"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, July 10, 2009

இந்து முன்னணியே, சங்கர மடத்துக்கு இரண்டு கொம்பா முளைத்துள்ளது?????

இராமேசுவரம் ராமநாதர் கோயிலில் சைவ ஆதீனங்களான மதுரை ஆதீனம்,குன்றக்குடி ஆதீனம் ஆகியவற்றின் ஆதீன முதல்வர்கள் ஆலயக் கருவறைக்குள் நுழைந்தமையால் ஏற்பட்ட சர்ச்சையை 11-07-2009 நாளிட்ட நக்கீரனில் வெளியிட்டுள்ளார்கள். தமிழுக்கு உழைக்கும் நக்கீரனுக்கு முதலில் நன்றிகள்.

நுழைந்தமை தவறு என்று குரல் கொடுப்பவர்கள் இந்து முன்னணியினர். நேபாள மன்னர்,சிருங்கேரி மடாதிபதி(சங்கராச்சாரியார் பீடம்), காஞ்சி மடாதிபதி(சங்கராச்சாரியார் பீடம்) ஆகியோருக்கு மட்டுமே இவ்வாரு நுழையும் உரிமையுண்டு. இது இப்படியிருக்க இவ்விரு ஆதீனங்களுக்கு உரிமையளித்தது யார் என்று கர்ச்சித்துள்ளனர்.

என்னுடைய ஒருசில கட்டுரைகளில் இந்துமதம் என்பது பெரும்பாலான தமிழரின் திராவிடரின் தனித்துவ அடையாளமாக விளங்கும் சைவநெறியை மறைத்து வடநாட்டு கோலத்தை தமிழினத்துக்கு பூச எத்தனிக்கும் சதி என சுட்டிக்காட்டியுள்ளேன். இதோ நிறுபனமாகியுள்ளது!!!!

ராமேசுவர காஞ்சிமட நிர்வாகி "காஞ்சி சங்கராச்சாரியாரை" மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாலயக் கருவறைக்குள் நுழைய அனுமதியளிக்காதபோது இப்போது "இவர்களுக்கு" எப்படி அனுமதி கொடுத்தனர் என்று கோபப்படுகிறார்.

இராமேசுவரம் இராமநாதர் கோயில் ஓர் சைவக் கோயில். சைவக் கோயிலில் "சைவநெறியின் கோட்பாடுகள் தவறு" என்று வாதிட்ட அத்வைத சங்கரரின் அடியார்களான சங்கராச்சாரியார்கள் நுழைவது முதல்தவறு.கருவறைக்குள் நுழைய நினைப்பது மாபெரும் தவறு. எனவே காஞ்சி சங்கராச்சாரியார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வந்தபோது அவரை சிவாச்சாரியார்கள் நுழையவிடவில்லை. குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகியோர் சைவ ஆதீனந்தார். எனவே நுழைவதற்கு சிவாச்சாரியார் அனுமதியளித்துள்ளனர். எனவே, என்ன தவறு இதில் உண்டு??????

அடுத்ததாக;
கருவறைக்குள் நேபாள மன்னருக்கு செல்ல உரிமையுண்டாம். மன்னர்கள் செல்லலாம் என்று மன்னர் உத்தரவு போட்டிருந்துள்ளார். மறுக்க முடியுமா என்ன?????? மறுத்தால் பிழைக்கலாமா என்ன???? ஆனால், சங்கராச்சாரியார்கள் நுழையலாம் என்று யார் உத்தரவிட்டது? ஏனைய ஆதீனங்களைவிட சங்கர ஆதீனங்களுக்கு கொம்பா முளைத்துள்ளது???????சைவ ஆதீனங்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது!!!!அதுவும் சைவக் கோயிலில்! ஆனால் அத்வைத சங்கரர்கள் எக்கோயிலில் உள்ள கருவறைகளுக்கும் நுழையலாம் என்று புதுநீதி!!!!!!!!

