"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, December 14, 2008

நெறிதவறும் பிராமணரும் ஈழத்தில் சைவத்தை சிதைக்கும் வடநாடும்

கடற் கன்னிகளின் தமிழிசையால் அழகான ஈழமணி நாட்டை அழகுபடுத்தும் மட்டக்களப்பு மாநகரிலே அண்மையில் நடந்த திருமால் ஆலய சங்காபிடேகத்தின் இறுதியில் பிரசங்கம் நடைபெற்றது. ஆலயந் தோறும் பிரசங்கம் நடைபெறல் வேண்டும் என்ற நாவலர் பெருமானின் ஆவலை சில ஆலயங்களே சிறப்பாகக் கையாளுகின்றன. இவ்வாலயத்திலும் அவ்வாறு நடைபெற்ற பிரசங்கத்திலே சங்காபிடேகம் செய்வித்த பிரதமகுருக்கள் தமிழின விரோத விதைகளை மக்கள் மத்தியில் பதியவைக்க முயன்றவேளை தன்னையறியாமலேயே தனது உட்கிடக்கையை வெளிப்படுத்திவிட்டார். பாவம் ஓளி ஒலிப்பதிவு வலைப்பூ ஏறும்.......தமிழரை தமிழ் பற்றாளர்களாக வாழும் தமிழ் பிரமணர்களை சிந்திக்கவைக்கும் என்று அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. இங்கே அடியேன் குறித்த ஒளி ஒலிப்பதிவை இணைத்துள்ளேன் YOUTUBEமூலமாக. PLAYபண்ணி சிறிது நேரம் பொறுத்திருந்து BUFFERING ஆகவிட்டு ஒலி ஒளிப்பதிவை அவதானியுங்கள்இங்கு சிவாகம்பற்றி நவிலமுயன்ற இவர், வைதீக ஆகமம் என்ற ஒன்று உண்டென்றும் அது பிராமணர்களின் வீட்டிலேயும் வைதீகர்களின் சம்பிரயாயத்திலேயும்.......... என்று ஏதோ சொல்லுகின்றார்.
இவர் திருமாலுக்கு பூசை செய்கின்ற பிராமணர் என்ற கோதாவில் பார்த்தால் சிலவேளைகளில் இவர் வைணவ ஆகமத்தை பின்பற்ற நீதியுண்டு. ஆனால் வைதீக ஆகமம் இங்கு ஏன் வந்தது? பிரமணர் பின்பற்றுவர் என்று கூறுகின்றார். அப்படியானால் சிவாச்சாரியார்கள் எல்லோரும் அதைப் பின்பற்றுகின்றனரா? சிவாச்சாரியார்கள் சிவாகமவழி நடப்பவர்கள். இலங்கையில் இராவணன் காலந்தொட்டு சைவமே சமயமாக இருந்துவர இவர் எங்கிருந்து வைதீக ஆகமத்தாராக பிறந்தார்? ஹரியே முழுமுதல் தெய்வம் என்கின்றார். வைணவத்தை இவர் பின்பற்றுபவராக இருக்கலாம். ஆனால் ஈழவள நாட்டில் இராவணனும் அவன் குடியும் சைவமே என்பதை இவர் மறக்கக்கூடாது என்பது யான் வேண்டும் வரம். அந்த சைவக்குடிக்குள் இவருக்கு ஏன் இந்தக் குதர்கவாதம்? இலங்கையில் சைவ சமய வரம்புக்கு உட்பட்டு காத்தற் கடவுளாக திருமாலை வழிபடும் தமிழ் பண்பாட்டை பேணி வருகையில் இவர் இப்படி ஒரு போதனையை மக்களுக்கு ஊட்டவேண்டிய அவசியம் என்ன? ஊட்டும் துணிவை எப்படிப் பெற்றார்? இவர் பேச்சில் சைவ பண்பாட்டுக்கு எதிரான இலங்கையில் இல்லாத ஒரு பண்பாட்டுக்கு வித்திடும் போக்கான தன்மையை வெள்ளிடைமலையாய் அம்பலமாகி நிற்கின்றது. சட்டித்தனம் செய்யும் போக்கல்லவா இவர் பேச்சில் உறைந்துள்ளது.இலங்கையில் பிறக்கும் ஒவ்வோரு குழந்தையும் சமய பாடமாக சைவ நெறியையோ,கிருத்தவ சமயத்தையோ அன்றி இசுலாம் சமயத்தையோதான் தமிழ்மொழி மொழிமூலம் தெரிவுசெய்து படிக்கமுடியும். எனவே இவர் சைவ நெறியையே படித்திருக்கவேண்டும். சிவபெருமானே முழுமுதற்பொருள் என்றும் அவனுக்கு ஒப்பாய் எவரும் இலர் என்றும் படித்து சித்திபெற்ற( சாதரண தர பரீட்சையில் சித்திபெற்றார் என்ற எடுகோளில்) இவர் எங்கேபோய் ஹரியேதான் முழுமுதல் என்ற ஞானத்தைப் பெற்றார் என்பது; தமிழர்களே, உங்களுக்கு விளக்கவில்லையா?
