சூரியவழிபாடு தொன்றுதொட்டு மனிதக்குடியில் இருந்தவந்த ஒன்றே! எந்தவொரு தனிப்பண்பாட்டுக்கும் உரிய அலகாக சூரியவழிபாடு இருந்ததில்லை!!! ஆயினும் பிற்காலந்தில் எழுந்த மதங்கள் முன்னர் இருந்த வழிபாடுகளை அழிப்பதிலும் தடுப்பதிலும் இருந்ததனால் உலகில் சூரியவழிபாடு மறையத்தொடங்கிற்று. ஆயினும் இந்தியப் பெருங்கண்டத்தில் சமயத்துறையில் எந்தவொரு தெய்வவழிபாடும் வெறுக்கப்படவில்லை! எனவே சூரியவழிபாடும் சைவ-வைணவ சமயத்துறைகளில் சிறப்பான இடம்பெற்றன!
அந்தவகையில்;
சூரியதேவனை சிவபெருமானின் அட்டமூர்த்தவடிவங்களில் ஒன்றாக சிறப்பித்து சூரியவழிபாட்டை சைவசமயம் சிறப்படையச்செய்துள்ளது என்றால் மிகையில்லை!!!
தைப்பொங்கல் திருநாள் என்பது சூரியனுக்கும் உழவர்களுக்கும் உழவுக்கு உதவுகின்ற பசு,காளை மாடுகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு தமிழர்கள் தமது வாழ்வில் தொன்றுதொட்டு கொண்டாடிவருகின்ற திருநாளாகும். இன்று சில அரசியல் விசமிகள் இந்த திருநாளுக்கும் மதவழிபாட்டுக்கும் எந்தத்தொடர்ப்பும் இல்லை என்பதுபோல் ஒருமாயையை ஏற்படுத்தி அதனூடாக தமது கருப்புச்சட்டை அரசியலை அரங்கேற்றி வருகின்றனர்!!! தமிழர்களின் உணர்வோடுகலந்த இந்த இனியநாளிளை சைவநெறிச்சால்பில் இருந்து பிரித்தெடுத்தால்த்தான் மதமாற்றங்களை எளிதே செய்யமுடியும் என்பதனாலும் புறச்சமயத்தவர் இது மதவிழா அல்ல என்பதுபோல் தலையாட்டுகின்றனர்!!!!
சூரியவழிபாட்டை கிருஷ்வமதமும் இஸ்லாமியமதமும் மறுக்கின்றன!!! எருது,பசு வழிபாட்டுக்குரிய மாட்டுப்பொங்கலும் இம்மதங்களின் புனிதநூல்களால் ஒதுக்கப்படும் மிருகவழிபாட்டு நிகழ்வுகளே!!!! எனவே; தைப்பொங்கல் என்பது யதார்த்தமாகவே கிருஷ்தவத்தமிழர்களிடமிருந்தும் இஸ்லாமியத் தமிழர்களிடமிருந்தும் மதரீதியாக அந்நியப்படுகின்றது!!! எனினும் சில தேவசபைகளில் தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மதமாற்றச்சூழ்ச்சிகளுக்காக தமது மதச்சட்டங்களை கண்டுகொள்ளாது ஏற்பாடுசெய்கின்றமை வழமையாகிவிட்டது.கொடியேற்றம்,மேள-தாள நாதசுவர இசை,தேரோட்டம் ஆகியவற்றை தமது திருச்சபைகளில் புகுத்தியவர்களுக்கு இதுவொன்றும் புதிதல்ல!!! திருவள்ளுவர் கிருஷ்வர் என்று ஆராய்ந்து கண்டுபிடித்தவர்களுக்கும் அதற்கு ஆமாம் போட்ட நாத்தீக அரசியல்வாதிகளுக்கும் இதுவொன்றும் விசித்திரமானதொன்றல்ல!!!
ஆனால்;
தைப்பொங்கலை சைவசமயத்தவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும்வகையில் இது மதசார்பற்ற விழா என்று பாண்டித்தியம் பேசும் அறிஞர்களின்(?) உள்நோக்கத்தினை சைவத்தமிழர் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்!
சைவசமயத்தையும் தமிழையும் பிரித்துப் பார்ப்பதென்பது உயிரையும் உடலையும் பிரிக்க எத்தனிப்பதற்கு நிகரானது!!! இருகண்களில் ஒருகண் மட்டுமே போதும் மனிதனுக்கு என்னும் மடமைக்கு நிகரானது!!!! சைவமும் தமிழும் ஒன்றோடு ஒன்று கலந்த பந்தத்தை உடையது!!!!