வைணவ ஆலயங்கள் ஏலவே சங்கராச்சாரியார்களை கணக்கெடுப்பதில்லை. எனவே இவர்கள் சிவனே என்று இருக்கும் சைவநெறியை சிதைக்க, சீரழிக்க முனைகின்றனர். இந்துமதம் எனும் பெயரில் சைவநெறியை மறைத்து(பெரும்பாலும் திராவிடரால் பின்பற்றப்படுவதும் திராவிடத்துடன் தொன்று தொட்டு கலந்திருப்பதுமானான நெறியாகிய சைவநெறி)அத்வைதநெறியைப் பரப்பி பார்ப்பன ஆதீக்கத்தை நிலைநாட்ட முயலுகின்றனர் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்து முன்னணிக்கு சைவ ஆலயத்தில் நடப்பவற்றுக்கு சர்ச்சை எழுப்ப அனுமதியளித்த இழிச்சவாய்த் தமிழரை நினைக்கும்போது மனம் நோகிறது. இந்து பத்திரிக்கை, இந்து விசுவாசி சோ, இந்து சுப்பிரமணியசுவாமி எல்லோருமே தமிழனுக்கு எதிரானவர்கள். சைவ ஆதீனங்களை எதிர்த்து காஞ்சி சங்கர பார்ப்பன ஆதீனத்துக்கு குடைபிடித்து குரல் எழுப்பும் இந்து முன்னணியின் சதியில் திருநெறித் தமிழர்களே மயங்கிடாதீர். இந்து மதம் எனும் பெயருக்கு குடைபிடிப்பவர்களே, இனியாவது சிந்தியுங்கள்!!!!!!!

சைவ ஆதீனங்களின் முதல்வர்கள் பிறப்பால் பார்ப்பனர் அல்லர். இதுகூட சங்கர காஞ்சி விசுவாசிகளுக்கு "கருவறை" பிரச்சினையை எழுப்ப காரணமாயிற்று. துறவிகளுக்கு சாதியில்லை. ஆனால் சங்கர மடங்களுக்கு பார்ப்பனர் மட்டுமே தெரிவாவது பார்ப்பன மடம் என்பதை தெளிவாக்குகிறது. எனவேதான் பிறப்பால் பார்ப்பனராகவுள்ள சங்கராச்சாரியார்கள் கருவறைக்குள் நுழையலாம். எங்கள் சைவ ஆதீன முதல்வர்கள் நுழையக்கூடாது. காரணம் பிறப்பால் இவர்கள் பார்ப்பனர் அல்லர்.

நக்கீரன் நிறுபர்கள் தொடர்புகொண்டபோது "ஏன் தேவையில்லாத சர்ச்சை" என்று தமது பக்க கருத்துக்களையும் சங்கரபீடத்துக்கு இதுபற்றி கொதிப்படைய உரிமையில்லை என்ற உண்மையையும் சுட்டிக்காட்டாது ஒதுங்கிக் கொண்ட சைவ ஆதீன நிர்வாகிகளின் சமூக அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.

என் இனிய சைவப் பெருமக்களே, இந்து மதம் என்பது பார்ப்பன மதம். சைவநெறி என்பது தமிழர் வாழ்வியல்.விழித்தெழுக!!!!!!!!!!!!!!!!!

இந்து நிறுவனங்களை சைவ ஆலய வளாகத்துக்குள் விடாதீர். இந்து எனும் பெயரில் சைவம் எனும் இனிய தமிழை சிதைத்துவிடாதீர். சைவ ஆலயத்து விசயத்தில் அத்வைத இந்துவுக்கு நுழையும் உரிமை இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டு; சைவர்களே, இந்த விசமிகளுக்கு சைவ விசயத்தில் தலையிடுவதற்கு "தடா...பொடா...." இடும்படி வேண்டுகிறேன்.

அதுசரி சிவபூமியாகிய இலங்கையில் உள்ள அகில இலங்கை இந்துமாமன்றம் சங்காராச்சாரியார் கைதானபோது விழுந்தடித்து இலங்கைத் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர். இந்த விசயத்தில் என்ன செய்கின்றனர்????????? ஏலவே சைவ குருமார்பீடம் இருக்க அவர்களைவிட பெரியவர் எனக் காட்டிக் கொள்ள அகில உலக இந்து குருமார் பீடம் என்று இலங்கையில் உருவாக்கிய சங்கரத்தார் இந்து முன்னணிக்கு ஆதரவு அளித்திருப்பாரே!!! முடிந்தால் அவரிடம் கருத்துக் கேட்டுச் சொல்லுங்களன்!!!!!!!

