"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
என்ற திருமூலர் நாயனாரால் சிவபூமி என்று சிறப்பிக்கப்பட்ட திருநாடு ஈழவள பொன்னாடாகும். சிவவழிபாட்டை தொன்றுதொட்டு சிறப்பாக பேணிவருகின்ற திருப்பயனால் சிவபூமி என்று ஈழநாட்டை சிறப்பித்தார்...
சைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக