்சக்காத்திருக்கும் நெறி( இன்று திருவாசகத்தின் திருவண்டப்பகுதி தொட்டு அத்தனை சிறப்புக்களையும் விஞ்ஞானம் கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றது.) என்னும் உண்மைகளை காணதடுத்துவிட்டன.

ஆரியர் வருகையால் சைவம் வேதநெறியாகி, பின்னர் வேதநெறிகளில் ஒன்றாகி இன்று உங்கள் எல்லோருக்கும் அது தமிழர்நெறி என்று வெள்ளைக்காரர்கள் வந்து விள்க்கும் நிலை!

பகுபதம் பகாப்பதம்( கடவுள்) உதாரணம் நன்றாய்தான் இருந்தது.சிவம் பகுக்கமுடியாத பச்சைத் தமிழ்ச்சொல்.( நிறைய சைவக்கடவுள்களின் பெயர்கள் தமிழ் அல்ல என்று சொன்னீர்கள். சிவன், உமை, முருகன்,வள்ளி......என்று அடுக்கிக்கொண்டு போகமுடியும். ஆரியரும் சைவத்தை சில மாற்றங்களுக்கு உள்ளாக்கி வழிபட்டதால் அவர்களும் எமது கடவுளருக்கு பெயர்வகைக்க வேண்டிய தேவையேற்படுவது நியாயம் தானே? ஜீசஸ் யேசுநாதர் என்றும்.....மேரி.....வீபூதி(?)த்திருநாள்...........யேசுநாதருக்கு தேராட்டம்.......கொடியேற்றம் என்று கிருத்தவம் தமிழில் கலக்கும் போது இவ்வாறு மாற்றத்திற்கு உள்ளாகவில்லையா? இசுலாத்தில் கூட கொடியேற்றம் ......என்று பல.......உண்டு என்று அறிந்தேன். அவர்கள் வைத்தபல பெயர்கள் நம் வழிபாட்டு முறைக்கு வந்துள்ளது.( ஆரியக்கலப்பு உண்டு......ஆனால் சைவம் ஆரியத்தின்னுடையதல்ல. சரி ஆரியக்கலப்பு என்றும் ஒரு வாதத்திற்கும் அது ஆரிய மதமென்று வைத்தாலும் பெரியார் இசுலாத்தை ஆதரித்தத்து உரையாற்றியது எவ்வகையில் நியாயமாகும்.......இசுலாம் என்ன தமிழன் உருவாக்கிய மதமா?
பெரியார் சாதியால் சமயத்தை எதிர்க்கவெளிக்கிட்டு சமயத்தில் தெளிவில்லாத முடிவுகளுடன் தடுமாறினார் என்பதுதான் அவருடைய காலத்துக்கு காலம் மாறிக்கொண்டிருந்த பேச்சுக்கள்.
இனி மீண்டும் சிவன் விடையத்திற்கு வருவோம். சிவன் என்பது ஒன்றே அன்று கடவுளாக இருந்ததால் கடவுள் என்ற சொல்லுக்கே தேவையேற்ப்படவாய்ப்பில்லை. கடவுள் காத்தார் என்பதற்கு பதிலாக சிவன் காத்தார் என்றே நவின்றிருப்பர் அன்றைய தமிழர். ஏன் அதிஷ்டம் என்பதற்கு கூடதமிழில்லை என்றே நான் கற்பிக்கப்பட்டேன். அதற்காக தமிழர் அதிஷ்டத்தை எதிர்பார்க்காமலா அன்று இருந்திருப்பர். அதற்குப்பதிலாய் ஆரம்பகாலத்தில் சிவன் உதவுவார் என்றும் பின்னர் கடவுள் என்ற சொல் பிற்ந்ததும் கடவுள் உதவுவார் என்றும் நவின்றுயிருப்பர். அதிஷ்டம் அறிமுகமாக அதனைத்தொடர்ந்துயிருப்பர்.
கடவுள் என்றசொல் தோன்றியிராவிடின் இது கிருத்தவவேதம்(கிருத்தவமறை), இது இசுலாமியவேதம்(இசுலாமியமறை) என்பதுபோல் இது கிருத்தவசிவன்.....இது இசுலாமியசிவன்.....என்றுதான் சொல்லும் நிலையிருந்திருக்கும். நலல காலம்!