சுமார்த்தபீடமான சங்கரபீடமாகத்தான் இருக்கும். தமிழரின் தேசியம் சைவசமயத்தால் பேணப்படும் என்று கருதி அன்றே சைவத்தின் தனித்தன்மையை அழிக்க வடக்கின் வைதீக நெறி கங்கணங்கட்டி சுமார்த்தத்தைப் படைத்து தமிழரிடையே ஊடுருவவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கறையான் புற்றாக சைவத்தை (திருமுறைகளையும்) அழிக்க முயன்று தோற்று பின்னர் இந்து என்ற பெயரில் விசுவருபம் எடுத்து தமிழ் நாட்டைத் தாங்கி, 95களில் இலங்கையின் கொழும்பையும் தாங்கி, அங்கு தளம் அமைத்து இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை என்று தமிழரின் தேசிய மண்ணிலும் காலடி எடுத்துவைத்து விட்டது. இதற்கான ஆணித்தரமான சாட்சிதான் இந்த ஒளி ஒலிப்பதிவு.தமிழனே, இந்து என்ற பெயரில் சைவத்தைத் தொலைத்து வைதீகத்தை ஏற்றுவிட்டாயேயானால் உனது தேசியம் அழிந்துவிடும். உணர்க. உனக்கென்று ஒரு பண்பாடு இருந்ததென்ற வரலாறுகூட இல்லாமல் போய்விடும். தமிழா, உனக்கு என்றுமே "கண் கெட்டபின் சூரிய வழிபாடு" என்ற பழமொழி பொருத்தமடா. அதை மேலும் வலுச்சேர்ப்பதுபோல் சைவத் தனித்துவத்தை இழந்து ஏமாந்து வேதனைப்படாதே! நித்திரையில் இருந்து விழித்தெழு.
பூணூல் போட்டவர் சொல்லுகின்றாரே என்று வாயைப்பிழந்து கேட்டுக்கொண்டு இருக்காதே. என்ன சொல்கின்றார் என்னத்தைச் சொல்லுகின்றார் என்பதை உணர்ந்துகொள். இந்த விசமி இப்படிச் சொல்கையில், ஒருவர் எழுந்து இல்லை இது சிவபூமி. நாங்கள் சைவர். எங்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான். நாங்கள் அறிந்தது சிவாகமம் ஒன்றே! நீங்கள் எங்கே இந்த வியாக்கியானத்தைப் படித்தீர்கள்......எங்கள் நாட்டில் தமிழர் அழிவதை தூண்டிவிடும் ஆரியக்கூட்டத்திடம் இருந்தா? " என்று கேள்வி தொடுத்திருந்தால் பூணூல்போட்டு சைவம் படித்து பணத்துக்கு சுமார்த்தராய் விலைபோன இவர் தலைகுனிந்து நின்றிருப்பார். இன்னொரு பிரசங்கத்துக்கு மேடையேறவும் மாட்டார். தமிழா.....இனியாவது விழித்துக்கொள்!
சங்கரபீடத்துக்கு கொடிபிடிக்கும் அறிவு மங்கிய தமிழர்களே, திரைப்படத்துறை தொட்டு திரு நங்கையர் சங்கம் ஈறாய் தமிழருக்காக குரல்கொடுக்கையில் தமிழகத்தில், சுமார்த்தைத்தை ஆதரிக்கும் இராமகோபலன், சோ போன்ற மேதாவிகள் தொட்டு சிறையனுபவித்த மதுரை சங்கரபீடம் வரை ஒருவர்கூட தமிழனுக்காய் குரல்கொடுக்கவில்லை. ஏன்?
தமிழா, சைவன் ஆன உன்னை இந்துவாய் சுமார்த்த வைதீகனாய் மாற்றி உன் அடையாளத்தை அழித்து உன்மொழியை அழிக்க திட்டம் தீட்டியுள்ள கூட்டமே வட இந்தியப் பார்பனீயமும் அதன் அடிவருடைகளான தமிழகத்தின் இந்த பார்ப்பன மேதாவிகளுமடா. உணர்க. இவர்கள் உனது நண்பரல்ல. ஆன்மீகப் பேரொளிகள் அல்ல.
உனது இனத்தை அழிக்கத்துடிக்கும் எதிரிகள். ஈழத்துப் பிராமணர் இவர்களில் இருந்து வேறுபட்டு சைவ வாழ்வை தமிழோடு நுகர்பவர்கள். ஆனால் இன்று கொழும்பில் சிலர் பிறழ்வடைந்து பெரியபெரிய பதவிகளையெல்லாம் அனுசரித்து, உயர்தானங்களைப் பெற்று இன்று ஈழத்து பிராமணக் குழந்தையை சுமார்த்தபீடமான சங்கரபீடத்துக்கு அனுப்பி குருபட்டம் பெற வழிசமைத்துள்ளனர். இதுவரைகாலமும் சைவ ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனமே ஈழத்து பிராமணக் குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வந்தனர். ஆனால் இன்று திடிர் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளைய பிராமண சமுதாயத்தை தமிழர் என்ற வட்டத்துக்குள் இருந்து (தமிழகத்தில் நடந்ததுபோல்) அகற்றவேண்டும் என்ற பேராசையா இவர்களின் செயலின் நோக்கம்?
பிராமண சமூதாயத்திடம் சிவத்தமிழோன் மன்றாடுவது உங்கள் பிள்ளைகளை சைவ ஆதீனங்களுக்கு அனுப்பிவையுங்கள் குருபட்டம் படிப்பதற்கு. இலவசம்...........சலுகைகள்.......என்பவற்றுக்கு மயங்கி தமிழின விரோத சுமார்த்த பீடங்களுக்கு மறந்தும் அனுப்பிவைத்து சிவத்துரோகம் செய்யாதீர். திருஞான சம்பந்தர் போன்ற சைவக்கொழுந்துகளே உங்கள் வீடுகளில் பூக்கவேண்டும்.இல்லையேல் தமிழன்னை நாளை மன்னிக்காது. மறவாதீர்.

