அம்மையே அப்பா
ஒப்பிலா மணியே
சிவமெனும் பொருளே
செவ்வொளி வடிவே
ஆடிடும் கூத்தனே
இனிய செந்தமிழே
தென்னாடு உடையவனே
திராவிட நாயகனே
ஆதியும் அந்தமும்
இல்லா அரும்பெரும்
சோதியே
ஆலமுண்டு அமரர்க்கு
அமுதீந்த இறையே
மாலுக்கு ஆழியை
மகிழ்ந்தளித்தவனே
பாலுக்கு பாற்கடல்
பரிந்தளித்தவனே
காலமெல்லாம் நம்மைக்
காத்திடும் இறையே
சொல்லுக்குள் அடங்காத
சிவமே
அடியார் குறை
தீர்க்கும் வள்ளலே
பால்நினைந் தூட்டும்
தாயினும் சாலப்
பரிந்து அருள்மழை
பொழிபவனே
எல்லா உலகமும்
ஆனவனே
உலகுக்கு ஒருவனாய்
நிற்பவனே
ஓசை ஒலியெலாம்
ஆனவனே
சிவபூமிப் பெருமானே,
நாம் வாடுகின்றோமே!
வாடின பயிரைக்
காணும்போதெல்லாம் வாடுவது
உமதடியவர் இயல்பல்லவா?
நாம் வாடுவது
முறையாகுமா?
தமிழ் வாடினால்
அழகாகுமா?
அருந்துணையே,
அடியாரின் அல்லல்
தீர்த்தருளும் தமிழரசே,
எமது துயரைக்
கேளுமைய்யா?
பில்லி சூனியப்
பெரும்பகைகள்
வல்ல பூதம்
வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்துகிற
அடங்கா முனிகள்
பிள்ளைகள் தின்னும்
புழக்கடை முனிகள்
கொள்ளிவாய்ப் பேய்கள்
குறளைப் பேய்கள்
பெண்களைத் தொடரும்
பிரம்ம ராட்சதர்கள்
இரசி காட்டேரி
இத்துன்பச் சேனைகள்
விட்டாங் காரர்கள்
மிகுபல பேய்கள்
தண்டியக் காரர்கள்
சண்டாளர்கள் ஆரியப்
பேய்கள்..................
எங்கள்
சிவபூமியில் பகையாய்
நின்று எம்முறவுகளை
வாட்டுகின்றனவே!
இறைவா,
எல்லாம் வல்ல
சிவப் பரம்பொருளே,
எங்கள் உறவுகள்
வாடுவது எம்முயிர்க்
குழையையே வாட்டுகின்றதே!
இன்னே வந்து'
எம்முறவுகளைக் காத்திடும்
ஐயா!
இம்மையே உம்மைச்
சிக்கெனப் பிடித்துவிட்டோம்
மண்ணில் நல்லவண்ணம்
வாழ வழி
தாருமையா
இன்பமே சூழ
எல்லோரும் வாழ
தென்னாடுடைய சிவனே
எந்நாட்டவர்க்கும் இறைவனே
திருவருள் பொழியும்
ஐயா!
3 comments: on "ஐயனே சிவனே,எம் மக்களைக் காப்பாற்றும்"
எங்கள்
சிவபூமியில் பகையாய்
நின்று எம்முறவுகளை
வாட்டுகின்றனவே!
wonderful tough
\\ஆரியப்
பேய்கள்..................\\
இது மட்டும் கலர்வேறு.ஏன்? முக்கியப்படுத்தவா?
சைவம் இதைத்தான் முக்கியப்படுத்துகிறதா
வாழ்த்துக்கள்..
aariya peeikal tha engalai kollukindranavee
Post a Comment