திருக்கேதீசுவரத் திருத்தலத்தின் தலைவரும் ஈழத்து சைவக்காவலருமான சிவத்திரு இராசப்பிள்ளை நமசிவாயம் ஐயா 99ம் அகவையில் சனிக்கிழமை காலை கொழும்பில் தனது பூதவுடலை விட்டு நீங்கி சிவபதம் பெற்றார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட சிவனடியார் நமசிவாயம் ஐயா, 1912ஆம் ஆண்டு சித்திரை மாதம் 11ஆம் நாள் பூவுலகில் இராசப்பிள்ளை, சிதம்பரனாச்சியார் தம்பதிகளுக்கு...