சமயத் தலைவர்களே, நீங்கள் நித்திரையிலா உள்ளீகள்? கொதிக்கும் கோபத்தை என் நெஞ்சு சுமக்கின்றது உங்களின் அறிவற்ற ..........கொழும்பின் சுமார்த்த பணத்திற்கு கைப்பிள்ளையாக நடக்கும் போக்கால். தமிழரின் தேசியமான சைவம் அழிக்கப்படுவது உங்கள் கனவா? திருந்துங்கள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பர். எழுதுகிறேன்.................எழுதுகிறேன்.......விழிப்புணர்வு கொண்ட தமிழினம் உருவாகும் என்ற நம்பிக்கையில். நீங்கள் விழித்து தீர்ப்பு வழங்கினால் சுமார்த்த ஆரியச் சதி ஒரு தூசி மாதிரிபோய்விடும்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "நெறிதவறும் பிராமணரும் ஈழத்தில் சைவத்தை சிதைக்கும் வடநாடும்"

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

'அலிகளில் சங்கம்'
தயவு செய்து இச்சங்கத்தை 'திரு நங்கைகள் சங்கம்' எனக் குறிப்பிட்டு அவர்களை அரவணைக்கவும்.

பதிவுச் செய்தி பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

சங்கரமடம் ஈழத்து அந்தணர் மேல் என்றும் அக்கறை காட்டுவதில்லை.
யாழில் இராணுவம் இவர்களில் பலரைச் சுட்டுக் கொன்ற போதும்
மௌனமாகவே இருந்தது.

சிவத்தமிழோன் said...

அன்புடன் யோகன் பாரிஸ்க்கு,
தங்களின் நியாயமான சமூக அக்கறைகொண்ட வேண்டுகோளை எளியேன் நிறைவேற்றிவிட்டேன். ஆம், திரு நங்கையர் சங்கம் என்று மாற்றிவிட்டேன். சமூக அக்கறையோடு எடுத்துக்காட்டியமைக்கு நன்றிகள்.

