"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Tuesday, December 4, 2012

தமிழின் தாய்மொழி - பாபா சொல்ல பூரித்த தமிழர்!

ஒரு இனம் தனித்துவமாக வாழ்வதற்கு நாடு தேவையில்லை! ஆனால் தனித்துவப் பண்பாடுகள் சிதைவுறாமல் பேணப்படுவது முதன்மையானது! உதாரணம் யூதர்கள்!
இதை உணர்ந்துதான் திராவிடநாடு கேட்ட தமிழினத்தின் தனித்துவப் பண்பாடுகளை சிதைத்து, இந்துத்துவ சாகரத்துக்குள் அனைவரையும் மூழ்கடிக்கச்செய்வதே இந்தியத்தேசியவாதிகளின் கனவு!
சைவம்-வைணவம் என்கின்ற பாரம்பரியங்களை மெதுவாக சிதைத்து சாம்பார் இந்துமதத்துக்குள் தமிழரை அழைத்துச்செல்வதே இந்தியத்தேசியவாதிகளின் குறி!!
என்றேனும் ஒருகால் தமிழரில் சிலருக்கு பழைய கனவில் பற்றுவந்தால், இந்துமதம் என்கின்ற சொல்லை வைத்து பெரும்பான்மைத் தமிழரை அச்சிலரில் இருந்து பிரிப்பதுவே சாம்பார் இந்துமதத்தின் நோக்கம்!
அதனால்த்தான் தமிழ்த்திருமுறைகளுக்கு ஆலயங்களில் தடா! தனியார் இந்துப்பாடசாலைகளில் வழிபாட்டுநேரத்தில் தமிழ்த்திருமுறைகளுக்கு பொடா!
இதற்கு பாபாக்களும், அம்மாபகவான்களும் பெரும் உதவி!

ஏழைக்கு வீபூதியும் அரசியல் தலைவர்களுக்கும் வெளிநாட்டு முகவர்களுக்கும் பிரபல்யங்களுக்கும் தங்கச்சங்கிலி!!!! என்னே கொடுமை!
இந்தக் கொடுமைக்கு தெய்வீகசாயம் வேறு!
சிலர் பாபாவின் போதனைகள் நன்றாகவுள்ளது என்று கூறுவதைக் கேட்டதுண்டு. நித்தியானந்தாவின் கட்டுரைகளைப் படித்தவர் நித்தியானந்தா மூடரைவிடக் கேவலமாக பேட்டிகொடுக்கத் தொடங்கும்வரை அவரது ரஞ்சிதா லீலைகளை நம்பவேயில்லை!!!
பாபா தமிழரின் பாரம்பரியத்தை சிதைப்பதற்கு இந்தியதேசியவாதிகள் பயன்படுத்தும் ஊடகம் என்பதற்கு இதோ ஆதாரம்!
"இந்திய மொழிகள் அனைத்தின் தாய் சம்ஸ்கிருதம் என்பதை பாரதீய மாணவர்கள் அடையாளம் காணல் வேண்டும்" என்று பாபா திருவாய் மலர்ந்துள்ளார். ஸனாதன ஸாரதி ஜனவரி 2011 பக்கம் 15 இல் பாபாவின் அமுதமொழி தெய்வீக அருளுரை என்னும் சிறப்புப்பெயரோடு வெளிவந்துள்ளது.
இந்தியமொழிகள் அனைத்தின் தாய் சம்ஸ்கிருதம் என்கின்றார் பாபா!!! என்னே மடத்தனம்! இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்னரே இருந்த மக்கள் பழந்தமிழர்! தமிழுக்கு தாய்மொழி என்ற ஒன்று இல்லை! தமிழ்தான் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் ஆகியவற்றுக்குத் தாய்மொழி! இது மொழியியல் ஆய்வாளர் முடிந்தமுடிபாகக் கொள்ளும் அறிவியல்! இந்த அறிவியல் அறிவுகூட இல்லாத ஒருவரா பாபா? இவரையா சர்வவல்லமையுடைய கடவுளென்று எம்தமிழ்ச்சனம் நாடி ஓடியது?
தமிழ்ப்பதிப்பாக பாபாவின் சமித்தியால் வெளியிடப்படும் நூலில் இந்தியமொழிகள் அனைத்துக்கும் சம்ஸ்கிருதமே தாய்மொழி என்று பாபா கூறியது பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது தமிழருக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தமிழுக்கும் தாய்மொழி சம்ஸ்கிருதம் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகின்றது! பாபாவின் திருவாயால் அறிவியலுக்கு முரணான செய்தி பரப்பப்படுகின்றது!