என் எழுத்து என் முகவரியை நிறுவியிருக்கும் என்ற துணிபோடு விடைபெறுகின்றேன்.

(நானும் உங்கள் வலைப்பூவில் பின்னூட்டமிட முயன்று இயாலாத தன்மையினாலேயே என் வலைப்பூவில் பிரசுரிக்கவேண்டியதாயிற்று. என் வலைப்பூ உங்களுக்கு பின்னூட்டச் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு மன்னிக்கவும்.)

ஆங்கிலத்தில் உள்ள (2), (3), (4) ஆகியவை http://www.geocities.com/shivaperuman/
இல் இருந்து எந்தவித மாற்றங்களும் இன்றி பிரசுரிக்கப்பட்டுள்ளது.)

சிவத்தமிழோன் said...

தோழமையோடு தோள் கொடுக்கும் மாயா, நீங்கள் வழங்கும் ஊக்கத்திற்கு கடமைப்பட்டுள்ளேன். உங்களுடன் விரிவான கடிதத்தோடு மின்னஞ்சலில் விரைவில் தொடர்பு கொள்ளுகின்றேன்.

சிவத்தமிழோன் said...

http://www.sivankovil.ch/?pn=sangath_thamil
இற்கு சென்று கி.மு 2500 வருடத்தில் கிடைக்கப்பெற்ற பழந்தமிழ் பாடலைக்காண்க.( பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சைவமும் தமிழும் ஒன்றோடு ஒன்று கூடிக்குலாவியது என்பதை விளக்கத்தேவையில்லை மேலும். ஆயினும் இணையத்தளத்தில் கி.மு.2000 வருட இந்தப்பாடலை நான் கண்டு களிப்புற்றதால் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு இணங்க தருகின்றேன்.

பிற்குறிப்பு-
என்னுடைய எழுத்தில் ஏற்பட்டுள்ள பின்னூட்டத்தில் எழுத்துப்பிழைகளுக்கும் வசன அமைப்பு பிழைகளுக்கும் வருந்துகின்றேன்.(முண்ணர்=முன்னர்.......). மன்னித்துக் கொள்க.

கோவி.கண்ணன் said...

பெரியாரை நொந்து கொள்ள ஒன்றும் இல்லை. அவர் 90 விழுக்காடு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்றே நினைக்க்றேன். தமிழ் கடவுள்கள் பற்றி அவர் சொன்னது 10 விழுக்காடு சரி இல்லாமல் இருக்கலாம்.

கண்ணகிக் கதையாக இருந்தாலும் அதை 'கற்பின்' இலக்கணமாக கூறும் போது இளங்கோவனுக்கோ, அதனால் சிலப்பதிகாரத்துக்கோ என்ன பெருமை ? பெண் அடிமைத்தனத்துக்கு பயன்படும் சொல் தானே கற்பு. சிலப்பதிகாரத்தின் நோக்கம் அதுவல்ல என்றே புரிந்தாலும், அதைவைத்து வதைக்கப்பட்டது பெண்ணினம் தானே ? எதுவும் மூலப்பொருள் சிதைக்கப்படும் போது காலப் போக்கில் முற்றிலும் சிதைந்து போகும். கற்பு என்ற சொல்லைச் சொல்லாமல் சிலப்பதிகாரக் கதையை சிறப்பு என்று இலக்கியச் சுவையை மட்டுமே சொல்லிக் கொண்டு போக முடியுமா ? முடியாது என்றே நினைக்கிறேன். அதனால் தான் சில நல்லவைகள் இருந்தாலும் இவை காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் என்று முற்றிலும் நிராகறித்தார் பெரியார். சைவம் தமிழர்களுடையது என்று என்னதான் வாதாடி தமிழருக்கு அது பெருமையானது என்று சொல்ல முயன்றாலும், தமிழ் கோவில் வாசலில் பார்பனர்களின் கால அடியில் கிடக்கும் வரை, புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்ற வேளையில் சைவ தமிழ், பக்தி தமிழ் என்பதால் என்ன பயன் ?