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வெறும் வாசகம் அல்ல. அது தமிழரின் வீரகோசம்! வெற்றி வேல் வீர வேல் என்பது தமிழரின் வீர முழக்கம். ஆன்மீகம் என்னும் மயக்க மருந்து கொண்டு தமிழரின் சைவப் பண்பாட்டை சிதைக்கத் துடிக்கும் இந்துத்துவாவுக்கு துணையாகாதீர். எங்கள் பரம்பரை காத்த பண்பாடை அடகு வைக்காதீர்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "இந்து முன்னணியே, சங்கர மடத்துக்கு இரண்டு கொம்பா முளைத்துள்ளது?????"

Anonymous said...

ஆமா... சிதம்பரத்தில் போய் தமிழில் பாடினீர்களா நீங்கள்?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Anonymous said...

http://www.advaita-vedanta.org/avhp/alt_hindu_msg.html

பொய்யான பின்புலம் உடைய மடம் என்று விவரமாக இங்கே! ஊடகங்களுக்கு இதையெல்லாம்
பற்றிய கவலை இல்லை. குற்றம் சாட்டுபவர்களும் அவர்களே என்பது வியப்பான செய்தி!

Anonymous said...

சைவ வரலாறு குறித்து இங்கே!
http://forumhub.mayyam.com/hub/viewlite.php?t=2171

VSK said...

பார்ப்பனீயத்தை இதில் நுழைத்து திசை திருப்பி உள்ளீர்கள். வாழ்க~! வளர்க! சைவ்ம் ஓங்குக!

spiritual ocean said...

சகோதரா,தெய்வத்தின் குரல் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஐப் படிக்கவும்.சைவ மதம்தான் இந்தியாவின் மதம்.ஏன் உலகத்தின் மதம் என்று சங்கராச்சாரியாரே சொல்லியிருக்கிறார் ஆதாரத்துடன்.அல்லது அதன் சுருக்கம் www.aanmigakkadal.blogspot.com என்ற வலைப்பூவில் புதைந்துள்ளது.தோண்டி எடுக்கவும்.சைவ வைணவ மோதல் ஒரு முட்டாள்த்தனம் எனப்து எனது கருத்து.

சிவத்தமிழோன் said...

அதே தெய்வத்தின் குரலில் "சைவரும் அல்லர்,வைணவரும் அல்லர், நாம் ஸ்மார்த்தர்" எனத் தெளிவுபட "பெரியவாள்" என்று அழைக்கப்படும் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெளிவுபடுத்தியுள்ளார்.

குமுதம் பக்தி இதழில் ப்ரியா கல்யாணராமன் எழுதும் "காமகோடி பீடம்" என்னும் கட்டுரைப் பகுதியில் 16.01.2009இல் பின்வருமாறு எழுதுகின்றார் ஆதிசங்கரரின் புகழை!!!


"காஞ்சியில் மிகப்பெரிய செயல் ஒன்றையும் அவர் புரிந்தார். அக்கினி,குபேரன்,பிரம்மா,மன்மதன்,எமன்,வருணன்,வாயு போன்றவர்களை பாரதம் முழுவதும் வழிபட்டுவந்த மதங்கள் மொத்தம் 72 இருந்தன. அவற்றைச் செம்மைப்படுத்தி , நெறிமுறை செய்தார் ஆசார்யாள். சைவம்,வைணவம் காணபத்தியம்,கௌமாரம்,சௌரம்,சாக்தம் என்று ஆறாக அவற்றைத் திருத்தினார்......." என்றும் சைவத்தைப் பரப்புவதற்கு பரமத காலனாரை அனுப்பினார் என்றும் எழுதியுள்ளார்.

ஸ்மார்த்த நெறி எழுத்தாளராகவும் ஸ்மார்த்த மதம் பரப்பும் ஊடகமாக விளங்கும் குமுதம் "பக்தி" இதழின் ஆசிரியராகவும் உள்ளவர்,சைவநெறி ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டதுபோல் எழுதியுள்ளார்! எனவே, இங்கு தெளிவாக விளங்குவது சைவத்தை சிறுமைப்படுத்தல்!!!