பிறப்பு என்பதே வினையால் வருவது என்றும் கருவாசம் என்பது வினையின் பயன் என்றும் சைவத்தமிழ்த் திருமுறைகள் எங்கும் உரைக்கப்பட்டிருக்க, நம் தமிழ்ச்சனம் அதை உணராது பிறந்து, பிணி(வழுக்கி விழுந்து கால்வலியால் அவதிப்படுதல்),மூப்பு என்பவற்றுக்கு உள்ளாகி இறுதியில் செயற்கை சுவாசம், செயற்கை கழிவகற்றல் என்று மரண துன்பங்களையெல்லாம் அனுபவித்த ஒருவர், தமிழுக்கும் தாய்மொழி சம்ஸ்கிருதம் என்று உரைத்திட, நம்தமிழரும் கடவுள் உரைத்துவிட்டார் என்று கொண்டாடுகின்றனர் என்றுசொன்னால் முட்டாள்கள் நம்தமிழர் தானே?

இனி தமிழ்வழிபாடு வேண்டுமென்று எந்தக்கோயிலிலும் கேட்பீரோ?

"ஆரியமுந் தமிழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணை செய் தானே " – திருமந்திரம்தமிழையும் வடமொழியையும் ஒரேநேரத்தில் சிவபெருமான் உரைத்ததாக திருமூலர் தெரிவித்துள்ளார். சித்தர் திருமூலருக்குத் தெரிந்த உண்மைகூட கடவுள் பாபாவுக்கு தெரியாமல்ப்போனது எங்கனம்?Tamil is one of the longest surviving classical languages in the world. It has been described as "the only language of contemporary India which is recognizably continuous with a classical past" and having "one of the richest literatures in the world". - Wikipedia

பாவம் பாபாவுக்கு விக்கிபீடியாகூடத் தெரியாது! இவரா முற்றும் அறிந்த முதல்வன்?
கடவுளே........காலக்கொடுமையா இது!!!

பாபாவின் தாய்மொழியான தெலுங்குக்குகூட தமிழ்தான் தாய்மொழி என்பதை பாபாவுக்கு அவரை இயக்கியவர்கள் எடுத்துரைக்காமையே அறிவியலுக்கு முரணான அவரது பேச்சுக்குக் காரணமாயிற்று! பாவம் பாபா!!!

மங்குவர் செல்வம் மதிக்க மாட்டேன்மாயவித்தை காட்ட மாட்டேன் - யோகர்சுவாமி நற்சிந்தனை

பாபா செய்யும் மாயவித்தைகளைவிட பலமடங்கு சிறப்பான மாயவித்தைகளை மஜிக்மேன்கள்(மாயாவிகள்) செய்வதைக் கண்டிராதோர் இக்காணொளியைக் காண்க.

ஆரடா நீ என்று செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமியை ஆட்க்கொண்டார். மறைஞானசம்பந்தர் பட்ட கட்டையில் பகற்குருடு போகுதென்று கூறி உமாபதிசிவாச்சாரியாரை ஆட்கொண்டார்.

ஆக; குருவே சிவமாக எழுந்தருளும்போது தத்துவவித்தையே நடைபெறும்! மாயாவிகளுக்குத்தான் மாயவித்தை தேவை தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்கு!!!

 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழின் தாய்மொழி - பாபா சொல்ல பூரித்த தமிழர்!"

Post a Comment