பலகட்டுக்கதைகள், சில நல்லகதைகள் உள்ள ஒரு நூலை எந்தவகையில் சேர்ப்பது ? பெரியார் மோசமான நூலாகவே பார்த்தார், அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் தமிழ்பற்றாளராக, சைவ பற்றாளராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டியது பெரியாரிடம் அல்ல, தமிழ் ஒரு நீசபாசை, கருவரையில் பயன்படுத்தினால் தீட்டு என்று சொல்லும் தமிழ் தூற்றிகளிடம் தான். அதனை சரிசெய்தால் பெரியார் என்ன சொல்கிறார் என்றெல்லாம் யாரும் பார்க்க மாட்டார்கள்.

சிவத்தமிழோன் said...

ஐயா, நீங்கள் எடுத்தியம்பியதில் நியாயம் உண்டுதான். ஆனால் சில விடயங்களில் சிலவற்றை இழந்துவிட்டோமானால் ஒன்றுமில்லா அநாதைகளாகத்தான் நிற்கவேண்டிய சூழல் வரும். சைவம் அழிந்துவிட்டால் தமிழ் எனும் மொழி இருக்கும் என்று எதிர்பாராதீர்.
இலங்கையில் புத்தளம் என்றொரு பிரதேசம் உண்டு. அங்கு கிருத்தவம் பரப்பப்பட்டது.அந்தக் கிருத்தவத்துடன் சிங்கள அரசு சிங்கள மொழியை அறிமுகம் செய்தது.இன்று அங்கு தமிழ் அழிந்து முற்றுமுழுதாக சிங்களவர் ஆகிவிட்டர். இலங்கையில் தமிழர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பை புறக்கணிப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டு செயலாக்கப்பட்டபோது, கத்தோலிக்கதிருச்சபை தமது அரசியல் ஆதாயத்திற்காக வாக்களிக்குமாறு கிருத்தவரை வேண்டிநின்றது. விளைவு கிருத்தவம் தழுவிய தமிழர் கூடுதலாக உள்ள பிரதேசங்களில் வாக்குகள் குறிப்பிட்டளவு பதியப்பட்டன. அதேவேளையில் இந்திய சுமார்த்த பார்ப்பனீய அடிவருடிகளான சிலர் வாக்களிக்குமாறு கொக்கரித்தனர். எந்தப்பயனும் ஏற்படவில்லை. காரணம் சைவம் என்பது தமிழின் அடையாளம். அது தமிழின் தலைமையில்லை என்பதில் சைவர் தெளிவுடன் இருந்தனர்.
இங்கு நான் இதைக் குறிப்பிடுவது ஏன் எனில், சைவம் நாளையில்லாவிட்டால் இத்தாலிக்கு அடிமையான இனமாக தமிழர் மலருவர். சமசுகிரதம் என்று அலட்டிய நாம் அரபை போற்றி துதிப்போம். அப்போது முட்டாக்கு போட்டு பெண்ணை வீட்டில் இரு என்றதற்காகவும் சாத்தானுக்கு கல்லேறிதல் என்று ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து மாண்டு புனிதப் பயணத்தில் இறந்ததாய் அலட்டுவதையும் எதிர்க கருத்து சுதந்திரத்திற்கே இடமில்லாத மானிட குலமாகத்தான் தமிழினம் மலரும்.
தாயில் காயமிருந்தால் குணப்படுத்துவதுதான் முறை.தாயை துறப்பதல்ல.

பார்ப்பனர் ஆரியர் என்ற கருத்து நிலவுவது உண்மை. நானும் ஏற்றுள்ளேன். ஆனால் அவர்கள் ஆரியர் அல்லர். திராவிடரே பார்ப்பனராய் மாறினர் என்ற வாதமும் இருப்பதை மறக்கக்கூடாது.இரசியா வெள்ளையரை பார்ப்பனராக்கியுள்ளமை சிந்திக்கத்தூண்டுகின்றது.எனினும் தமிழ் வழிபாடு அவசியமானதே. அதனை பார்ப்பனர் புறக்கணிப்பது அவர்களின் அறியாமை. போராடுவோம். சட்டம் இயற்றுவோம். அதைவிட்டுவிட்டு அது கூடாது இது கூடாது என்று பெரியார் கூறியதை ஓலமிடுபவர்கள் என்னைப் பொருத்தவரைக்கும் பாதுகாப்பாக இருந்து பெரியார் வேடம் போடும் வேடதாரிகள்.
தமிழ் நாட்டை மாறிமாறி ஆள்வது பெரியார் பண்ணையில் வளர்ந்தவர்களே.அதுவும் இப்போது ஆள்வது பெரியார் பெயரை சுவாசிப்பவர்கள். எனவே பெரியாரின் மூலக் கொள்கையாக இருந்த சாதியை நீக்க சட்டமியற்றச் சொல்லுங்கள் பள்ளி அனுமதிப் பத்திரத்தில் சாதி பெயரை நீக்கச்சொல்லி. அது அவர்களுக்கு முடியாது. மத்திய ஆட்யால் ஏதேனும் தலையீடு வரும் எனின் மத்திய அரசை எதிர்த்து போராடச் சொல்லுங்கள்( காந்திய வழியில்தான்). இவற்றுக்கு பயம்!!!!!!

