"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, August 19, 2009

வீரமாமயில் ஏறும் வேலவா

இன்று தேரேறி வலம்வந்த நல்லூர் முருகப் பெருமானின் மேல் சித்தர் யோகர் சுவாமி பாடிய பாடல்கள் ஏராளம். அவற்றில் ஒன்றை இங்கு பதிவாக்கியுள்ளேன்.


எல்லாம் திருவருட் சம்மதம்

இராகம்- கரகரப்பிரியா
தாளம்- ரூபகம்

பல்லவி

வீர மாமயில் ஏறும் வேலவ-விளங்குங்
கௌரி பாலகா- வா

அநுபல்லவி

கானக் குறத்தி மகிழும் பாதா - காக்கும்
கடவுள் துதிக்கும் நாதா (வீர)

சரணம்

எனக்கும் உனக்கும் பேத மேனோ
எடுத்துச் சொன்னால் போதம் போமோ
மணக்குஞ் சோலை நல்லூர் வாசா
வணங்கும் யோக சுவாமி நேசா (வீர)

இன்று நடைபெற்ற தேர்த் திருவிழா நிழற்படங்களை கீழே உள்ள சுட்டியை அழுத்துவன் மூலம் கண்டு இறையின்பம் நுகரலாம்.Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "வீரமாமயில் ஏறும் வேலவா"

Post a Comment