அரசியல் ஒருதலைமுறைக்கு சாப்பாடு போடும்!!! தமிழர்சால்பு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது! அதை ஒருதலைமுறைச் சாப்பாட்டுக்காக சீர்குலைக்காதீர்!!!!
இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமானனாயெறியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
ஆகாச மாயட்ட மூர்த்தியாகிப்
பெருநிலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவும் தம்முருவுந் தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
பொழிப்புரை :பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.
"இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாயெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாச மாயட்ட மூர்த்தியாகி"என்று அப்பர் பெருமான் அருளிய நின்ற திருத்தாண்டகத்தில் எம்பெருமானின் அட்டமூர்த்த வடிவங்கள் சிறப்பிக்கப்படுகின்றது.ஆக; சூரியதேவன் சிவபெருமானின் அட்டமூர்த்த வடிவமாமையால் தைப்பொங்கல் சைவநிகழ்வுகளில் முதன்மையான தொன்றாகும்.
பொங்கலோ பொங்கல்!!!!
தைத்திருநாள் வாழ்த்துகள்!!!!!
பேரூராதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார் அவர்கள் உழவர்திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கிய அருளாசிச்செய்தி
குறிப்பு:- மின்னஞ்சல் ஊடாககிடைக்கபெற்ற சுவாமிகளின் வாழ்த்துச்செய்தியை இங்கு இணைந்துள்ளேன். திருமடத்தின் வலைப்பூவிலும்(http://peruradigalar.blogspot.com/2012/01/blog-post_13.html) இவற்றைக் காணலாம். நன்றி.
3 comments: on "தைத்திருநாளும் திருநெறிச்சால்பும்"
நன்றி:இங்கு எடுத்தாளப்பட்டுள்ள தேவாரத்துக்குரிய பொழிப்புரை தேவாரம் மின்னம்பலத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.
http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=6094&padhi=099+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
சைவத்தையும் தமிழையும் போற்றும் நண்பர்கள் ஆரியத்திடம் அடி பணிந்த கதையையும், தமிழில் மூன்றெழுத்துத் தவிர மீதி அனைத்தும் சமசுகிருதத்தில் இருந்து வந்தது என்று தமிழர்களையே நம்பவைத்ததும், எப்படிச் சைவ ஆதினங்களை சங்கராச்சாரி ஆட்டிப் படைத்தார் என்பதையும் கொஞ்சம் விவரிக்கக் கூடாதோ ?
அன்புடைய பெயரற்றவருக்கு(அனோனிமஸ்),
தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தவர்களும் சைவர்களே! திருவள்ளுவர் ஆண்டை அறிமுகஞ் செய்தவர்களும் சைவசித்தாந்தப் பெருமக்களே! திருவள்ளுவர் ஆண்டு நடைமுறையை அறிமுகஞ் செய்த குழுவின் தலைவர் சைவசித்தாந்த அறிஞராகிய மறைமலையடிகள் என்பதை நினைவில் நிறுத்துக.
பெரியார் ஆரம்பத்தில் திருக்குறளை எதிர்த்து பேசியவற்றையும் பின்னர் திருக்குறளை தவிர்க்கமுடியாது என்று உணர்ந்தபோது திருக்குறள் மாநாட்டில் பங்குபற்றி வாழ்த்தியதும் அறிவீராக!!!! இப்படிப்பட்ட அரசியல் ஆன்மீகவாதிகளுக்கு தெரியாதைய்யா!!!!
சைவத்தமிழ் இலங்கியங்கள் படித்ததில்லைப்போலும்!!!!
சிவாகமங்கள் தமிழ்மொழியிலும் வடமொழியிலும் ஒரேநேரத்தில் இறைவனால் இறைவிக்கு உபதேசிக்கப்பட்டதென்று திருமந்திரம் கூறுவதை அறிகிலீர் போலும்!!! ஒன்றை விமர்சனம் செய்யும் போது அதில் போதுமான அறிவு வேண்டும்!!!!
தமிழை வைத்து பிழைப்புநடத்தவே அந்நியமதங்கள் முயன்றன!!! தமிழை கடவுள் மொழியென்று உயர்த்தவே சைவம் முயன்றது!!! ஆக; இந்த வேறுபாட்டை உணர முயல்க!!! வாழ்த்துகள்!
Post a Comment