பெரியாரின் மூலக் கொள்கை சாதி ஒழிப்பு. சமய ஒழிப்பல்ல. மறந்துவிடாதீர்கள். மூலப் பொருள் சிதைந்து போகின் முற்றிலும் சிதைந்து போகும் என்றது உங்களுடைய வாக்குத்தானே!

கருத்துச் சுதந்திரம்......சிந்திக்கும் சுதந்திரம் உள்ள பண்பாடு எங்கள் பண்பாடு. பிழைகள் இருப்பின் திருத்துவோம்.பெரியார் தமிழகத்தில்(இந்தியாவில்) பிறந்ததால் நாத்தீகவாதியாகும் உரிமை அவரிடம் இருந்தது. சவூதி அரேபியாவில் பிறந்திருந்தால்?
டாவின்சி கோட் எனும் திரைப்படம் வந்தபோது கருத்து சுதந்திரத்தை இன்றைய காலத்தில் மேலத்தேயம் கொண்டிருப்பதால் தடை விதிக்கவில்லை அங்கு. ஆனால் இந்தியா.......இலங்கையில் தடைவிதிக்கப்பட்டது. ஏன் மற்ற சமயத்தவரை மதிக்கும் காரணத்தால் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றவிரும்பி. எனெனில் அன்பே சிவம் என்ற பண்பாடு ஆள்மனதில் இருப்பதுதான்.உலகில் உள்ள எல்லா சமயங்களும் கூடிவாழும் நாடாக இந்தியா இருப்பது எப்படி? அன்பே சிவம் எனும் பண்பாட்டில் வளர்ந்ததால்.
மசுதி இடிப்பது பிழை. பிளையார் சிலை உடைப்பது சரி. என்ன நியாயம் ஐயா இது?( மசுதி இடிப்பை கிஞ்சித்தும் ஏற்கவில்லை நான். அது வட இந்தியரால் அவர்களுக்கு அவர்களே ஏற்படுத்திய அவமானம்.) நாத்தீகம் யாரேனும் கொள்கையாயின் அது தவறில்லை. ஆத்தீகரின் கடவுள் சிலையுடைப்பு என்பது கீழ்தரமான செயல். அதுசரி............பிள்ளையார் தமிழ் கடவுள் இல்லை என்று அவர் சிலையுடைத்தால் யேசுநாதர் தமிழ் கடவுளா என்ன? மசுதி இடிப்பை தங்கள் கடவுள் இல்லைஎன்று வடநாட்டார் நியாயம் செய்ய வாய்ப்பளிப்பதல்லவா பிள்ளையார் சிலையுடைப்பு?

கற்பு என்று பெண்ணுக்கு அதிகமாக எங்கள் சமயப் பண்பாடு ஏற்றிவிட்டது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் பெண்ணை வீட்டுக்குள்ளேயே பூட்டிவைத்த அரேபிய இசுலாத்தை தமிழர் இசுலாத்திற்கு மதம்மாறியவேளை பெரியார் சென்று ஆமோதித்தது எவ்வகையில் நியாயம்?
இரசியாவில் நேரே பார்கிறேன் அய்யா, கணவன் அயல்நாடுகளிற்கு வேலைக்கு சென்றுவிட மாதக் கணக்கில் இந்தியரையும் இலங்கையரையும் சக இரசியா நண்பர்களையும் மணமகனாய் ஆக்கிக் கொண்டுள்ள பண்பாட்டை. ஆணும் மது அருந்தலாம்.பெண்ணும் அருந்தலாம்.இதுதான் இரசியா. ஆனால் இந்த சமத்துவம் பிள்ளைகளைப்பற்றி அக்கறையற்ற பெற்றோரை உருவாக்கியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளால் ஏற்படுத்தப்பட்ட கொலைகளால் அமெரிக்கா நடுங்கவில்லையா? ( அண்மையில் தமிழகம் கூட நடுங்கியுள்ளது இதனால்.) இதுதான் தமிழகத்தில் வேணுமா?

