இலங்கையில் புத்தளம் சிலாபம் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர்களை சிங்களவராக இனமாற்றம் செய்யும் அரசியற்சதி நிகழ்ச்சித்திட்டத்தில் அப்பிரதேசமக்களிடம் இருந்து சைவநெறியை அந்நியமாக்கியமையே முதல் நிகழ்ச்சியாய் அமைந்தது கண்கூடாய் நடந்தேறிய வரலாறு! இன்று புத்தளப் பகுதியை தமிழரின் தாயகமாகக் கூறமுடியாத இக்கட்டானநிலை உருவாகிவிட்டது. சைவநெறி என்பது தமிழருக்கு தமிழ்மொழிமேல் பற்றை உருவாக்கும் காரணிகளில் ஒன்று என்பதை நன்குணர்ந்து சைவநெறியை தமிழரிடமிருந்து அந்நியப்படுத்தி தமிழ் கிருஷ்தவர்களாக மதம்மாற்றி;பின்னர் சிங்களக் கிருஷ்தவர்களாக அவர்களை வழிமாற்றி, சிங்கள பௌத்தர்களாக தடம்மாற்றிய நிகழ்ச்சி நிரலை செவ்வனே செய்தமை யாவரும் அறிந்த ஒன்றே!
இலங்கையில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டனரோ என்னவோ தெரியவில்லை.....மலேசியாவில் தமிழுணர்வை ஊட்ட சைவநெறியைப் பேணவேண்டிய அவசியத்தை மலேசிய தமிழறிஞர்கள் நன்கே உணர்ந்து செவ்வனே செயலாற்றி வருகின்றமை பாராட்டுக்குரியது. தமிழர்களால் போற்றுதற்குரியது.
மலேசியத் திருநாட்டில் சைவநெறி தழைத்தோங்க; பாரெல்லாம் பரந்துவாழும் சைவப் பெருமக்களின் தவப்பயனின் விளைவாக நடைபெறவுள்ள சைவ சித்தாந்த மாநாடும் பெரிய புராண விழாவும் சிறப்புற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
சைவ சித்தாந்த மாநாடுபெரிய புராண விழா பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு கீழே உள்ள மலேசிய சைவ நற்பணி மன்றத்தின் சொடுக்கியை சொடுக்குக.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
1 comments: on "சைவ சித்தாந்த மாநாடும் பெரிய புராண விழாவும்"
அருமையான தகவல்கள்! நன்றிகள்!
Post a Comment