தீபாவளித் திருநாளுக்கு பல்வேறு காரணங்களை பல்வேறு பகுதிகளில் பாரதத்திருநாடு எங்கும் கூறுவர். வடநாட்டின் பலபகுதிகளில் இராமனின் முடிசூட்டுவிழாவாகவும் இராவணனைக் கொன்ற நாளாகவும் இராமன் மீண்டும் அயோத்திக்கு வருகைதந்த நாளாகவும் கருதிக் கொண்டாடுவர். தமிழ்நாட்டில் கண்ணபிரான் நரகாசூரனை பூமாதேவியினூடாக வதைத்த நாளாகக் கொண்டாடுவர். இதனை கருப்புச்சட்டைக்காரர்கள் திராவிடனை ஆரியன் கொன்ற நாளென்று மோட்டுத்தனத்தில் உழறுவர்!
கருப்புக் கண்ணன் ஆரியனாக இருக்க வாய்ப்பேயில்லை என்ற பொதுவறிவுகூட இல்லாத மோட்டுத்தனத்துள் மூழ்கியுள்ளது கருப்புச்சட்டை அரசியல்! வடநாட்டில் பிறந்தவரெல்லாம் ஆரியர் என்றால் சிந்துநதிப்பள்ளத்தாக்கில் வாழ்த்தவர் தமிழர் என்று சொல்வதில் என்ன நீதி? இன்றும் வடநாடெங்கும் ஆதிகுடிமக்களின் மொழி திராவிடமொழிக்குடும்பத்தை சார்ந்ததாகவே உள்ளதென்ற நீதியை எங்கனம் மறைக்கமுடியும்? ஆக; கருப்புச்சட்டை அணிந்து கருப்பனையே கேவலப்படுத்துகின்ற இழிவான அரசியல் செய்வதிலும் பார்க்க அம்மணமாக நிற்கலாம்!!!
அது சரி....தீபாவளிக்கும் பெண்ணியத்துக்கும் என்ன சம்பந்தம்?
தீபாவளிக்கு கண்ணபிரான் கதையை பிரபல்யப்படுத்தியது ஒருவகையில் இந்த கருப்புச்சட்டைக்காரர்தான்! ஆரிய-திராவிட அரசியலுக்கு உதவும் என்பதால்த்தான் அப்படியொரு பிரபல்யத்தை கண்ணபிரான் கதைக்குக் கொடுத்தனர்!!! தமிழர் அறிவற்றவர் என்றனர்! நமக்கும் ஐயம் ஏற்படலாயிற்று!!!
சிவபெருமானின் இடப்பாகத்தை உமையம்மை பெற்ற திருநாளே தீபாவளித்திருநாள்!!! இவ்வண்ணமே பண்டுதொட்டு தமிழர் கொண்டாடினர்! பெண்ணியத்தின் பெருமை பேசும்படியான நற்திருநாளாக தீபாவளியைத் தமிழர் கொண்டாடினர் என்ற வரலாற்றையே தமிழர் மறக்கலாயிற்றனர்! தமிழருக்கு மறக்கச்சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன?
பெண்ணியம் என்றவுடன் இன்னொரு செய்தி !!!
நேற்று சின்னத்திரை நாடகம் ஒன்றை எதேற்சையாக பார்க்க வேண்டியேற்பட்டது! பல பெண்கள் தொலைக்காட்சிப்பெட்டியைச் சூழ இருந்து "அவள் படுபாவி" என்றெல்லாம் கடிந்துகொட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தனர்! ஒரு காட்சியில் நடிகை "பெண்களுக்கு எங்கு சுதந்திரம் உண்டு" என்று கூற நம் பெண்களும் உண்மைதான் என்று தலையாட்டினர்!!! நாட்டில் நடக்கும் செய்தியைக்கூட கேட்காது நாடகத்திற்காய் தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மூழ்கியிருந்தால் எப்படி பெண்களுக்கு சமவுரிமையும் சுதந்திரமும் கிடைக்கும்? சின்னத்திரைக்குள் வீழ்ந்திருப்பவர்கள் சிந்திக்க!!!
எல்லோருக்கும் தீவாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
மாதொருபாகனின் திருவருள் எல்லோருக்கும் வாய்ப்பதாகுக!

0 comments: on "தீபாவளியும் கருப்புச்சட்டை அரசியலும் பெண்ணியமும் சின்னத்திரையும்!"
Post a Comment