Anonymous said...

பார்ப்பனருக்கு தமிழ் பற்றிய அக்கறையில்லை. தமிழகத்தில் தமிழ் தேவாரத்திற்கு தடைகொண்டுவர முயன்றவர்கள்தான் பார்ப்பனர். அவர்களை பெரியார் வழியில் கையாளவேண்டும்.

சிவத்தமிழோன் said...

ஐயா அனோனிமுசு, தாங்கள் சொல்வது ஓரளவு சரிதான். ஆனால் சூரிய நாராயண சாத்திரிகள் தனது பெயரை பரிதிமால் கலைஞர் என்று தமிழாக மொழிமாற்றி பயன்படுத்தினார். அவர் தமிழ் பார்ப்பனர் என்றால் தங்களால் மறுக்கமுடியுமா? தமிழைக் காதலிப்பவர் தமிழர். தமிழைக் காதலிக்கும்போது இயல்பாகவே தமிழ் நெறியான சைவத்தவராகிவிடுவர். சி.வை.தாமோதரம்பிள்ளையார் அதற்கு சான்று.

ஈழத்து பிராணர் தமிழோடு ஊறியவர் பொதுவில். ஆனால் இன்று கொழும்புக்கு வந்துவிட்ட சுமார்த்தம் பிரமணர் என்ற சாதியை பிரமணருக்குள் காட்டி, ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் பிராமண மக்களிடம் பரவ முயலுகின்றது. இதனை பிராமாணர் உணர்ந்து ஆரியச் சதியை முறியடிக்க முன்வர வேண்டும். ஒருசிலரின் பிறழ்வுகள் சிலவேளைகளில் ஒரு சமூகத்தையே பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஈழத்துப் பிராமணர் கொழும்புக்கு சுமார்ந்தம் வரும்வரையிலும் ஆரிய சூழ்ச்சிக்கு அகப்படாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் கிருத்தவ மத ஆட்சிக்காலப்பகுதியில்( வெளி நாட்டவரின் ஆக்கிரமிப்பில்) ஈழவள நாடு இருந்தபோது ஆலய விக்கிரகங்களை காக்க போராடியவர்கள் பிராமணர் எனலாம். கிணறுகளுக்குள் போட்டும் மண்ணுக்குள் மறைத்தும் காத்து இன்றைய சந்ததிக்கு தந்தவர்கள் அவர்கள் என்றால் மிகையாகாது. ஏன் எங்கள் ஊர் ஐயர் இந்திய அமைதிப் படையிடம் சவுக்கடி வாங்கிய தழும்புகளை என்னிடம் காட்டினார். எல்லாம் தமிழ்ப் பற்றுச் செய்த சோதனை. பல ஐயர்மாரைப் பார்த்து கடவுளே நான் ஏன் ஐயராய்ப் பிறக்கவில்லை என்று சிறுவயதிலேயே சிந்தித்தவன். கண்ணை உற்றுநோக்கி பார்த்து பல பில்லி சூனியங்கள் தூரஓட்டும் வல்லமை கொண்டவர்களாக சைவ குருமார்களாக வாழும் பல பிராமணரை என் வாழ்வியலில் சந்தித்துள்ளேன்.

பிராமணர் என்பது சாதிக்கட்டமைப்பு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது. பிறப்பால்த்தான் பிராமணர் ஆகலாம் என்பது நியாயமானதில்லை. ஆனால் முறையான நியதிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே பிராமணர் என்பது என் அறிவு. அன்பு பக்தி அறிவு மூன்றும் நிரம்பியவர்களாக இருக்கவேண்டியது முதலாவது அடிப்படை தகுதி.

ஈழத்து பிராமணர்களை மயக்கி தனது மடியில்போடும் ஆரியச் சதியை ஈழத்து பிராமணர் உணர்வர் என்பது அசைக்கமுடியாத எனது நம்பிக்கை. ஏலவே பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையின் தேசியத்தை சிதைக்கும் துர்சுழலில் பலபாடங்களை உணர்ந்தவர்கள், எனவே ஆரிய ஏகாதிபத்தியமும் அவர்களால் உணரக்கூடியதே.

ஈழத்து பிராமணரை இந்தியாவோடு இணைத்து ஒப்பிடுவது பொருத்தமற்றது. தங்கள் கருத்துக்கு நன்றி

Post a Comment