பெண்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களான வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம் என்பன இன்று தமது நோக்கத்தையே இழந்துவிட்டன. அவை தவறாக பயன்படுத்தப்படுவதாக தீர்ப்பில் நீதிபதி கூறும் அளவிற்கு இன்று தவறாக பயன்படுத்தப்படுகின்றன.(கேரள நீதிமன்றத்தீர்ப்பு. தனது தவறான உறவை மறைக்க கணவன் மீது கொடுத்த பொய்யான வழக்கு அம்பலமானபோது வழங்கிய தீர்ப்பு)
மகளீர் காவல் நிலையங்களை ஜெயலலிதா அரசு அறிமுகம் செயதது. நோக்கம் பெண்களை பாதுகாக்க. குடும்பபிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க. ஆனால் இன்று பெண் காவல்துறையினர் அவ்வாறு இல்லை என்று குங்குமம் 31-07-2008 இல் விபரமாக குறிப்பிடப் பட்டுள்ளது.பல குடும்பங்களை வேண்டுமென்று பணம்வாங்கி பிரித்துள்ளனர் காவல்த்துறையினர். இது பெரிய விழுக்காடே ஒழிய சொற்பம் அல்ல.
இப்போது நான் கேட்பது உருவாக்கப்பட்ட சட்டங்கள் முறையாக இல்லாமல் போனதால் சட்டதிருத்தத்தை ஏற்படுத்துவீர்களா அன்றி இந்திய அரசியலமைப்பையே தூக்கி எறிந்து நாட்டைவிட்டு வெளியேறப் போகின்றீர்களா?
பெண் காவல் துறையில் தவறானவர்களை நீக்கப்போகின்றீர்களா அன்றி பெண் காவல்துறையையே இல்லாமல் செய்யப் போகின்றீர்களா?

இப்போது புரியும் என்று நம்புகின்றேன் எங்கள் பண்பாட்டு நெறிபற்றி. அர்த்தநாதீசுவரராக இறைவனைக்காட்டிய ஆணும் பெண்ணும் சமம் என்றது எங்கள் பண்பாடு. நீங்கள் சுற்றுலா செல்கையில் பாரமான சுமைபொதிகளை நீங்கள் தூக்குவீர்களா அன்றி உங்கள் மனைவியா? ஆண்கள் தூக்குவதே அழகு.முறை.
அதுபோல்த்தான் சமயமும் இவையிவை ஆணுக்குரித்து இவையிவை பெண்ணுக்குரித்து என்று வகுத்தது. இவையிவை பொதுவென்றது. ஆராய்ந்து பார்த்தால் அதற்குள் ஆயுர்வேதம் தொட்டு அடிப்படை சுகாதாரம்வரை அத்தனையும் இருக்கும்.
பாட்டிக்கு 90வரை மருந்துக்கும் கூட காய்ச்சல் வராது. நாம் ஆங்கில லிவ்கோ அகராதி போன்ற தடித்த அளவில் ஒரு பெரியகட்டு புத்தகம் போன்று மருந்துசீட்டுகளையும் மருத்துவறிக்கைகளையும் கொண்டுள்ளோம். ஏன்?
விளக்கக் கடினமாக இருக்கா?

பி.கு-'சட்டம்-காவல்த்துறை" இற்கு விடையளிக்க முயற்சிக்க. நீங்கள் பெற்றுக்கொள்ளும் விடைதான் எல்லாவற்றுக்கும் பொருந்தும் விடை.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

உங்களுடைய கருத்துகள் என்னை கவருகின்றன.பெரியார் இந்து மதத்தின் சில குறைபாடுகளை எதிர்க்கப் போய் முழுவதுமாக அதை எதிர்த்து விட்டார்.பாவம் அறிவில் சிறந்தவர்கல் இப்படிதான் சில சமயங்களில் அறிவை இழந்து விடுகிறார்கள்...

Post a Comment