ஈழவள நாட்டுமக்கள் இன்னல்களால் சூழப்பட்டு வாடியிருக்கும் இவ்வேளையில் காவல் தெய்வமாகிய நல்லூர் ஆலய கொடியேற்றம் இன்று நடைபெறுகின்றது. முருகனின் அருள்மழை ஈழத்தமிழுக்கு விடிவை நல்க வேண்டியோகர் சுவாமிகள் நல்லூரான்மேல் பக்தியோடு பாடிப்பரவசமடைந்த இவ்வரிய பாடலை பதிவிடுகிறேன்.
இப்பாடலை நல்லூர் அடியார்கள் நாள்தோறும் பாடிவரின் பொல்லாங்குகள் யாவும் தீரும் என்பது திண்ணம். சித்தர் வாக்கு சிவன் வாக்கு என்பர். "பொல்லாங்கு தீரும்" என்ற யோகர் சுவாமியின் வாக்கு எங்கனம் பொய்க்கும்? ஆதலால் நம்பிக்கையுடன் படியுங்கள். பாடுங்கள்.
எல்லாம் திருவருட் சம்மதம்
நல்லூரான் திருவடியை
நான் நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனெடி-கிளியே!
இரவுபகல் காணேனெடி
ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி-கிளியே!
நல்லூரான் தஞ்சமெடி
தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமெடி-கிளியே!
கவலையெல்லாம் போகுமெடி
எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள்-கிளியே!
காவல் அறிந்திடெடி
பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி-கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி
சுவாமி யோகநாதன்
சொன்னதிருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலெடி-கிளியே!
பொல்லாங்கு தீருமெடி
8 comments: on "நல்லூர் கொடியேற்றம்- யோகர் சுவாமி போற்றிப் பாடிய நல்லூரான்"
அருமை! அருமை! அருமை! எங்கே போயிருந்தீர்? ஒர் வரி எழுதலாம்தானே!
நன்றி
அவர் பாடியது ஈழத்திலுள்ள நல்லூரா? தமிழகத்தில் விருதாச்சலம் அருகிலுள்ள நல்லூரா?
யோகர் சுவாமி என்பவர் ஈழத்தில் யாழ்பாணத்தில் நல்லூர் எனும் திருத்தலத்தின் தேரடியில் வாழ்ந்த செல்லப்பா சுவாமிகளால் ஞானம் பெற்ற ஞானி ஆவார். ஈழத்தில் தோன்றிய கடைசி சித்தராக யோகர் சுவாமியை குறிப்பிடுவது வழக்கம். இவர் நல்லூர் முருகன் மேல் பல பாடல்கள் பாடியுள்ளார். மேலும் சிவபெருமானை எண்ணி மனமுருகி அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். நற்சிந்தனை எனும் தொகுப்பாக அவை அறியப்படுகின்றன. சிவதொண்டன் எனும் நிலையம் யோகர் சுவாமிகளின் குருவருளை பேணிவருவது கண்கூடு.
யோகர் சுவாமியைப் பற்றி மேலும் அறிய விரும்பின்
http://kanaga_sritharan.tripod.com/yogaswami_kbarathy.htm
தங்க முகுந்தன் அண்ணா, தங்கள் பின்னூட்டம் என்னை விசாரணை செய்கிறது. பணியாமல் இருக்க முடியுமா என்ன அண்ணாவின் விசாரணைக்கு!
thank you arjuna
keep in touch
Now where are you? I called but no reply!
Dear Thamby!
Where are you now? When you free please give me a miss call. ok.
Post a Comment