"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, January 27, 2011

மட்டக்களப்பு வெள்ளப்பெருக்கும் சைவ அமைப்புகளின் பங்கும்


இலண்டன் சைவ ஆலயங்களின் ஒன்றியம் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கிவருகின்றமை பாராட்டுக்குரிய ஒன்றாகும். சைவ உலகமே பாராட்டுத் தெரிவுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. உலக சைவப் பேரவையும் தமது உதவிகளை வழங்கி உலக சைவ மக்களின் பாராட்டைப் பெற்றமையையும் திருவருட்சம்மதம் என்க.

வெள்ளப் பெருக்கால் வாடிநின்ற மக்களுக்கு சைவ அமைப்பான மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களின் சைவ அமைப்புகளைத் தொடர்ப்பு கொண்டு, இயலுமான உதவிகளை களத்தில் நின்று ஆற்றிவருகின்றமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

வாடும் பயிரைக் கண்டால் வாடுவது சைவரின் இயல்பு. ஒரு மாநிலமே வெள்ளத்துள் வாடிநின்றபோது பெருந்துயருக்குள் வீழ்ந்த சைவமக்களுக்கு இலங்கையில் உள்ள பல்வேறு சைவ அமைப்புகள்,நிறுவனங்கள் முன்னின்று உதவிகளை ஆற்றியமை ஆறுதலை ஏற்படுத்தியது. பணிகளின் ஈடுபட்ட சைவ அமைப்புகள் யாவற்றுக்கும் சைவ உலகம் நன்றியுடையதே!

என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பரின் வாழ்வு சைவர்களுக்கு போதிப்பது மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதையே! சைவநெறி மக்கள் இதை நன்குணர்ந்து தமது உதவிகளை உரிய அமைப்புகளுடாக வழங்கி சைவப்பணிக்கு தோள்கொடுத்து உதவவேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

 தென்னாடுடைய சிவனே போற்றி
 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

என் கடன் பணி செய்து கிடப்பதே
சிவத்தமிழோன்தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியான செய்தி


கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக பல உதவிகளை லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வகையில் 25.01.2011ம் திகதி அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவில் வந்தாறுமூலை மேற்கு பகுதி மக்கள் பெரும் வெள்ளப்பாதிப்பை எதிர்கொண்டமையால் 398 குடும்பங்களுக்கு 480000.00 ரூபாய் பெறுமதியான சமையல் பாத்திர உதவிகள் வழங்கப்பட்டது. 


இவ்வேளை கோறளைப்பற்று பிரதேசத்தின் சுங்கான்கேணி கிராம அதிகாரி பிரிவில் 500 குடும்பங்களுக்கு 425000.00 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அரிசி சீனி மா சோயாமீற் உருளைக்கிழங்கு பருப்பு தேயிலை அங்கர் போன்றவை சகல குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து உதவி வழங்கும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். உதவி நல்க விரும்புபவர்கள் கீழ்வரும் வங்கி மூலம் உதவ முடியும் என்பதையும் தெரிவிக்கின்றார். உதவும் அமைப்பு தனிநபர் ஈமெயில் மூலம் தங்களது உதவித் தொகை பெயர் விலாசம் தொலைபேசி இலக்கம் போன்றவற்றை அனுப்பும் போது அவற்றின் மூலம் பற்றுச்சீட்டு புகைப்படங்கள் (உதவி வழங்கியமைக்கானது) ஏனைய ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும். 


தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் உதவியை நாடி நிற்கின்றனர் என்ற செய்தியையும் அன்பாக தெரிவிக்கின்றோம். 


நிதி அனுப்பவதற்குரிய விபரம். 
The fund should be drawn in favor of Federation of Young Men’s Hindu Association, Batticaloa District. People’s Bank, Kaluwanchikudy Branch, to the Account No. 190-165-020091-4. 


தொடர்பு கொள்வதற்கு : 0094776034559 0094718049439 0094652228273 0094652228018 உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும்.


நிழற்படங்கள்:நன்றி தமிழ்வின்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "மட்டக்களப்பு வெள்ளப்பெருக்கும் சைவ அமைப்புகளின் பங்கும்"

சிவத்தமிழோன் said...

வெள்ளப்பெருக்கு பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு:-
http://thiviyaranchiniyan.blogspot.com/2011/01/blog-post_13.html

http://thiviyaranchiniyan.blogspot.com/2011/01/blog-post_14.html

http://thiviyaranchiniyan.blogspot.com/2011/01/blog-post_3617.html

சிவத்தமிழோன் said...

செய்தி மூலம் + நிழற்படங்கள்: தமிழ்வின் இணையத்தளம்

Post a Comment