சிவனும் சீவனும் என்றுண்டோ அன்று தொட்டு சைவமும் உண்டு என்பது சைவநெறிக் கொள்கை. யாராலும் தோற்றுவிக்கப்படாதது சைவம், சிவனுக்கு இரத்தத்துள் தோய்ந்து வாழும் ஊழ்வினை இல்லை!

ஆனால் கருவறையில் இருந்து வந்த ஆதிசங்கரரை சிவனின் அம்சம் என்றும், மன்னர் ஒருவரின் உடலுக்குள் புகுந்து இல்லறத்தை அறிந்தவராக சொல்லப்படும் ஆதிசங்கரரை வினைகளற்ற சிவனுக்கு ஒப்புவமிப்பதும் தென்னாட்டில் தோன்றிய எந்நாட்டுக்கும் உரித்தான சைவநெறியை சிறுமைப்படுத்தும் சங்கராச்சாரியார் கூட்டத்தின் சதியை வெளிச்சம்போடுகிறது!!!

ஆதிசங்கரர் சைவநெறியினருடன் வாதம் செய்தார் என்று கதையுண்டு! எனவே, சைவநெறி அவர் காலத்தில் இருந்தது திண்ணம்!!!

ஆனால் சைவத்தை ஆதிசங்கரர் உருவாக்கினார் என்று முன்னுக்குப் பின் முரணான கதையை அவரது சரித்திரத்தில் கட்டிவிட்டுள்ள அறிவற்றகூட்டம் யாரோ?

"சிவத்தமிழோன்" வலைப்பூவில் வைணவ-சைவ மோதல்கள் எங்கும் இல்லை. சைவநெறியை "தமிழைத் தீட்டுமொழி என்று போதிக்கும்" சங்கராச்சாரியார்களின் பணபலம் பொருந்திய ஊடகங்களின் உதவியுடன் மறைக்க எத்தனிக்கும் ஸ்மார்த்தம் பற்றிய விளிப்புணர்வு ஊட்டப்படுகின்றது. இது சைவரின் பணி!!!!

சைவக் கருத்துகளை எழுதும்போது அவை வைணவத்துக்கு ஏற்புடையதாக அமையாமல்விட வாய்ப்புண்டு! அதுபோல்தான் வைணவநெறியில் சைவநெறிக்கு முரணான கருத்துகள் இருப்பது இயல்பு!!!
எனவே, சைவ-வைணவ மோதல் என்று சிறுபிள்ளைத்தனமாக இதை நோக்குவது தங்களின் பக்குவமின்மையே!!!

சைவ மதம் உலகத்துக்கும் பொதுவானது என்றார் காஞ்சிப் பெரியவர் என்றால் அது எந்தச் சைவத்தை? அவர்களின் குருநாதரால் உருவாக்கப்பட்ட ஸ்மார்த்த சைவத்தையே!!!!! அதுஎன்ன ஸ்மார்த்த சைவம்? சிவன் தான் எல்லாம்! எனவே சிவனைக் வணங்குவோர் ஆஞ்சனேயரையும் வணங்குங்கள்! காரணம் சிவன் = ஆஞ்சநேயர்!
சிவன் தான் எல்லாம்! எனவே சிவன் தான் யேசுநாதர்! எனவே சிவனை வணங்குவோர் யேசுவை வணங்கலாம்! ஒருசில பாதிரிகள் செய்யும் பிரச்சாரம் இது! இதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்டது "சிவன் தான் எல்லாம் " என்ற மறை!!!
எனவே, கிருஷ்தவத்தைப் போதிக்க முதலில் சொல்லிய வார்த்தை "சிவன் தான் எல்லாம்"

அதுபோல் "தமிழ் தீட்டுமொழி" என்று உறுதிசெய்ய, சைவ சித்தாந்தத்தை மறையச் செய்ய சங்கரர் உருவாக்கியதே "ஸ்மார்த்த சைவம்" அதையே அவரது நேற்றைய சீடர் பெரியவர் "உலக மதம்' என்றார்! நீங்கள் அர்த்தம் புரிந்துகொள்ளவில்லை!

Post a Comment